படத்த பாருங்க கமெண்ட போடுங்க..,

>> Saturday, June 26, 2010

   எனக்கு மெயிலில் வந்த சில படங்களை பதிவிட்டுள்ளேன் ..,  அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றுவதை கமெண்டுங்கள்...,
படம் ஒன்னு:-


படம் ரெண்டு:-
 படம் மூணு:-
படம் நாலு:-

Read more...

செம்மொழி மாநாட்டில் பரிசு வாங்குவது எப்படி???

>> Saturday, June 19, 2010

செம்மொழி மாநாட்டுல கவித போட்டி வைக்குராங்கலாம் நமக்கு தான் கவித எழுத வராதே சரி அதனால உங்களுக்கு கவிதை எழுதுவது எப்படி என்ற பாடத்தை மட்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளேன்...,


•முதலில் எதாவது உண்மையான கவிஞரின் கவிதையை ஒரு மணி நேரம் படிக்கவும்.


•கொஞ்சம் நேரம் படுத்து தூங்கவும் .

•எழுந்த பிறகு எந்த கவிதையெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ அதெற்கெல்லாம் பத்தாவது பிள்ளை போல் விளக்கம் எழுதவும்.

•பிறகு கண்ணை மூடி கொள்ளவும் .

•இது தான் முக்கியமான கட்டம் மூடிய கண்ணை திறக்காமல் அந்த விளக்க கட்டுரையில் மௌஸில் ஒரு கிளிக் அப்புறம் என்ட்டர் பட்டனை ஒரு கிளிக்.இதை 15 நிமிடத்திற்கு செய்யவும்.

•கண்ணை திறந்து பார்க்கவும் எந்த வரியிலாவது நாலு வார்த்தைக்கு மேல் இருந்தால் அதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உடைக்கவும்.

•ஒரு முறை படித்து பார்க்கவும் எந்த வார்த்தையாவது புரிந்தால் அந்த  வார்த்தைகளை உடனடியாய் யோசனை இன்றி அழிக்கவும்.

•இதோ ஒரு சூடான கவிதை ரெடி..,



டிஸ்கி  1 .௦0 :- ௧விதையில் பின் நவீனத்துவம் தான் இப்ப பேமஸ் ஆகவே உங்கள் விதையில் பின் நவீனத்துவத்தை புகுத்தவும். அது என்ன என்று தெரியாதவர்கள் தெரிந்த கெட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளவும்  ..,பின் நவீனத்துவத்தில் முதல் கட்டுடைத்தல் இது தான் கவிதை எழுத பேனாவோ பேப்பரோ எடுக்க கூடாது.., கணினி மட்டுமே பயன் படுத்தவும்.

டிஸ்கி 1 .1 :- இது ஒரு மீள் பதிவு சில மாற்றங்களுடன் ..., அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும்...,

பின் குறிப்பு:- கணிணியில் என்ட்டர் பட்டன் சரியாய் வேலை செய்கிறதா என்பதை இரண்டு முறை சரி பார்க்கவும்..,
.
.

Read more...

இரு மொக்கைகள்

>> Wednesday, June 09, 2010

சுற்றம் பார்த்து
சூழ்நிலை பார்த்து
கொஞ்சம் சுதாரித்து
குனிவதற்குள் பறந்து
விட்டது அந்த
நூறு ரூபாய்..



காற்று
காதல்
கற்பு
காமம்
இந்த வரிசையில்
இன்னொரு சேர்க்கை
தொலைந்து போன காலணி..

.
.

Read more...

சாறல் அடிக்கும் வெயில் காலம்..,

>> Saturday, June 05, 2010

என்றோ காய்ந்த
பேனா மையின் பிம்பங்களாய்
மிச்சம் இருக்கின்றன
அந்த கடிதங்கள்..,

கிழித்து வீசவோ
தூக்கி எறியவோ
முடியவில்லை தவறுத்தான்
என்ன செய்ய
காலாவதி ஆகும்
நாளென்று ஒன்று இல்லாததால்
காப்பாற்றியே வைத்திருக்கிறேன்
அந்த படிமங்களை..,

கார்காலம் முடிந்து
கடும் வெயில் அடிக்கும்
போதும் கனவுக்குள்
சாறல் அடிக்கிறதே..,
.
.

Read more...

அடிக்க பாய்ந்த போது..,

>> Wednesday, June 02, 2010

நீ
போய் வந்த இடங்களில்
இலைகள் கூட உதிர்வதில்லையாம்
அது ஒர் புரட்டு செய்தி என்கிறான்
ஓர் பொய்யன்..,
இன்னும் பொய் சொல்லுவேன்
என அடுக்கியப்படி இருந்தான் அத்தனையையும்..,
என் உடலுக்கும் உள்ளத்துக்கும்
வெகுத்தொலைவில் அவளென்றான்..,
அவளின் வெட்க்கமும் அந்த

வியர்வை வாசமும் பொது சொத்து என உளறினான்
நான் அலறினேன்...,

எனக்கவளால் தரப்பட்டதும்
தாரை வார்க்கப்பட்டதும் அவனும்
அடைந்ததாய் சொல்லி முடிப்பதற்க்குள்
அடிக்க பாய்ந்தேன்
அவிழ்ந்த வேட்டியை அழுத்தி
பிடித்ததால் முடியவில்லை...,
.
.

Read more...
Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP