காணாமல் போகும் காதல் தேவதைகள்

>> Tuesday, February 16, 2010


முழு இரவையும்
முழுதாய் விழுங்கும்
அத்தனை பயணங்களிலும்
கைப்பையை அணைத்தப்படி
கண்ணாடி ஜன்னலில்
சாய்ந்தப்படி உறங்கும்
தேவதையை ஒன்றை
பார்க்கிறேன் ..,

அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,

டிஸ்கி :- நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,
.
.

44 comments:

சைவகொத்துப்பரோட்டா February 16, 2010 6:43 PM  

ரைட்டு (அப்ப தூங்கவே இல்லையா)

பேநா மூடி February 16, 2010 6:46 PM  

// ரைட்டு (அப்ப தூங்கவே இல்லையா) //

ஹி ஹி... லைட்டா

வானம்பாடிகள் February 16, 2010 6:48 PM  

ஏன்? பஸ்ல படம் போடலையோ?

பேநா மூடி February 16, 2010 6:50 PM  

// ஏன்? பஸ்ல படம் போடலையோ? //

பழைய பில்லா தான் போட்டாங்க..,

பிரபாகர் February 16, 2010 6:53 PM  

//வானம்பாடிகள் said...
ஏன்? பஸ்ல படம் போடலையோ?
//

அய்யா, அவருதான் தேவதை படத்த பாத்துகிட்டிருக்காருல்ல!

பிரபாகர்.

பேநா மூடி February 16, 2010 7:04 PM  

// அய்யா, அவருதான் தேவதை படத்த பாத்துகிட்டிருக்காருல்ல!

பிரபாகர். //

ஆமாண்ணே..., நீங்க யூத்துன்னு ப்ரூவ் பண்ணுறிங்க

புலவன் புலிகேசி February 16, 2010 7:07 PM  

சர்தேன்...நீங்களும் நம்ம குரூப் தானா?

திவ்யாஹரி February 16, 2010 7:08 PM  

//ஏன்? பஸ்ல படம் போடலையோ?//
அதான் நண்பர் புதுசா ஒரு படம் ஓட்டியிருக்காரே..

Mohan February 16, 2010 7:14 PM  

பஸ்ல இருந்தது ஒரே ஒரு தேவதைதானா? இல்லை மற்ற தேவதைகளெல்லாம்,இந்த தேவதைக்கு முன் தெரியவில்லையா :-)

வெள்ளிநிலா ஷர்புதீன் February 16, 2010 7:16 PM  

உங்கள் முகவரி குடுத்தால் வெள்ளிநிலாவை அனுப்பிவைக்கிறேன்

பேநா மூடி February 16, 2010 7:19 PM  

// புலவன் புலிகேசி said...

சர்தேன்...நீங்களும் நம்ம குரூப் தானா? //

ஆமா ஆமா...,இல்லயா பின்ன

// திவ்யாஹரி said...

//ஏன்? பஸ்ல படம் போடலையோ?//
அதான் நண்பர் புதுசா ஒரு படம் ஓட்டியிருக்காரே.. //

நா என்னம்மோ தப்பு பண்ணுனது போலவே பேசுறிங்க..,

// Mohan said...

பஸ்ல இருந்தது ஒரே ஒரு தேவதைதானா? இல்லை மற்ற தேவதைகளெல்லாம்,இந்த தேவதைக்கு முன் தெரியவில்லையா :-)//

பஸ்ல உக்கார்ந்து இருக்கும் போது ரெண்டு மூணு சீட்டு தான் தெரியும்.. நல்லா கேக்குறாங்கப்பா டீட்டெய்லு

பழமைபேசி February 16, 2010 7:31 PM  

நடக்கட்டும், நடக்கட்டும்...

வித்யாசாகர் February 16, 2010 7:32 PM  

திட்டக் கூடியவரா நீங்கள். நட்பால் அணைக்கக் கூடியவராயிற்றே. ஆனால் என்ன வலை பூவில் பதிவை நிரப்பி இருப்பீர்களோ என்று வந்தேன் அன்பே அதிகம் பூத்துள்ளது.

கவிதைகள் அருமை. நிறைய.. தொடர்ந்து எழுதவும். பத்து காகிதம் எழுதி கிழிக்கையில் ஒன்றேனும் நிச்சயம் கவிதையாகும்!

வாழ்த்துக்கள்!

வித்யாசாகர்
குவைத்

vidhyasaagar February 16, 2010 7:33 PM  

திட்டக் கூடியவரா நீங்கள். நட்பால் அணைக்கக் கூடியவராயிற்றே. ஆனால் என்ன வலை பூவில் பதிவை நிரப்பி இருப்பீர்களோ என்று வந்தேன் அன்பே அதிகம் பூத்துள்ளது.

கவிதைகள் அருமை. நிறைய.. தொடர்ந்து எழுதவும். பத்து காகிதம் எழுதி கிழிக்கையில் ஒன்றேனும் நிச்சயம் கவிதையாகும்!

வாழ்த்துக்கள்!

வித்யாசாகர்
குவைத்

அகல்விளக்கு February 16, 2010 7:41 PM  

அருமை நண்பா....

நானும் அந்த தேவதை(கள்)யை ரசித்திருக்கிறேன்....

Chitra February 16, 2010 7:51 PM  

கவிதை, கவிதை...... சைட் அடிச்சதுக்கும் கவிதை. நல்லா இருங்க, மக்கா.......!

க.பாலாசி February 16, 2010 8:12 PM  

//பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//

ஏங்க நண்பா...ஒரு பின்னூட்டமாவது போட்டிருக்கலாமே...

V.A.S.SANGAR February 16, 2010 8:28 PM  

பஸ் பயணம் நம்ம ஆளும் அப்பிடிதான் ஆனா நாங்க கேட்டமுள்ள

V.Radhakrishnan February 16, 2010 8:54 PM  

ஹா ஹா! திட்டலைங்க. :) முற்றுப்பெறாமல் போய்விட்டது கவிதை.

ஜெரி ஈசானந்தா. February 16, 2010 9:11 PM  

அடிக்கடி இப்படி சைட் அடிங்க பாஸ்.....நல்லாயிருக்கு..

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி February 16, 2010 10:22 PM  

யாரந்த தேவதை.. யாரந்த தேவதை..?

எப்பூடி ... February 16, 2010 10:51 PM  

கவிதை நன்றாக உள்ளது, அதென்ன பழைய பில்லா ? பில்லா ஒன்றுதான், மற்றையது பில்லா 2007 , எப்பூடி :-)

கமலேஷ் February 16, 2010 10:55 PM  

தஞ்சாவூர் to திருப்பூர் ஒரு புள்ள நிம்மதியா தூங்கி உங்கள தூங்க விடாம பண்ணி இருக்கு...நடக்கட்டும் ....கவிதை மிக நன்றாக உள்ளது தொடருங்கள்...வாழ்த்துக்கள்...

ஜெரி ஈசானந்தா. February 17, 2010 9:14 AM  

அடிக்கடி இதுமாதி பஸ்ல போங்கப்பு

பேநா மூடி February 17, 2010 10:36 AM  

// பழமைபேசி said...

நடக்கட்டும், நடக்கட்டும்... //

ஹம்ம்.., வருகைக்கு நன்றி

//வித்யாசாகர் said...

திட்டக் கூடியவரா நீங்கள். நட்பால் அணைக்கக் கூடியவராயிற்றே. ஆனால் என்ன வலை பூவில் பதிவை நிரப்பி இருப்பீர்களோ என்று வந்தேன் அன்பே அதிகம் பூத்துள்ளது.

கவிதைகள் அருமை. நிறைய.. தொடர்ந்து எழுதவும். பத்து காகிதம் எழுதி கிழிக்கையில் ஒன்றேனும் நிச்சயம் கவிதையாகும்!

வாழ்த்துக்கள்!

வித்யாசாகர்
குவைத் //

நன்றி வருகைக்கும் வாழ்த்துக்கும்/..,

பேநா மூடி February 17, 2010 10:39 AM  

// அகல்விளக்கு said...

அருமை நண்பா....

நானும் அந்த தேவதை(கள்)யை ரசித்திருக்கிறேன்....

//

அரசியல்ல இதெல்லாம் சாதாரணம் இல்லயா..,

//Chitra said...

கவிதை, கவிதை...... சைட் அடிச்சதுக்கும் கவிதை. நல்லா இருங்க, மக்கா.......! //

ஹி..ஹி.., எழுதுரதுன்னு முடிவு பன்னிட்டா.., சைட் அடிச்சத்துக்கு என்ன்.., ஸ்பிரைட் குடுச்சத்துக்கு கூட எழுதலாம்

பேநா மூடி February 17, 2010 10:44 AM  

// க.பாலாசி said...

//பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//

ஏங்க நண்பா...ஒரு பின்னூட்டமாவது போட்டிருக்கலாமே... //

நைட்லாம் தூங்கல.., அதான் தூங்கிட்டேன்


// V.A.S.SANGAR said...

பஸ் பயணம் நம்ம ஆளும் அப்பிடிதான் ஆனா நாங்க கேட்டமுள்ள //

வருகைக்கு நன்றி

பேநா மூடி February 17, 2010 10:45 AM  

// கண்மணி/kanmani said...

:))//

வருகைக்கு நன்றி..,

//

V.Radhakrishnan said...

ஹா ஹா! திட்டலைங்க. :) முற்றுப்பெறாமல் போய்விட்டது கவிதை. //

அந்த வருத்தம் தான் எனக்கும்...,

பேநா மூடி February 17, 2010 10:47 AM  

// பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

யாரந்த தேவதை.. யாரந்த தேவதை..? //

தெரியலையே நண்பா...,

// எப்பூடி ... said...

கவிதை நன்றாக உள்ளது, அதென்ன பழைய பில்லா ? பில்லா ஒன்றுதான், மற்றையது பில்லா 2007 , எப்பூடி :-)//

அடடா ரெண்டும் ஒன்னு தானப்பா கொழப்புறிங்களே...,

பேநா மூடி February 17, 2010 10:48 AM  

// கமலேஷ் said...

தஞ்சாவூர் to திருப்பூர் ஒரு புள்ள நிம்மதியா தூங்கி உங்கள தூங்க விடாம பண்ணி இருக்கு...நடக்கட்டும் ....கவிதை மிக நன்றாக உள்ளது தொடருங்கள்...வாழ்த்துக்கள்... //

வருகைக்கும் வாழ்த்துக்கும்.., நன்றி


// ஜெரி ஈசானந்தா. said...

அடிக்கடி இதுமாதி பஸ்ல போங்கப்பு //

இந்த மாசம் மட்டும் மூணு தடவ போக வேண்டிய வேல இருக்கு

எம்.எம்.அப்துல்லா February 17, 2010 11:14 AM  

கவிதை நல்லாருக்கதைப் பார்த்தால் அந்த சைட்டும் நல்லாத்தான் இருந்திருக்கும்போல :)

துபாய் ராஜா February 17, 2010 2:49 PM  

//அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//

அருமை தம்பி.

//நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,//

யாராவது 'கண்'டு பிடிச்சு 'பெண்'டை கழட்டிடாம பார்த்துக்கோங்க... :))

சிநேகிதி February 17, 2010 3:02 PM  

ஆஹா.. பஸ்சில் போகும் பொழுது இனி உஷாராக இருக்கனும்..
தூங்காமல் அழகாக தான் கவிதை வரைந்திருக்கிறிங்க

பேநா மூடி February 17, 2010 4:17 PM  

// எம்.எம்.அப்துல்லா said...

கவிதை நல்லாருக்கதைப் பார்த்தால் அந்த சைட்டும் நல்லாத்தான் இருந்திருக்கும்போல :) //

ஹி ஹி.., ஆமாங்க...,

// துபாய் ராஜா said...

//அங்கே இருப்பவள்
விழிக்கும் போதே
அந்த தேவதை எழுந்து
போய் விடுவதால் பெயர்
கேட்ப்பதும் இல்லை
பின்தொடர்வதும் இல்லை..,//

அருமை தம்பி.

//நேத்து நைட் தஞ்சாவூர் - திருப்பூர் பஸ்ல வரும் போது சிந்திச்சது.. சைட் அடிச்சுட்டே.. ஹி ஹி..,//

யாராவது 'கண்'டு பிடிச்சு 'பெண்'டை கழட்டிடாம பார்த்துக்கோங்க... :))//

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அண்ணே.., ஹய்ஹயோ ஏன் பீதிய கெள்ப்புறிங்க

பேநா மூடி February 17, 2010 4:18 PM  

// சிநேகிதி said...

ஆஹா.. பஸ்சில் போகும் பொழுது இனி உஷாராக இருக்கனும்..
தூங்காமல் அழகாக தான் கவிதை வரைந்திருக்கிறிங்க //

உஷாரா தூங்காம போக போறிங்களா

ராமலக்ஷ்மி February 17, 2010 6:11 PM  

பெயர் கேட்டு பின் தொடர்ந்து பிரச்சனையை வளர்க்காமல் அழகாய் கவிதை எழுதி முடித்து விட்டீர்களாக்கும்:)! நன்று.

அண்ணாமலையான் February 17, 2010 6:55 PM  

நமக்கு அந்த வாய்ப்பே இல்ல....

பேநா மூடி February 17, 2010 7:07 PM  

// ராமலக்ஷ்மி said...

பெயர் கேட்டு பின் தொடர்ந்து பிரச்சனையை வளர்க்காமல் அழகாய் கவிதை எழுதி முடித்து விட்டீர்களாக்கும்:)! நன்று. //

ஹி ஹி... ஆமா


// அண்ணாமலையான் said...

நமக்கு அந்த வாய்ப்பே இல்ல....//

ஏங்க பஸ்ல போறது இல்லயா

chezhian February 26, 2010 2:47 PM  

வணக்கம் ....SINGAPORE - -ல் இருந்து வந்திருக்கும் நண்பர்க்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்....

chezhian February 26, 2010 2:48 PM  

வணக்கம் ....SINGAPORE - -ல் இருந்து வந்திருக்கும் நண்பர்க்கு இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்....


Thanks dear friend

அறிவு GV February 26, 2010 3:16 PM  

கவிதையெல்லாம் வரவர அழகாய்கிட்டே போகுது...! என்ன பேநா மூடி, ஏதாவது புறா சிக்கிடுச்சா...? ;)

Bogy.in February 28, 2010 12:02 AM  

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

r.v.saravanan kudandhai March 17, 2010 2:14 PM  

பேருந்தில் கண்ட தேவதை

மனதுக்குள் தருகிறாள் இன்ப வதை

ஹா....ஹா

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP