நா திரும்ப வந்துட்டேன்... அதாவது I'm Back

>> Saturday, May 22, 2010

வணக்கம் அன்பு நண்பர்களே,

              இத்தனை நாள் வேலை தேடும் படலம் காரணமாக லீவு விடப்பட்டு இருந்த பேநா மூடி இன்று மீண்டும் திறக்க படுகிறது என்பதை டைப்புகையில் கைமுடிகள் எழுந்து நிற்கின்றன..., அம்புட்டும் சந்தோஷம் தான்.. தற்போது சென்னையில் ஒரு உருப்படியான வேலையில் சேர்ந்து விட்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கும் வேளையில் இது நாள் வரையில் எனக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளித்ததோடு மட்டும் அல்லாமல் வேலைக்கான  முயற்ச்சியையும் மேற்கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.., நன்றி.., நன்றி...,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
    தற்போது நானும் சென்னைவாசி ஆகிவிட்டதால் சீனியர் சென்னைவாசிகளிடம் ஒரு டவுட்டு.., பார்க் ஸ்டேஷன்-ல் இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் செல்லும் சப்-வேயில் அனைவரும் மிகச்சரியாக போகும் வழி என்ற போர்டு இருக்கும் வழியில் வருகிறார்கள் வரும் வழி என்ற போர்டு இருக்கும் வழியில் போகிறார்கள் .., ஏன் இப்படி... ஒரு டவுட்டு  தான் ஆரும் டெரர் ஆகா வேணாம்..,
----------------------------------------------------------------------------------------------------------------------------------
    மார்ச் 27-ம் தேதி நடந்த பதிவர் சந்திப்புக்கு  போய்இருந்தேன்.நண்பர்கள் சிவாஜி சங்கர் மற்றும் இந்திராகி சரவணன் வழி சொல்லி வாசலில் நின்று அழைத்து சென்றனர்..,  அன்னிக்கு ஒரு interview இருந்ததால கொஞ்சம் லேட்டா தான் போனேன்., எவ்ளோ லேட்டுனா நா உள்ள நுழைவதற்கும் "we are going to finish with this" என்று நர்சிம் அவர்கள் சொல்வதற்கும் சரியாக இருந்தது... ஹி ஹி ..,ஆனாலும் கார்க்கி,சங்கர்,வெண்ணிற இரவுகள் கார்த்திக், D.R.அசோக்,மணிஜி,ஸ்ரீ,மயில்ராவணன்,அதிஷா ஆகிய பதிவர்களிடம் அறிமுகம் நடந்தது .., பெயர் சொன்னதும் அனைவருக்கும் தெரிந்தது ஆச்சர்யமாகவும் சந்தோசமாகவும் இருந்தது...,
  ---------------------------------------------------------------------------------------------------------------------------------
     முன்பு போல் ஒரு நாளைக்கு ரெண்டு பதிவெல்லாம் போட முடியாது என்றாலும் அவ்வப்போது எழுதி ரசிகர்களின் உள்ளம் உவகை அடைய செய்வேன் [யாருப்பா அங்க அருவாள எடுக்குறது ] .., எனவே முன்னால படிச்சிட்டு இருந்தவங்க தொடர்ந்து வாங்க புதுசா படிப்பவர்களும் தொடர்ந்து வாங்க ... நீங்க வந்தா மட்டும் போதும்..., நீங்க வந்தா மட்டும் போதும்...
----------------------------------------------------------------------------------------------------------------------------------
  இந்த மூன்று மாத லீவில் ஏதும் எழுதாத போதும் சேர்ந்த 13 பாலோயர்களுக்கும் பிச்சிக்கிட்டு போன ரெண்டு பாலோயர்களுக்கும் இந்த பதிவை சமர்ப்பிக்கின்றேன்...,

டிஸ்கி : அப்புறம் ஒரே ஒரு குத்து வசனம்  " இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம் " டென்சன் ஆகாதிங்க ஹி..ஹி..

.

31 comments:

Priya May 22, 2010 5:54 PM  

வந்துட்டீங்களா.. வாங்க வாங்க. நல்ல வேலை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!
வரும்போதே பஞ்ச் டயலாகோட வந்து இருக்கிங்க... ம்ம் திரும்ப கலக்குங்க!

முகிலன் May 22, 2010 6:02 PM  

வெல்கம் பேக்

முகிலன் May 22, 2010 6:02 PM  

//டிஸ்கி : அப்புறம் ஒரே ஒரு குத்து வசனம் " இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம் " //

பயம்ம்ம்ம்ம்மா இருக்கு.. :((

வடுவூர் குமார் May 22, 2010 6:06 PM  

எங்கே பேனா மூடியை தொல‌ச்சிட்டீங்க‌ளோ என்று நினைத்தேன்.:-)
ந‌ல்ல‌ வேலை கிடைத்த‌ற்கு வாழ்த்துக்க‌ள்.

அகல்விளக்கு May 22, 2010 6:10 PM  

வாங்க நண்பா... வாங்க...

WELCOME BACK...

புதிய வேலைக்கு வாழ்த்துக்கள்...

எறும்பு May 22, 2010 6:40 PM  

வருக... வருக.. வாழ்த்துக்கள்..

க.பாலாசி May 22, 2010 6:44 PM  

வாங்க தலைவரே... வணக்கம்....

//உள்ளம் உவகை அடைய செய்வேன்//

நம்புறேன்...

எறும்பு May 22, 2010 6:50 PM  

வருக... வருக... வாழ்த்துக்கள்...

அன்புடன் அருணா May 22, 2010 6:53 PM  

நல்ல வேலை கிடைத்ததற்கு வாழ்த்துக்கள்!
/இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம் "/
இது டாப்பு!

LK May 22, 2010 6:59 PM  

வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

ர‌கு May 22, 2010 7:31 PM  

வெல்க‌ம் பேக் & வேலை கிடைத்த‌த‌ற்கு வாழ்த்துக‌ள் :)

//பார்க் ஸ்டேஷன்-ல் இருந்து சென்ட்ரல் ஸ்டேஷன் செல்லும் சப்-வேயில் அனைவரும் மிகச்சரியாக போகும் வழி என்ற போர்டு இருக்கும் வழியில் வருகிறார்கள் வரும் வழி என்ற போர்டு இருக்கும் வழியில் போகிறார்கள்//

ந‌ம்ம‌ சென்னைங்க‌....இப்ப‌டித்தான் நிறைய‌ இருக்கும்

//இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம்//

அவ‌ரோட‌ ப‌ட‌ம் பார்த்துட்டு வ‌ந்து இந்த‌ பதிவை எழுதினீங்க‌ளா?...;))

Chitra May 22, 2010 7:32 PM  

Congratulations! We are happy for you.


Welcome back!!!!

கனிமொழி May 22, 2010 7:38 PM  

முகிலன் said...

//டிஸ்கி : அப்புறம் ஒரே ஒரு குத்து வசனம் " இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம் " //

பயம்ம்ம்ம்ம்மா இருக்கு.. :((

................

எனக்கும்.. எனக்கும்... :-)))

Hahaha... Welcome back Anand ...

கே.ஆர்.பி.செந்தில் May 22, 2010 9:21 PM  

வாங்க ஆனந்த் இப்பதானே சென்னை வந்துருக்கீங்க, இனிமே நிச்சயம் அரிவாள நீங்களா தூக்குவீங்க.....

Discovery book palace May 22, 2010 10:02 PM  

வணக்கம். நீங்க பிச்சிகிட்டு போனாலும் சரி, அத்துகிட்டு போனாலும் சரி வந்து ஒட்டிகிட்டீங்களே... அதுவரைக்கும் வாழ்த்துக்கள். அடிக்கடி டிஸ்கவரி புக் பேலஸ் பக்கம் வந்துட்டு போங்க!.

cheena (சீனா) May 22, 2010 10:17 PM  

அன்பின் ஆனந்த்

வேலை கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

அக்பர் May 23, 2010 12:11 AM  

வருக.வருக..

பார்த்து எத்தனை நாளாச்சு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) May 23, 2010 6:59 AM  

//அப்புறம் ஒரே ஒரு குத்து வசனம் " இது தான் ஆரம்பம் இனிமே தான் பூகம்பம் " டென்சன் ஆகாதிங்க ஹி..ஹி.//

சரி தம்பி உனக்கு பேரரசுகிட்ட சான்ஸ் வாங்கித்தரேன். வாழ்த்துக்கள்

மணி (ஆயிரத்தில் ஒருவன்) May 23, 2010 8:10 AM  

அன்பு ஆனந்த்
பதிவுலகிற்கு
திரும்பும் தங்களுக்கு
ஆயிரத்தில் ஒருவனின்
அன்பு வாழ்த்துக்கள்.....

ஹாலிவுட் பாலா May 23, 2010 4:08 PM  

வாழ்த்துகள்.. பேநா..!! :) :)

Sivaji Sankar May 24, 2010 9:38 AM  

வாய்யா ராசா.. ரொம்ப சந்தோசமப்பா..,

(இந்த கம்பெனி-ல யாவது வேளை பார்க்கணுமுன்னு பதிவர் சார்பா ஒரு கோரிக்கை வைக்கிறேன்..) :)

அப்றமா..

நீ காசு கொடுத்து சொல்ல சொன்னதுனால,
"சிங்கம் களம் ஏறங்கிருச்சி.."

Baski.. May 24, 2010 10:36 AM  

வேலை கிடைத்தது பற்றி மிக்க மகிழ்ச்சி - நல்வாழ்த்துகள்

Mugilan May 26, 2010 11:14 AM  

வாழ்த்துக்கள்

பேநா மூடி May 28, 2010 7:16 PM  

அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்...,

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP