தேவையா உலக நாயகன் பட்டம்?? - கமலுக்கு ஒரு கடிதம்

>> Thursday, January 21, 2010


அன்புள்ள கமல் ஹாசன் அவர்களுக்கு ..,
            தமிழ் திரையுலகில் உள்ள நாயகர்களுள் வித்தியாசமானவர் நீங்கள் .., தன்னுடய ரசிகர்கள் வெறும் விசிலடிச்சான்குஞ்சுகளாக இருக்க வேண்டும் என்று எப்போதுமே நீங்கள் விரும்பியதில்லை. உங்கள் பிறந்தநாளன்று  உங்களுக்கு பாலபிஷேகமோ பீராபிஷேகமோ உங்கள் ரசிகர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்காமல் நல திட்ட உதவிகளும் இரத்த தான முகாம்களும் நடத்த வைத்தவர்.
     
              உங்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் எந்த மேடை ஏறினாலும் சுத்த தமிழை மட்டுமே பேசுபவர்.என்னுடைய முகத்தை நான் தினமும் கண்ணாடியில் பார்க்கிறேன் என்னால் இனிமேல் கல்லூரிக்கு போய் சைட் அடிக்கும் படி எல்லாம் நடிக்க முடியாது என்று தைரியமாக உடைத்து கூறியவர் நீங்கள்.

            முதன்முதலில் உடல்தானம் செய்த நடிகர் நீங்கள் தான் நீங்கள் செய்ததோடு மட்டும் நில்லாமல் ரசிகர்களையும் செய்யும் படி தூண்டியவர் நீங்கள்.ஆஸ்பத்திரியில் அம்மணமாக வைத்து இருப்பார்களே என்று சிலர் பழித்த போது அப்படி தானே பிறந்தோம் என்று அழுத்தமாக பதில் சொன்னவர் நீங்கள். ரசிகர் மன்றஙகளை நற்பணி மன்றங்களாக முதல் முறையாக மாற்றி உங்களுடைய சமூக பொறுப்பை காட்டினீர்கள்.
      
           பணத்திற்காக என்று இல்லாமல் வாக்கு அளிப்பதன் மற்றும் வரி கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் எய்ட்ஸ் விழிப்புண்ர்வு ஏற்படுத்துவதற்காகவும் விளம்பரத்தில் தோன்றி மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக விளங்குபவர்.தனக்கு கிடைக்காத்து மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் சினிமா கனவோடு அலையும் இளைஞர்களுக்கு ப்யிற்சி பட்டறை நடத்தி  அவர்களுக்கும் சினிமா பற்றிய புரிதலை ஏற்படுத்தியவர் நீங்கள்.

           இது எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்வதற்க்காக நீண்ட நாட்களாக போராடி வருபவர்.இன்று வித்தியாசமாக படமெடுப்போர் அனைவரும் நீங்கள் கஷ்ட பட்டு போட்ட சாலையில் சுகமாக நடந்து வந்தவர்களே..,

           இத்தனை விஷயங்களை முற்போக்காக யோசித்து செய்த உங்களுக்கு கலைஞானி , உலக நாயகன் போன்ற பட்டங்கள் நகைப்புக்குறியதாக இல்லையா..,நீங்கள் உலக நாயகனாக இருந்தால் அப்படி பட்ட பெயர் வைத்து கொள்வதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமே ஆனால் நீங்கள் உலக நாயகனாக இருந்திருந்தால் உங்களை கனடா விமான நிலையத்தில் வைத்து ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக விசாரணை நடத்தி இருக்க மாட்டார்களே..,  உங்களை பார்த்து நடிப்பதாக சொல்லும் சூர்யா , விக்ரம் போன்ற நடிகர்கள் பட்டங்கள் ஏதும் வேண்டாம் என்று பட்டங்கள் இல்லாமலே நடித்து வருகின்றனர் அவர்கள் வரிசையில் அஜித்தும் சேர்ந்து விட்டார்.

           ஆகவே இனியும் தாமதிக்காமல் உலக நாயகன் பட்டத்தை துறந்து அரசாங்கம் கொடுத்த பட்டமான பத்ம ஸ்ரீ கமல் ஹாசனாகவே தொடருங்கள்.அப்படி செய்வதன் மூலம் இளைய , புரட்சி , சின்ன , குட்டி , நெட்டை , எழுச்சி , வீர ,சிகப்பு , பச்சை ஆகிய தளபதிகளுக்கும் லிட்டில் , யங் , மங் , சங் சூப்பர் ஸ்டார்களுக்கும்  முன்னுதாரணமாக விளங்குமாறு கேட்டு கொள்கிறோம்...,

இப்படிக்கு..,
ஒரு ரசிகன்...,
            .
            .

Read more...

ஆயிரத்தில் ஒருவன் VS TROY

>> Wednesday, January 20, 2010


    
     நண்பர் இரும்புத்திரை அரவிந்த் ஆயிரத்தில்  ஒருவன்  திரைப்படத்தில் சோழர்களையும் பாண்டியர்களையும் கேவலப்படுத்தி விட்டதாகவும் ட்ராய் படத்தில் கிரேக்கர்களின் வரலாற்றை கொஞ்சம் மாற்றினாலும்  சிறப்பாக எடுத்து இருந்ததாகவும் சிலாகித்து இருந்தார்..., வழக்கமாகவே கிரேக்க வரலாற்றை படமாக எடுக்கிறேன் பேர்வழி என்று அதை ஹாலிவுட் மசாலாவுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்வார்கள். ஆனால் ட்ராய் படத்தில் படு மோசம் எனக்கு தெரிந்து(கொஞ்சம் படம் தானுங்கோ பாத்து இருக்கேன் ) வரலாற்றை முற்றிலுமாக மாற்றி எடுக்க பட்ட திரைப்படம் ட்ராய் தான்...,

      முதல் தவறு இந்த போர் மனிதர்களுக்குள் நடக்கும் போராகவே படத்தில் காட்டப்பட்டு இருக்கும் ஆனால் இதிகாச  கதையில்  ஜீயஸ் , அப்போல்லோ , பொசைடன் ,ஏதனா ஆகிய கிரேக்க கடவுள்கள் நேரடியாக பங்கு பெற்றதாக சொல்லப்படுகிறது...,

        அப்புறம் ஸ்பார்ட்டா-ல துறைமுகமே கிடையாது படத்துல இருக்கும் ..,

         அப்புறம் படத்துல போர் ரெண்டு மூணு வாரத்துல முடிஞ்சிடும் ஆனா இதிகாச  கதையில் அது பத்து வருஷம்  நடந்தது...,

         போருக்கு பின்பு பாரிசும் ஹெலனும் சேர்ந்து வாழ்ந்ததாக படத்தில் காட்டப்படும் ஆனா இதிகாச  கதையில் போரின் முடிவில் பாரிஸ் ஹெலனின் கணவனான மநிலஸ் கையால் கொலை செய்யப்பட்டு இறந்து போவன்.., ஹெலன் அவன் கணவனோடு சென்று விடுவாள்..,
       
           படத்தில் அக்கிலிஸின் cousin மற்றும் மாணவர்  என அடையாளம் காட்டப்படும் பெற்றோகலஸ்  இதிகாச கதைப்படி அக்கிலிசை விட வயது மூத்தவர் மற்றும் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே எந்த சொந்தமும் கிடையாது....,

           பெற்றோகலஸ் அக்கிளிசுக்கு தெரியாமல் போருக்கு சென்று இறந்து போவதாக படத்தில் காட்டப்படும் ஆனால் இதிகாச கதைப்படி அக்கிலிஸ் தான் அவரை போருக்கு அனுப்பி வைப்பார் ...,

             ஹெக்டர் அக்கிலிஸ் உடன் நேருக்கு நேர் போர் செய்வதாக படத்தில் காட்டுவர் ஆனால் இதிகாச கதைப்படி அவர்  அக்கிலிசை பார்த்து பயந்து ஓடியதாகவும் அவர் துரத்தி சென்று கொலை செய்ததாகவும் இருக்கும்...,

              பெற்றோகலஸ் இறந்தவுடன் அவர் உடலை அடக்கம் செய்ததாக படத்தில் இருக்கும் ஆனால் இதிகாச கதைப்படி அக்கிலிஸ் ஹெக்டரை கொலை செய்து அவர் உடலை கொடுத்தே பெற்றோகலஸ் உடலை பெற்றார்...,

                அஜாக்சை ஹெக்டர் கொலை செய்ததாக படத்தில் இருக்கும்.., ஆனால்    இதிகாச கதைப்படி அவரை யாரும் கொலை செய்யவில்லை அக்கிலிஸ் இறந்த பிறகு அவருடைய கவசத்தை இவருக்கு கொடுக்காத விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்...,

                  அந்த குதிரையை பொசைடன் கடவுளுக்கு கொடுப்பதாக படத்தில் சொல்வார்கள் ஆனால் இதிகாச கதைப்படி அது ஏதனா கடவுளுக்காக உருவாக்கப்படும்...,

                 படத்தில் இறந்த போனவர்களின் கண்ணில் நாணயங்கள் வைத்து இருப்பது போல் கட்டுவார்கள் ஆனால் இதிகாச கதைப்படி அந்த போர் முடிந்து ஆறேழு நூற்றாண்டுக்கு பிறகு தான் நாணயங்கள் பயன்படுத்தும் வழக்கம் வந்தது...,

                  கிரேக்க மன்னன்  அங்கமேமொன் போரில் இறந்த போவதாக படத்தில் காட்டுவார்கள் ஆனால் இதிகாச கதைப்படி அவர் போரில் வென்று நாடு திரும்பி சில காலங்களுக்கு பின்னர் அவரது மனைவியால் கொலை செய்யப்பட்டார்...,

                    ட்ராய்-ன் அரசன் ப்ரைம்-ஐ கிரேக்க மன்னன் அங்கமேமொன் கொலை செய்வதாக படத்தில் கட்டுவார்கள் ஆனால் இதிகாச கதைப்படி அவர் அக்கிலிஸின் மகனால் கொலை செய்யப்பட்டார்..,

                     ட்ராய்-ன் வாள் என்று ஒன்றை செம சீனாக படத்தில்  கட்டுவார்கள்  ஆனால் இதிகாச கதைப்படி அப்படி எதுவுமே கிடையாது அதுவும் மசாலாவுக்காக சேர்க்க பட்ட பிட்டு...,

    இது வரலாற்று புனையு கூட கிடையாது .., வரலாற்று படம்.., ஹம்ம்..., ஆயிரத்தில் ஒருவனில் போடுவது போல் இதில் கற்பனை என்று கார்ட் கூட போட மாட்டார்கள்..., அரவிந்த் அவர்களே நீங்கள் சொல்வது போல் இதில் ஏதாவது  குறுநில மன்னரின் பெயரை பயன் படுத்தி இருக்க வேண்டியது தானே..., கிரேக்கர்கள்  வந்து கேட்க மாட்டார்கள் என்ற திமிர் தானே ஹாலிவுட் காரர்களுக்கு...,

  

Read more...

எனக்கு எப்போ நோபல் பரிசு குடுப்பாங்க ???

        பொங்கலுக்கு தேமே என்று தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ தான் தடார்னு ஒரு ஐடியா ஒரு ஆராய்ச்சி பண்ணி நோபல் பரிசு வாங்கிட்டா என்ன அப்டின்னு தான்..., அன்னிக்கு நா டி.வில படம் பாத்துட்டே எடுத்த ஆராய்ச்சி குறிப்புகள உங்கள் முன்னால அள்ளி வீசுறேன் அப்படியே படிச்சு பாத்துட்டு நீங்களும் நோபல் கமிட்டிக்கு ஒரு ஓலை அனுப்பிடுங்க....,



ஆராய்ச்சி 1 :-
               சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல  எல்லாருமே லேன்ட் லைன்  தான் பயன் படுத்துறாங்க Except   பானிபூரி வியாபாரியிடம் ஒரு காட்சியிலும் M.S.பாஸ்கர் ஒரு காட்சியிலும் செல் போன் வைத்து இருப்பார்கள்   ..., படம் 2008 -ல வந்துச்சு அப்போ என்கிட்டையே செல் இருந்துச்சே பெரிய தொழிலதிபரான பிரகாஷ் ராஜ் கிட்ட இல்லையா ஹம்ம்...,  சரி டைரக்டர் ராஜா கிட்ட கேக்கலாம்னா அவர் பொம்மரிலு டி.வி.டியை குடுத்துட்டு போய்ட்டார் .., அதை போட்டு பாத்தா  அட அதுலயும் அப்டித்தான் ஒரு வேள இது ரொம்ப பழைய படமான்னு பாத்தா அதும் 2006 -ல வந்து இருக்கு அப்பவும் செல் போன் இல்லையா...அவர் உதவி இயக்குனரா இருந்தபோ உருவாக்குன கதைய மாத்தாம எடுத்துடரோ ???


ஆராய்ச்சி 2 :-
             ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆரம்பத்தில் ஒரு கூத்து ஆடுகின்றனர் அது தஞ்சையில் ஆடுவதாக காட்டப்படுகிறது ஆனால் இத்தனை ஆண்டுகளில் தஞ்சையில் நான் பார்த்த கூத்துகளுக்கும் அதற்க்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தன..,நான் சிவகங்கை பக்கத்தில் ஒரு கோவிலுக்கு போய் இருந்த போது அந்த வகை கூத்தை பார்த்து இருக்கிறேன்.., அந்த வகையான கூத்து தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் உண்டா ??? 

             
ஆராய்ச்சி 3 :- [ நோபல் பரிசை எதிர் பார்க்கும் ஆராய்ச்சி இது தான் ]
         ஈரம் படத்தை மறுபடியும் பார்த்தேன் [ எங்க ஊரு கேபிள் டி.வில போட்டாங்க ] . அதில் ஒரு காட்சி சிந்து மேனன் நாயகன் ஆதிக்கு  ஆப் பாயில் போட்டு கொடுப்பார் அவர் சாபிட்டு விட்டு நல்ல இருக்குனு certificate வேற குடுப்பார்... ஆனா அந்த காட்சியில் சிந்து மேனன் முட்டையை உடைத்து தோசை கல்லில் போடும் போதே அதன் மஞ்சள் கரு உடைந்து விடும் [படத்தில் கவனிக்க ] . மஞ்சள் கரு உடைந்தால் ஆப் பாயில் ஒழுங்கா வராது என்பது  ஆப் பாயில் சாப்பிடும் அகில உலகமும் அறிந்ததே .., அப்படி இருக்க அடுத்த காட்சியில் எப்படி ஒரு அழகான ஆப் பாயிலை தட்டில் வைத்து எப்படி கொண்டு வந்தார்??? இதில் எங்காவது லாஜிக் இருக்கிறதா ????

டிஸ்கி :- இப்புடி ஒரே பதிவுல மூணு ஆராய்ச்சிய பண்ணி இருக்கேனே  எனக்கு எப்போ நோபல் பரிசு குடுப்பாங்க ??? [ அப்பாடி தலைப்பு வந்துட்டு .., ]
.
.

Read more...

ஆயிரத்தில் கொஞ்சம் பேர்...,

>> Tuesday, January 19, 2010


       
       செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் நேற்று தான் பார்த்தேன்.முதல் நாளே பார்த்து இருக்கலாம் என்று தோன்றியது காரணம் நிறைய வெட்டி விட்டார்கள். இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் தான் ஓடியது ஆகா மொத்தமாக இரண்டரை மணிநேரம் மட்டுமே..,கதை என்ன வென்று கூறி இப்போ நா விமர்சனம் எல்லாம் பண்ண போறது இல்லை ஏற்கனவே எல்லாரும் பண்ணிட்டாங்க...,வலைப்பூவில் நிறைய பேர் கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க ஆமா..! அவ்வளவு மோசமான  படமா இது ????
             இல்லை.., நிச்சயமாக இல்லை..., முதல் குற்றச்சாட்டு கார்த்தியை வீணடித்து விட்டார்கள் என்பது .., ஹீரோ என்றால் முன்னால் தான் வர வேண்டுமா ?? எல்லோரையும் அடிக்க வேண்டும் பெண்களிடம் அடி வாங்குபவனாக இருக்கா கூடாது அப்படி தானே.., பத்து பேர் வெட்ட வெட்ட வரும் போது குனிந்த முதல் ஹீரோ இவர் தான் எனக்கு தெரிந்து...,அடுத்து பார்த்திபன் .., யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஹாட்ஸ் ஆப் பார்த்திபன்..,  நிழலை வைத்து புணரும் போதும் , இயலாமையால் தற்கொலைக்கு முயலும் போதும் , சாவு நிச்சயம் என தெரிந்து கம்பீரமாக சிரிக்கும் போதும் தன்னுடைய நடிப்பின் எல்லையை பல கிலோமீட்டர் விஸ்தரிக்கிறார்...,
               முக்கியமாய் ரீமா, இரண்டு நாயகர்கள் இருக்கும் எந்த ஒரு படத்திலும் ஒரு நாயகிக்கு இப்படி ஒரு வெய்ட்டான கதாபாத்திரம் கொடுத்து இருக்க மாட்டார்கள். சிரிப்பது , முறைப்பது , சிரித்த உடன் முறைப்பது , தொடாமல் புணரப்படும் போது கொடுக்கும் முகபாவங்கள் , அனாசியமாய் துப்பாக்கியால் சுடுவது .., கலக்கல் தான்...,
               இந்த படத்தை செமி ப்ரோனோ என்று எழுதி இருக்கிறார் ஒரு அதி புத்திசாலி பதிவர் .., அப்போ அடிக்கடி நிர்வாணம் வரும் மெலினா போன்ற படங்கள் உங்களுக்கு ப்ரோனோ வகையை சேர்ந்ததா...
                 வரலாற்றை திரித்து விட்டார்கள் என்று அலறுபவர்களே இது வெறும் வரலாற்று புனைவு மட்டுமே.., உண்மை சம்பவம் அல்ல.., உண்மையான கிரேக்க வரலாற்றை படமாக எடுக்கிறேன் பேர்வழி என்று அதை சிதைப்பவர்களை நீங்கள் கண்டுகொண்டதில்லையே.., உதாரணமாக ட்ராய் படத்தை பார்த்து விட்டு அதன் வரலாற்றை படிக்கவும் அப்போது தெரியும் வரலாற்றிற்கும்  படத்திற்கும் உள்ள வித்யாசங்கள் அந்த படம் உங்களின் பலரின் விருப்ப படமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன் ..,
                 மேலே நான் ஹாலிவுட் படங்களை பற்றி சொல்லியது வெறும் உதாரணங்களுக்காக மட்டுமே  நம்மை விட பல வருட தூரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான்..., எனினும் அவர்களை தமிழ் சினிமாவோடு ஒப்பிடுவது நேற்று நடக்க தொடங்கிய குழந்தையை உசேன் போல்டின் வேகத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது போல் கேனத்தனமானது...,
              செல்வராகவனே மறுத்தாலும் கடைசி காட்சி ஈழ கொடுமையின் பிரதி பலிப்பு தான்..., எனக்கு தெரிந்து எந்த ஒரு தமிழ் படமும் போர் கைதிகளாக  வரும் பெண்களிடம் எப்படி ராணுவம் நடந்து "கொல்லும்"  என்று பதிவு செய்தது இல்லை.., ஒருவன் ஒரு பெண்ணின் சேலையை பிடித்தல் அவன் ஹீரோவாக இருந்தால் பாட்டு வரும் அவன் வில்லனாக இருந்தால் இழுத்து முடிவதற்குள் ஹீரோ வருவான் சண்டை வரும் எனக்கு தெரிந்து உண்மையில் எந்த ஹீரோவும் வருவது இல்லை..,  அந்த கொடுமையை அப்படியே படத்தில் பதிவு செய்து உள்ளார்..,யாரும் தொட அஞ்சிய விஷயத்தை  தொட்டு இருப்பற்காகவே ஒரு எக்ஸ்ட்ரா சல்யுட் ..,
                படத்தில் குறைகள் இருக்கின்றன குறிப்பாய் லாஜிக் மீறல்கள் இது படபிடிப்பில் உட்கார்ந்து கொண்டு எழுதியதால் வந்த வினை..,மெக்கனா'ஸ் கோல்ட் , 300 , கிலாடியட்டர், லாஸ்ட் சாமுராய் ஆகிய படங்களில் வந்த காட்சிகளை தழுவி காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தன. எனக்கு இது பெரிதாய் தோன்றவில்லை காரணம்  ஒரே படத்தில் ஏகப்பட்ட நல்ல  விசயத்தை செய்து உள்ளார் அதனால் இந்த விசயத்தை மட்டும் பிடித்து கொண்டு குறை சொல்ல எனக்கு மனசு வரவில்லை .., அப்புறம் எனக்கு தெரிந்து தமிழில் வெளி வந்த மிகப்ப்ரமாண்டமான படம் இது தான் ...,
               நான் தஞ்சை விஜயா தியேட்டரில் பார்த்தேன் .., முதல் பாதி நெடுகவும் கை தட்டல்கள் கேட்டு கொண்டே இருந்தன இரண்டாம் பாதியில்  அந்த அளவிற்கு இல்லை என்றாலும் பார்த்திபனின் "அஞ்சி விடுவோம் என்று எண்ணிநீரோ" என்ற கடைசி வசனத்திற்கும்  அரங்கமே  கை தட்டியது .., படம் நிறைய பேருக்கு பிடித்திருந்தது .., படம் நிச்சயமாய் வசூல்ரீதியாகவும் வெற்றி பெறும்..,ஆயிரத்தில் கொஞ்சம் பேருக்கு பிடிக்காமல் போனதால் எல்லாம் தோல்வி அடையாது..,
           செல்வராகவன் அவர்களே இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க போவதாக அறிவித்து உள்ளீர்கள் .., அந்த படதிற்க்காவது எழுதி முடித்த  பின் படபிடிப்பிற்க்கு செல்லவும்..,அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த படத்தை விட அது பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.., வாழ்த்துக்கள் மறுபடியும்..,

டிஸ்கி :- யாரவது திட்டனும்னா நாளைக்கு வந்து திட்டுங்க என்ன இன்னிக்கு திட்டு வாங்குனா  வருஷம் முழுசும் திட்டு வாங்க வேண்டியிருக்குமாம் அம்மா சொன்னங்க...,
.
.  
               
         

Read more...

எங்க ஊரு பொங்கச்சோறு..!!

>> Wednesday, January 13, 2010


   
    பொங்கல் என்பது எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு தெரியாது ஆனால்  விவசாயம் குறைந்து போன இந்த நாட்களில் திருப்பூர் பனியன் தொழிற்சாலைக்கும் மற்ற ஊர்களுக்கும் குடும்பம் குடும்பமாக வேலைக்கு சென்ற எங்கள் ஊர் மக்கள்  வருடத்தின் ஒரு முறையாவது  சொந்த ஊருக்கு வரும் நாளாகவே எனக்கு தெரிகிறது ..,
           மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகை .., எங்கள் ஊரில் யாரும் பழைய பொருட்களை  எரித்ததாக  ஞாபகம் இல்லை. சுமார் ஒரு மாதமாகவே நடந்து வரும் வீட்டை சுத்தப்படுத்துதல் மற்றும் வெள்ளை அல்லது வேறு வண்ணங்கள் அடித்தல் இன்றோடு முடிந்து விடும்..,இந்த நாளின் முக்கிய நிகழ்வே (சீர்)  வரிசை கொடுப்பது  தான். தங்கள் குடும்பத்து பெண்கள் வாழும் வீட்டுக்கெல்லாம் புதுப்பானை,அரிசி,கரும்பு, மஞ்சள் கொத்து,வாழைப்பழம்  போன்றவற்றுடன் வசதிக்கு தகுந்தார் போல் பணத்தையும் சேர்த்து கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது . நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகளே இதற்காக பயன்படுத்த பட்டது ஆனால் இப்போது அது வெகுவாக குறைந்து விட்டது பேருந்திலோ பைக்கிலோ போய் வரிசை குடுத்து விடுகிறார்கள்..
           தை முதல் நாள் சூரிய பொங்கல் .., இன்று பெரிய பரபரப்பு ஏதும்  இருக்காது. காலையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை காலையில்  மாட்டு வண்டி வைத்து இருப்பவர்கள் வயலுக்கு போய் களிமண் வெட்டி வருவார்கள் இல்லாதவர்கள் அவர்களிடம் வாங்கி கொள்வார்கள்..,  சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் வீட்டு வாசலில் மேற்கு திசையில் திட்டாணி போடப்படும் கிழக்கு திசையில் கோடு வெட்டப்படும்..கோடு என்பது மண் வெட்டியால் வெட்டப்படும் சிறு பள்ளம் அந்த பள்ளத்தின் மேல் மூன்று களிமண் உருண்டைகளை வைத்து அடுப்பு செய்வார்கள் அந்த அடுப்பில் தான் பொங்கல் வைக்க படும். இன்று இரண்டு அடுப்பு செய்வார்கள் ஒன்றில் சக்கரை பொங்கல் மற்றொன்றில் வெண்பொங்கல்.., திட்டாணி என்பது எங்கள் ஊரில் பயன்படுத்த படும் வழக்கு சொல் போன வருடம் எங்கள் வீட்டில் போடப்பட்ட திட்டாணி கீழே..,

   தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் ..,இன்று காலை கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் இட்லி செய்வார்கள் இது சிலருக்கு தினமும் நடக்கும் சாதாரண நிகழ்வாகவும் வேறு சிலருக்கு வருடத்தின் ஒரு நாள் மட்டுமே நடக்கும் சரித்திர நிகழ்வாகவும் இருக்கும்.காலை உணவு முடிந்ததும் ஊரில் ஆண்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஏனெனில் எந்த வீட்டிலும் மதியம் சமைக்க மாட்டார்கள் அப்படி இருந்து தான் தீருவேன்  என்று நீங்கள் அடம் பிடித்தால் மதியம் காலையில் சுட்ட இட்லி மட்டுமே சாப்பிட கிடைக்கும்.., ஆகையால் மாட்டிற்கு மாலை,கொம்பிற்கு பெயிண்ட் வாங்கவும் இரவு சமையலுக்கு தேவையான பொருட்கள்  வாங்கவும் புது படம் பார்க்கவும் துணி எடுக்காதவர்கள் புது துணி எடுக்கவும் என எல்லோரும் பட்டுகோட்டை சென்று விடுவார்கள்.
         ஒரு ஐந்து மணி வாக்கில் திடலுக்கு மாடுகளை ஓட்டி வருவார்கள் முதலில் ஐயர் வீட்டிலிருது மாடு வரும் பிறகு ஒவ்வொரு கரையாக ஏழு கரை மாடுகளும் திடலுக்கு வந்து சேரும் " ரொம்ப குறைஞ்சுட்டுல" , " எனக்கு கல்யாணம் ஆனா வருஷம் மேலத்தெரு முக்கு வரைக்கும் மாடு இருதுச்சு இப்போ என்னடான்னா தண்ணி டேங்க கூட தாண்டல " இதெல்லாம் வருடம் தவறாமல் கேட்க்கும் குரல்கள்.  அதன் பின்னர் அவை மாட்டு கொட்டகையில் கட்டப்படும். பிரண்டையை ஒன்றாக பிணைத்து தோரணம் போல ஒன்று தயார் செய்து மாட்டு கொட்டகை வாசலில் கட்டப்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் மிரத்தில் பூக்க கூடிய ஒரு வகை பூவை (பெயர் தெரிய வில்லை ) நாணலில் கட்டி மட்டுக்கு மாலை இடப்படும்.
          வீட்டிலேயே மாட்டு கொட்டகை உள்ளவர்கள் நேற்று போட்டா திட்டாணியில் சாணி மொழுகி பயன்ப்படுத்துவர் மற்றவர்கள் புதிதாக திட்டாணி போடுவார்கள். அதே போல் கோடு வெட்டி சக்கரை பொங்கல் மட்டும் வைப்பார்கள். அது முடிந்ததும் திட்டாணியில் இலை போட்டு  பொங்கல் கொட்டி அதனுடன் வாழைப்பழம் மற்றும் பால் கொண்டு  நன்றாக பிசைந்து அனைவருக்கும் கொடுப்பார்கள்.அவ்ளோ டேஸ்டா  இருக்கும் தெர்யுமா..,அதன் பிறகு மாட்டுக்கு பொங்கல் ஊட்ட படும்... பொங்கலோ பொங்கல் என்று சொல்லியபடி தாம்பாளத்தில் கரும்பால்  அடித்து கொண்டும் அடுப்பூதும் குழலில் சங்கு போல் வாயில் வைத்து ஊதி கொண்டும் சுத்தி வருவோம்..,
      தை மூன்றாம்  நாள் பெரிய பொங்கல்.., இன்று தான் முக்கியமான தினம் காலை எழுந்த உடன் மாட்டிற்கு அலங்காரம் நடக்கும் கொம்பிற்கு பெயிண்டும் polythene பேப்பர்-ல் செய்த மாலையும் போட படும் அவை இரண்டும் அவர்கள் எந்த கட்சியினர் என்பதை காட்டும் படி இருக்கும்.  இன்று தான் அனைவரும் புது ஆடை அணிவார்கள். இரண்டாம் நாள் மாலை சென்ற அதே திடலுக்கு அனைவரும் புத்தாடையோடு வருவார்கள் வேலை காரணமாக முதல் நாள் வரமுடியாதவர்கள் கூட இன்று வருவார்கள். நேற்று மாலை வந்த அதே வரிசையில் மாடுகள் வரும். அவைகள் அந்த திடலுக்கு வந்து சேர்வதற்கு முன்னரே அந்த polythene  மாலைகளை  அறுக்க ஒரு கூட்டம் காத்திருக்கும் அது தான் எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு.மாடுகள் அனைத்து வந்து அரைமணி நேரத்திற்கு  பிறகு மறுபடி அனைத்தும் திரும்ப ஓட்டி செல்லப்படும்..,அதன் பிறகு ஓட்டபந்தயம்,சாக்கு ஓட்டம் ,தவளை ஓட்டம் , முறுக்கு கவ்வுதல் , காலி பாட்டிலை நிரப்புதல் , அதி வேக சைக்கிள் பந்தயம் , மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி , பாட்டு போட்டி , மாறு வேட  போட்டி  என பலவகையான போட்டிகள் இரவு  வரை இனிதே நடந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சியோடு முடியும்.., திருப்பூர் தவிர மற்ற ஊர்களில் வேலை செய்வோர் அன்று இரவும் திருப்பூரில் வேலை செய்பவர்கள் அடுத்த நாள் இரவும் கிளம்புவார்கள் "சித்திரை திருவிழாவிற்கு லீவ் கிடைக்குமா என்ற கேள்வியோடு .....,,"

டிஸ்கி :- அனைவருக்கும் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்...,
.
.

Read more...

ஜவ்வாலக்கடி கிரி கிரி ஜோசியம் - 2010

>> Saturday, January 02, 2010


   
          இந்த ஆண்டு பிறந்து  விட்டது.., சென்ற ஆண்டின் சோகங்களும் துக்கமும் இந்த ஆண்டு குறைய வேண்டுமென்றும் இன்பமும் சந்தோசமும் இன்னும் அதிகரிக்க வேண்டும் என்றும் அனைவரும் எதிர் பார்ப்பது போலவே நானும் எதிர் பார்க்கிறேன்... ஆனால் அப்படி நடக்குமா என்று ஜவ்வாலக்கடி கிரி கிரி ஜோசியத்தை  பார்த்தால் எப்படி என்று தோன்றியது.., அதோ அது எப்படி பார்ப்பது என்ற வழி முறையும் விளைவுகளும்  ...,
 2010-ஐ இப்படியும் குறிக்கலாம்...,
(உத:-)2 + 0 + 1 +0 =????
இதிலிருந்து பத்தை கழிக்கவும்..,
(உத:-)10 - ???  =  XXX
வரும்  பதிலில்  இருந்து   இதை செய்யவும்...,
அதை செய்து முடித்தவுடன்
அதோடு உங்கள் பிறந்த தேதியையும் கூட்டிக்கொள்ளவும்..,
அதன் பிறகு வரும் பதிலில் இருந்து மூன்றை கழித்து விட்டு உங்கள் மூளையில் ஒரு மூலையில்  சேமிக்கவும்.., அதன் பிறகு நீங்கள் பிறந்த மாதத்தை இரண்டால் பெருக்கி மூன்றால் வகுத்து இருபத்தி இரண்டால் கூட்டி அதையும் உங்கள் மூளையில் இன்னொறு மூலையில் சேமிக்கவும்.., அதன் பிறகு நீங்கள் பிறந்த வருடத்தை தனியாக கூட்டி அதையும் பத்தால் கழித்து (முன்பு செய்ததை போலவே) வரும் பதிலை பாதியாக்கி முப்பத்தி  எழால் கூட்டவும் பிறகு வரும் பதில்களை உங்கள் மூளையில் இன்னொறு மூலை இருந்தாள் சேமிக்கவும் இல்லையெனில் ஒரு பேப்பர் எடுத்து அதன் மூளையில் எழுதிக்கொள்ளவும்..,
  தற்போது மூளையின் முதல் மூலையில் இருந்த பதிலையும் மூளையின் இன்னொறு மூலையில் இருந்த பதிலையும் பேப்பரில் மூலையில் ஒருந்த பதிலையும் கூட்டிக்கொள்ளவும்..,வரும் விடையை நாற்பத்தி ஒன்பதால் கூட்டி பிறகு மூன்றால் பெருக்கவும் பின்னர் பதினான்கை கழித்துக்கொள்ளவும்.., வரும் பதிலோடு உங்கள் விரல்களின் எண்ணிக்கையை கூட்டி நகங்களின் எண்ணிக்கையை கழித்தால் வரும் பதிலை எனக்கு அனுப்பி வைத்தால் உங்கள் பலன் அடுத்த பதிவில் வெளி இடப்படும் என்பதை ஜவ்வாலக்கடி சாமியார் மேல் சத்தியமாக அறிவிக்கிறேன்...,

டிஸ்கி:- இந்த ஜோசியதிற்க்கு தேவையான கணக்கு டியூஷன் எதுவும் கம்பெனி சார்பில் எடுக்க படாது என்பதுடன் இதை கணிப்பதால் வரும் தலைவலிக்கும் கண் வலிக்கும் மூளை வலிக்கும் வேறு என்ன வலிகள் எல்லாம் உண்டோ அத்தனை வலிகளுக்கும் எங்களுக்கும்  சம்பந்தம்  இல்லை என்பதையும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக அறிவிக்கப்படுகிறது..,
.
.

Read more...
Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP