யார் கிங் ஆஃப் ஓப்பனிங் - ஒரு " அசல் " ஆராய்ச்சி
>> Monday, February 08, 2010
அல்டிமேட் ஸ்டார் என்ற பட்டத்தை அஜித் துறந்து விட்டாலும் அவருக்கு இன்னும் செல்ல பெயர்களுக்கு குறைவே கிடையாது.., தல , கிங் ஆஃப் ஓப்பனிங் , ஆசை நாயகன் , காதல் மன்னன் என நிறையவே உண்டு.இவற்றுள் ஆசை நாயகன் , காதல் மன்னன் , தல ஆகிய பட்டங்கள் எல்லாம் அவர் நடித்த படத்தின் பெயரையோ இல்லை அவரது கதாபாத்திரத்தின் செல்ல பெயரையோ குறிக்கின்ற்ன.., ஆனால் இந்த கிங் ஆஃப் ஓப்பனிங் பட்டம்?? அதற்க்கு என்ன அர்த்தம்??
எனக்கு தெரிந்த அரை குறை ஆங்கிலத்தில் படம் வெளியாகும் முதல் நாள் அல்லது முதல் வாரம் அதிக வசூலை கொடுக்க கூடிய நடிகர் என்று அர்த்தப்படுத்திக்கொள்கிறேன். நான் அப்படி அர்த்தப்படுத்தியது சரியெனில் உண்மையிலேயே அஜித்தா கிங் ஆஃப் ஓப்பனிங் ?? . தஞ்சாவூரில் வில்லு ரிலீசான இரண்டாம் நாள் டிக்கெட் கிடைக்க வில்லை(நாலாவது நாள் காத்து வாங்கியது வேறு விஷயம் ) ஆனால் ஆழ்வார் ரிலீஸான அன்று மாலையே தியேட்டர் காத்து வாங்கியது.
இதன் மூலம் விஜய் தான் கிங் ஆஃப் ஓப்பனிங் என்று காமெடியெல்லாம் பண்ணவில்லை . அஜித்தை விட விஜய் முன்னனியில் இருக்கிறார் என்றே சொல்கிறேன். மேற்கூறிய உதாரணம் தஞ்சாவூரில் நடந்தது மட்டுமே மற்ற ஊர்களில் நிலவரம் எனக்கு தெரியாது..,
கிங் ஆஃப் ஓப்பனிங் என்ற பட்டம் படத்தின் தரத்திற்க்கு எந்த வகையிலும் சம்பந்தம் இல்லாமல் தன் பெயருக்காகவே கூட்டம் சேர்க்கும் நடிகருக்கே பொருத்தமாய் இருக்கும். பாபா படத்தின் தரம் அனைவரும் அறிந்ததே ஆனாலும் பத்து நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது.., அது தான் ரஜினியின் வீச்சு இன்றும் அதே வீச்சு அவருக்கு இருப்பதாகவே அறிகிறேன். அப்படியானால் அவர் தானே இன்றும் கிங் ஆஃப் ஓப்பனிங் ??? அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதால் இந்த பட்டத்தை டிரான்ஸ்பர் செய்து விட்டரா என்ன??
டிஸ்கி :- யாராவது புள்ளி விவரத்தோட பதில் சொல்லுங்கப்பா....,
.
.



42 comments:
ஆனந்த்,நான் 'வேட்டைக்காரன்' படத்துக்கு விமர்சனம் போட்டப்பொழுது '500'விற்கும் மேற்பட்டவர்கள் என்னுடைய அந்தப் பதிவிற்கு வந்து சென்றார்கள்.அதே நேரத்தில் 'அசல்' விமர்சனத்திற்கு '200' கூட இன்னும் வரவில்லை.இதை கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாமா என்று தெரியவில்லை.ஆனாலும்,ஓப்பனிங்கைப் பொறுத்தவரை,அஜித்தை விட விஜய்தான் முன்னணியில் இருப்பது போல் தோன்றுகிறது.இவர்கள் இருவரின் ஓப்பனிங்கை கணக்கில் எடுத்தால் கூட ரஜினியை 'Beat' பண்ணுவது கஷ்டம் என்றே நினைக்கிறேன்.
தம்பி நீ சொல்றது சரி.. தமிழக சினிமா வரலாற்றில் என்னைக்குமே கிங் ஆஃப் ஓப்பனிங் சூப்பர் ஸ்டார்தான்..
புள்ளியாவது விவரமாவது..இந்த மாஸ் ஹீரோவெல்லாம் தமிழ் மக்கள ஏமாத்தப் பொறந்தவங்க. அசல் அவுட்டு "தல"...
neenga sonnathu correct than madurailaiyum ajith padathukku ticket kidaikkum, vijay, rajini padathukku kidaikathu.
i think rajini is king of opening.
இதிலென்ன சந்தேகம். தல போல வருமா...tamilish vote check pannikunga!!!
ஒபெநிங் என்பது நாயகன் மட்டும் சம்பந்தப் பட்டதல்ல அது இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரம், எதிர்பார்ப்பு, பட்ஜெற், கூட வரும் போட்டிப் படங்கள், பண்டிகை நாட்கள் என பல விடயங்களில் தங்கியுள்ளது. உதாரணத்திற்கு ரஜினியின் சிவாஜி முதல் 4 நாட்களில் சென்னையில் வசூலித்தது 1 .34 கோடி ரூபா , அதே குசேலன் வசூலித்தது 3 நாட்களில் 83 லட்சம்.( தசாவதாரம் 95 லட்சம், உன்னைப்போல் ஒருவன் 62 லட்சம்). (அழகிய தமிழ் மகன் 4 நாட்களில் 32 லட்சம் , வேட்டைக்காரன் 3 நாட்களில் 81 ).( லட்சம், பீமா 56 லட்சம் , கந்த சாமி 87 லட்சம் ), (கிரீடம் 34 லட்சம் , பில்லா 78 லட்சம் )
ஆனால் ரஜினி, கமல் இந்த இருவருக்கு பின்னர் சாதாரன் படங்களுக்கு அஜித்துக்கும், பெரிய பட்ஜெற் படங்களுக்கு விக்ரமுக்கும் ஒபெநிங் அதிகமாக வரும். சாதாரண படங்களுக்கு இளைய தலைமுறையில் அஜீத்திற்கே அதிக ஒபெநிங் வருவதால் அவரை கிங் ஒப் ஒபெநிங் என்றும், 'கில்லி ஒப் தமிழ் சினிமா' என்றும் (கில்கிறிஸ்ட் ஆரம்பவீரராக கலக்குவதால் அவரது செல்லப்பெயர் )என்றும் அழைப்பதுண்டு.ரஜினியை விடுங்கள் அவர் 'எம்பரர் ஒப் இந்தியன் சினிமா'.
இவை ரமணா புல்லிவிபரமல்ல, உண்மையான புள்ளிவிபரம், சில வேளைகளில் வசூல்கள் ஓரிரு இலட்சங்களால் வித்தியாசபடலாம் )
'புல்லிவிபரமல்ல'அது 'புள்ளிவிபரமல்ல',மன்னிக்கவும் எழுத்துப்பிழை
நிச்சயம் அஜித்தை விட விஜய் எப்போதும் முன்னிலையிலே இருந்திருக்கிறார், பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரை. ஆனால் அஜித்தின் 90% ரசிகர்கள் 15-30 வயதுக்குட்பட்டவர்கள்.
அதை வைத்து யாரோ இட்டுக் கட்டியது
பகவதி -வில்லன், திருமலை- ஆஞ்சனேயா, போக்கிரி - ஆழ்வார், என இவர்கள் மோதிய எல்லா நேரமும் விஜயே ஓப்பனிங் சாதனை புரிந்தார். மேலும் அஜிட்த்தின் செல்வாக்கு சென்னை, கோவை போன்ற நகரில் மட்டுமே. விஜய்க்கு மவுண்ட் ரோடு தொடங்கி, மண்ணடி வரை ஒப்பனிங் அதிகம். மேலும் கேரளா, கர்நாடகா, வெளிநாடு என எல்லாவற்றில்ய்ம் விஜயே முன்னிலை. எதை வைத்து அவரை கிங் என்றார்கள் என்பது தெரியவில்லை.
ஆனால் இன்றுவரை ரஜினிதான் அதில் தி பெஸ்ட் என்பது வேறு விஷயம்
வாய் சொல்லில் வீரரடி.
//பாபா படத்தின் தரம் அனைவரும் அறிந்ததே ஆனாலும் பத்து நாட்களுக்கு டிக்கெட் கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது.., //
பாபா ரீலீஸ் அன்னைக்கு ரிசல்ட்
வந்தவுடன் எங்க ஏரியா தியேட்டரில்
மாலை காட்சி ஷோவே ஈஸியாக
டிக்கெட் கிடைத்தது.....
வணக்கம் அடியேனும் தஞ்சாவூர்தான்,நீங்கள் சொல்வது உண்மை,அதேபோல்
இப்பொழுது அசலுக்கும் இரண்டாம் நாள் காலியா கிடக்கிறது அரங்கம்.விஜய்க்கு மூன்று நாள்
ஹவுஸ் புல்லாக இருக்கும்.
வேட்டைக்காரன் இரண்டு நாள் டிக்கெட் விலை 200
அசல் முதல் நாளே 100 ருபாய் தான்.
//அப்படியானால் அவர் தானே இன்றும் கிங் ஆஃப் ஓப்பனிங் ??? //
அதானே?
//அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைப்பதால் இந்த பட்டத்தை டிரான்ஸ்பர் செய்து விட்டரா என்ன?? //
இல்ல இல்ல
சூப்பர் ஸ்டார்தான் எப்பவுமே கிங் ஆஃப் ஓப்பனிங்.
@Mohan :- ஆமாங்க..., நீங்க சொல்றது உண்மை உண்மை..,
@ முகிலன் :- ஆமாங்க.., வருகைக்கு நன்றி
@ புலவன் புலிகேசி :- இங்கேயும் அப்படிதான் சொல்ராங்க...
@ காமன் மேன் :- அதாங்க உண்மை.., வருகைக்கு நன்றி
@ மயில் ராவணன் :- என்னங்க செக் பன்னனும்...,
@ எப்பூடி :- தங்களுடைய புள்ளி விவரங்களை நீங்கள் மறுபடியும் பாருங்கள், அவர்களின் அதிகமான வசூலை பட்டியலிடுங்கள்.
1 - ரஜினி - சிவாஜி 1.34 கோடி
2 - கமல் - தசாவதாரம் 95 லட்சம்
3 - விக்ரம் - கந்தசாமி 87 லட்சம்
4 - விஜய் - வேட்டைக்காரன் 81 லட்சம்
5 - அஜித் - பில்லா 78 லட்சம்
இது தாங்கள் கொடுத்த புள்ளி விவரமே.., யார் கிங் ஆஃப் ஓப்பனிங்.. சொல்லுங்க..,
@ கார்க்கி :-
நீங்கள் சொல்வது சரியே..,
//நிச்சயம் அஜித்தை விட விஜய் எப்போதும் முன்னிலையிலே இருந்திருக்கிறார், பாக்ஸ் ஆஃபிஸை பொறுத்தவரை//
கடைசி மூணு வார்த்தை ரொம்ப பிடிச்சிருக்கு...,
@ சித்ரா :-
நா இல்லல்லங்க...
@ஜெட்லி :-
தஞ்சாவூரில் சாந்தி , ஜூபிட்டர் ஆகிய இரண்டு பெரிய தியெட்டரிலும் கமலா ( சாந்தி தியேட்டர் மாடியில் இருக்கும் மினி தியேட்டர் ) தியேட்டரிலும் ரிலீஸ் ஆனது.., அனைத்து இடத்திலும் 10 நாட்களுக்கு முன்பதிவு செய்யப்பட்டதாக போர்ட் போட்டு இருந்தார்கள்.
@கிட்டிபுல்லு :- உண்மை தான் அதை தான் நேரில் பார்த்து இருக்கிறேன்..,
@ வரதராஜலு .பூ :-
ஆமாங்க.. வருகைக்கு நன்றி..
ஹே பாஸ் . இன் எனி article they'll always point out that ajith got good opening next only to rajni.
So don't act smart and play politics between both fanz.
someone pointed out bagavathi - villan, thirumalai - aanjaneya...
Goddd...good comedy man.. Villan is one of the film which made sure ajith is next best to rajni in opening and surly aanjaneya got better opening than thirumalai.
So u people play around ajith and vijay for ur hits counter :)
Good man if u got more hit for vetaikaran it means more vijay fanz.. Dude just think one more time, its other way round :)
@ saran ram :-
ந்ண்பா.., ஓட்ட ப்ந்தயதில் முதலில் வருபவரே வெற்றியாளர். பகவதி - வில்லன் போட்டியில் வில்லனே முன்னனியில் இருந்திருக்கலாம்.., ஆனால் ஆஞ்சநேயா ???? உண்மையிலேயே அந்த படத்தை பார்த்து இருக்கிங்களா..,
// if u got more hit for vetaikaran it means more vijay fanz..// இப்படி நான் சொல்லவே இல்லயே..,
//ஆழ்வார் ரிலீஸான அன்று மாலையே தியேட்டர் காத்து வாங்கியது.// அந்த படம் அஜித்தில்ல அர்னால்டு வந்து நடிச்சிருந்தாலும் அப்பிடிதான் காத்துவாங்கி இருக்கும்
//ஒபெநிங் என்பது நாயகன் மட்டும் சம்பந்தப் பட்டதல்ல அது இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரம், எதிர்பார்ப்பு, பட்ஜெற், கூட வரும் போட்டிப் படங்கள், பண்டிகை நாட்கள் என பல விடயங்களில் தங்கியுள்ளது. உதாரணத்திற்கு ரஜினியின் சிவாஜி முதல் 4 நாட்களில் சென்னையில் வசூலித்தது 1 .34 கோடி ரூபா , அதே குசேலன் வசூலித்தது 3 நாட்களில் 83 லட்சம்.( தசாவதாரம் 95 லட்சம், உன்னைப்போல் ஒருவன் 62 லட்சம்). (அழகிய தமிழ் மகன் 4 நாட்களில் 32 லட்சம் , வேட்டைக்காரன் 3 நாட்களில் 81 ).( லட்சம், பீமா 56 லட்சம் , கந்த சாமி 87 லட்சம் ), (கிரீடம் 34 லட்சம் , பில்லா 78 லட்சம் )
ஆனால் ரஜினி, கமல் இந்த இருவருக்கு பின்னர் சாதாரன் படங்களுக்கு அஜித்துக்கும், பெரிய பட்ஜெற் படங்களுக்கு விக்ரமுக்கும் ஒபெநிங் அதிகமாக வரும். சாதாரண படங்களுக்கு இளைய தலைமுறையில் அஜீத்திற்கே அதிக ஒபெநிங் வருவதால் அவரை கிங் ஒப் ஒபெநிங் என்றும், 'கில்லி ஒப் தமிழ் சினிமா' என்றும் (கில்கிறிஸ்ட் ஆரம்பவீரராக கலக்குவதால் அவரது செல்லப்பெயர் )என்றும் அழைப்பதுண்டு.ரஜினியை விடுங்கள் அவர் 'எம்பரர் ஒப் இந்தியன் சினிமா'.
இவை ரமணா புல்லிவிபரமல்ல, உண்மையான புள்ளிவிபரம், சில வேளைகளில் வசூல்கள் ஓரிரு இலட்சங்களால் வித்தியாசபடலாம் )//
விடுங்க தல ~! வடிவேலு சொல்றா மாதிரி பாத்தா பத்து ஹிட்டுக்கு அப்பறம் ஓபனிங் கூட்டம் சேக்கறவன் ரவுடி இல்ல ! ஒம்போது வருசமா பிளாப் பல்பு வாங்கிட்டு இன்னும் நிக்கறானே அவன்தான் மனுஷன் ! ( எதோ நம்மால முடிஞ்சா அளவு உசுப்பேத்துவோம்)
//பகவதி -வில்லன், திருமலை- ஆஞ்சனேயா, போக்கிரி - ஆழ்வார்,//
யப்பா! ஒவ்வொன்னும் கதையல்ல ! காவியம் ! அவன் ஒரு இத்துப் போனவன் இவன் ஒரு செத்துப் போனவன் !
//எதை வைத்து அவரை கிங் என்றார்கள் என்பது தெரியவில்லை.//
யாருங்க சொன்னா ! எல்லாம் சுத்தி இருக்கறவன் ஏத்தி விடறதுதான்
//ஆனால் இன்றுவரை ரஜினிதான் அதில் தி பெஸ்ட் என்பது வேறு விஷயம்//
எதுல தல ! பெனாத்தரதுலையா
//பாபா ரீலீஸ் அன்னைக்கு ரிசல்ட்
வந்தவுடன் எங்க ஏரியா தியேட்டரில்
மாலை காட்சி ஷோவே ஈஸியாக
டிக்கெட் கிடைத்தது.....//
உண்மையெல்லாம் இப்புடி பப்ளிக்கா சொல்லக் கூடாதுப்பா
//வேட்டைக்காரன் இரண்டு நாள் டிக்கெட் விலை 200
அசல் முதல் நாளே 100 ருபாய் தான்.//
தியேட்டர்குள்ள இருந்து வெளிய வரதுக்கா
February 9, 2010 7:05 AM
//தம்பி நீ சொல்றது சரி.. தமிழக சினிமா வரலாற்றில் என்னைக்குமே கிங் ஆஃப் ஓப்பனிங் சூப்பர் ஸ்டார்தான்..// அந்தாளு ஒரு லூசுப்பய தல !
//புள்ளியாவது விவரமாவது..இந்த மாஸ் ஹீரோவெல்லாம் தமிழ் மக்கள ஏமாத்தப் பொறந்தவங்க. அசல் அவுட்டு "தல"...//
அப்புடி போடு ! நீதான்யா மனுஷன்
ராஜன் கோவமெல்லாம் இல்லங்க...,
ராஜன்
//விடுங்க தல ~! வடிவேலு சொல்றா மாதிரி பாத்தா பத்து ஹிட்டுக்கு அப்பறம் ஓபனிங் கூட்டம் சேக்கறவன் ரவுடி இல்ல ! ஒம்போது வருசமா பிளாப் பல்பு வாங்கிட்டு இன்னும் நிக்கறானே அவன்தான் மனுஷன் ! ( எதோ நம்மால முடிஞ்சா அளவு உசுப்பேத்துவோம்)//
அப்பிடின்னா சிம்புதான் கிங் ஒப் ஒபெநிங்..
முந்தைய படத்தின் நிலவரமும்,படம் ஏற்படுத்தும் பரபர்ப்பும் தான் ஓப்பனிங்கை தீர்மானிக்கும்...இதர்க்கு இயக்குனர்களும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்
ஆனந்த்,நான் 'வேட்டைக்காரன்' படத்துக்கு விமர்சனம் போட்டப்பொழுது '500'விற்கும் மேற்பட்டவர்கள் என்னுடைய அந்தப் பதிவிற்கு வந்து சென்றார்கள்.அதே நேரத்தில் 'அசல்' விமர்சனத்திற்கு '200' கூட இன்னும் வரவில்லை.//
விஜய் படம் ஜெய்த்துவிடுமோ என்ற கவலை ...படபடப்பு தான் காரணம்
//இது தாங்கள் கொடுத்த புள்ளி விவரமே.., யார் கிங் ஆஃப் ஓப்பனிங்.. சொல்லுங்க..,//
ஆனால் இந்த படங்கள் நடிகர்களால் மட்டும் ஒபெநிங்கை பெறவில்லை. இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரம், எதிர்பார்ப்பு, பட்ஜெற், கூட வரும் போட்டிப் படங்கள், பண்டிகை நாட்கள் என்பவற்றாலும் ஒபெநிங்கை பெற்றவை.
குசேலன் 83
உன்னைப்போல் ஒருவன் 62
பீமா 56
கிரீடம் 34
அழகிய தமிழ் மகன் 32
இப்ப யாரு கிங் ஒப் ஒபெநிங் ?
#You are totally biased. I am not "Ajith"'s fan
முந்தைய படம் ஹிட் ஆனால் தான் விஜய் படத்துக்கு கூட்டம்
அஜித் முந்தைய படம் ஹிட்/பலாப், அஜித் படத்துக்கு கூட்டம்...
இது தான சேர்ந்த கூட்டம்... தல என்னைக்கும் கிங் ஒப் ஒபெநிங் தான்....
சரி சரி சண்ட போடாதீங்க ஏட்டையா
சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... :))
@ஆர்.கே.சதீஷ்குமார் :- அப்புறம் எதுக்கு இந்த வெட்டி பட்டம்..
@எப்பூடி ... :-
நீங்களே ஒத்துட்ங்க.., இப்போ நீங்க போட்ட லிஸ்ட்ல கூட விக்ரம் அஜித்த விட முன்னணியில் இருக்கிறார்
.., நான் ஒன்றும் விஜய் ரசிகன் அல்ல
@Anonymous :-
ஹா ஹா.., நானும் விஜய் ஃபேன் கிடையாது..,
@sathish :-
அப்படியா !!
@ராஜன் :-
சரிங்க !! ஏட்டையா
//சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா.... :))//
கேட்டா ?!
@துபாய் ராஜா :-
அது தான் எல்லாருக்குமே தெரியுமே !!
@ராஜன் :-
அது பாட்டுங்க ஏன் டென்ஷன்
//அது பாட்டுங்க ஏன் டென்ஷன்//
ச்ச ச்ச ! ச்சும்மா கேட்டேன் !
@ராஜன் :- அதானே பாத்தேன்
//நீங்களே ஒத்துட்ங்க.., இப்போ நீங்க போட்ட லிஸ்ட்ல கூட விக்ரம் அஜித்த விட முன்னணியில் இருக்கிறார்
.., நான் ஒன்றும் விஜய் ரசிகன் அல்ல//
ஏங்க நான் அஜித் ரசிகரென்று யார் சொன்னது , எனக்கு ரஜினிக்கு அப்புறம் விக்ரம்தான். விக்ரம் மட்டும்தான்....
//ஆனால் இந்த படங்கள் நடிகர்களால் மட்டும் ஒபெநிங்கை பெறவில்லை. இயக்குனர், தயாரிப்பாளர், விளம்பரம், எதிர்பார்ப்பு, பட்ஜெற், கூட வரும் போட்டிப் படங்கள், பண்டிகை நாட்கள் என்பவற்றாலும் ஒபெநிங்கை பெற்றவை.//
உண்மை. மேலும், திரையரங்குகள் இன்னொரு முக்கியமான காரணம். ஒரு சின்ன உதாரனம் (Behindwoods):
Vettaikaran
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 350
Collection over this weekend in Chennai: Rs. 89,08,491
Aasal
No. Days Completed: 3
No. Shows in Chennai over this weekend: 211
Collection over this weekend in Chennai: Rs. 62,53,908
ஒரு சிறிய 'calculation' பன்னி பார்த்தால், எந்த படம் நல்ல 'opening' பெற்றது என புலப்படும். இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வத்ற்கில்லை.
Post a Comment