விடைப்பெறுகிறேன் நண்பர்களே...!!!
>> Saturday, February 27, 2010
மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே கல்லூரிக்கு அவுங்க வந்தாங்க.., இந்தா புடி அப்டின்னு ஒரு வேலையும் குடுத்தாங்க.., படிப்பு முடிஞ்சு ஒரு மாசத்துல வந்துடனும் அப்டின்னு உரிமையா சொல்லிட்டு போனாங்க..,
கடைசி பரிட்சைக்கு முதல் நாள் அந்த ஓலை வந்துச்சு.., படிச்ச ஒடனே நீங்க ஒண்ணும் வேலைக்கு வர வேண்டான் நாங்க சொல்லி அனுப்புவோம் அப்போ வந்தா போதும் அப்புடின்னாங்க.., ஏன்னு கேட்டா தொழில் மொடக்கம் அப்புடின்னாங்க.., மொடக்கம் தீர்ந்தோன்ன கூப்பிடுவோம் அப்புடின்னாங்க.., கூப்பிட்டுருவிங்களா ??? கண்டிப்பா ......,
வீட்ல சும்மா தான இருக்க அப்டின்னு சொந்த காரங்க கல்யாணம் , காது குத்துக்கெல்லாம் வீட்ல அனுப்பி வைச்சாங்க..,அங்க போன இன்னும் வீட்ல தான் இருக்கியளான்னு சிரிச்சுட்டே கேக்க ஆரம்பிசிட்டாங்க.,டீ குடிக்க கடைக்கு போனாலும் , ஊருக்கு போக பஸ்க்கு நின்னாலும் இதே கேள்வி தான் ..,
என்ன செய்யலாம்.., மறுபடியும் அவுங்கள்ட்ட கேட்டேன் எப்போ கூப்புடுவிங்க...,சீக்கிரமா அப்புடின்னாங்க.., அங்க வேல பாக்குற சீனியர் கிட்ட கேட்டா நம்புங்க கூப்பிடுவாங்க அப்புடின்னாங்க.., அது வரைக்கும் டீ கடைக்கும் , கல்யாண வீட்டுக்கும் போகாமையா இருக்க முடியும்..,அப்புடி தான் இந்த வேலைக்கு வந்தேன்., மெயில் அனுப்பனும் அவ்வளவு தான் வேல.., மெயில் அனுப்பிட்டு சும்மா இருக்குற நேரத்துல அறிமுகமானது தான் தான் இந்த பதிவுலகம் வாசிக்க ஆரம்பிச்சது இங்க தான் .., உலக சினிமா அறிமுகமானதும் இங்க தான்.., இதையெல்லாம் விட முக்கியமானது நண்பர்கள் .., என்னுடைய 22 வருட வாழ்க்கையில் இரண்டு நாட்களை மட்டுமே தமிழக எல்லைக்கு அப்பால் கழித்துள்ளேன் ஆனால் உலகின் வெவ்வேறு மூலைகளில் கூட என்னை தெரிந்தவர்கள் இருக்கிறார்கள்..,இதை விட மகிழ்ச்சி தருவது வேறெதும் இல்லை எனலாம்..,
இப்போ மறுபடியும் அவுங்கள்ட்ட கேட்டேன் எப்போ கூப்புடுவிங்க..., இப்பவும் சொன்னாங்க சீக்கிரமா அப்புடின்னு.., முன்னால கேட்ட அதே சீனியர்கிட்டலாம் கேட்டேன் ஆனா இப்போ அவுங்க மாத்தி சொன்னாங்க "இதயே நம்பாத .., வேற வேல கிடைச்சா போய்டு " அப்புடின்னு..,அவுங்க சொல்ரதும் சரி தான் இன்னும் மூணு மாசத்துக்கு தான நாங்கெல்லாம் Fresher..,
ஆகவே.., இந்த மெயில் அனுப்பும் வேலையை ராஜினாமா செய்து விட்டேன்.., சென்னை வந்து வேலை தேட போகிறேன்..,சென்னையில் கல்லூரி நண்பர்களுடன் தங்குவது என்று முடிவு செய்தாகிவிட்டது யாருடன் என்று முடிவு செய்யவில்லை., அப்படி கூட தங்க போகும் நண்பனிடம் கணிணியும் இணையமும் இருந்தால் உடனே பதிவுலகத்துக்கு வருவேன் என்றும் இல்லையெனில் ஒரு வேலைக்கு சேர்ந்து அங்கே இணையம் பயன்படுத்தும் உரிமையும் வந்த பிறகோ இல்லையெனில் என்னுடைய சம்பாத்தியத்தில் லேப்-டாப்போ கணிணியோ வாங்கிய பிறகோ பதிவுலகத்துக்கு வருவேன் என்றும் தெரிவித்து கொள்கிறேன்..,
சிறிய அளவிலான வாசிப்பு அனுபவம் கூட இல்லாத என்னையும் 73 பேர் ஃபாலோ செய்கிறார்கள்..,அந்த அளவிற்க்காவது என்னை எழுத ஊக்கப்படுத்திய அண்ணண்களுக்கும் நண்பர்களுக்கும் நன்றி கூறிய படியே விடைப்பெறுகிறேன் விரைவில் திரும்புவேன் என்ற நம்பிக்கையோடு.....,
.
. Read more...







