வணக்கம் அன்பு நண்பர்களே,
இத்தனை நாள் வேலை தேடும் படலம் காரணமாக லீவு விடப்பட்டு இருந்த பேநா மூடி இன்று மீண்டும் திறக்க படுகிறது என்பதை டைப்புகையில் கைமுடிகள் எழுந்து நிற்கின்றன..., அம்புட்டும் சந்தோஷம் தான்.. தற்போது சென்னையில் ஒரு உருப்படியான வேலையில் சேர்ந்து விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் வேளையில் இது நாள் வரையில் எனக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்ததோடு மட்டும் அல்லாமல் வேலைக்கான முயற்ச்சியையும் மேற்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.., நன்றி.., நன்றி...,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
தற்போது நானும் சென்னைவாசி ஆகிவிட்டதால் சீனியர் சென்னைவாசிகளிடம் ஒரு டவுட்டு.., பார்க் ஸ்டேஷன்-ல் இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் செல்லும் சப்-வேயில் அனைவரும் மிகச்சரியாக போகும் வழி என்ற போர்டு இருக்கும் வழியில் வருகிறார்கள் வரும் வழி என்ற போர்டு இருக்கும் வழியில் போகிறார்கள் .., ஏன் இப்படி... ஒரு டவுட்டு தான் ஆரும் டெரர் ஆகா வேணாம்..,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
மார்ச் 27-ம் தேதி நடந்த பதிவர் சந்திப்புக்கு போய்இருந்தேன்.நண்பர்கள் சிவாஜி சங்கர் மற்றும் இந்திராகி சரவணன் வழி சொல்லி வாசலில் நின்று அழைத்து சென்றனர்.., அன்னிக்கு ஒரு interview இருந்ததால கொஞ்சம் லேட்டா தான் போனேன்., எவ்ளோ லேட்டுனா நா உள்ள நுழைவதற்கும் "we are going to finish with this" என்று நர்சிம் அவர்கள் சொல்வதற்கும் சரியாக இருந்தது... ஹி ஹி ..,ஆனாலும் கார்க்கி,சங்கர்,வெண்ணிற இரவுகள் கார்த்திக், D.R.அசோக்,மணிஜி,ஸ்ரீ,மயில்ராவணன்,அதிஷா ஆகிய பதிவர்களிடம் அறிமுகம் நடந்தது .., பெயர் சொன்னதும் அனைவருக்கும் தெரிந்தது ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது...,
---------------------------------------------------------------------------------------------------------------------------------
முன்பு போல் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவெல்லாம் போட முடியாது என்றாலும் அவ்வப்போது எழுதி ரசிகர்களின் உள்ளம் உவகை அடைய செய்வேன் [யாருப்பா அங்க அருவாள எடுக்குறது ] .., எனவே முன்னால படிச்சிட்டு இருந்தவங்க தொடர்ந்து வாங்க புதுசா படிப்பவர்களும் தொடர்ந்து வாங்க ... நீங்க வந்தா மட்டும் போதும்..., நீங்க வந்தா மட்டும் போதும்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்த மூன்று மாத லீவில் ஏதும் எழுதாத போதும் சேர்ந்த 13 பாலோயர்களுக்கும் பிச்சிக்கிட்டு போன ரெண்டு பாலோயர்களுக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கின்றேன்...,
டிஸ்கி : அப்புறம் ஒரே ஒரு குத்து வசனம் " இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம் " டென்சன் ஆகாதிங்க ஹி..ஹி..
.
Read more...