தேவையா உலக நாயகன் பட்டம்?? - கமலுக்கு ஒரு கடிதம்
>> Thursday, January 21, 2010
அன்புள்ள கமல் ஹாசன் அவர்களுக்கு ..,
தமிழ் திரையுலகில் உள்ள நாயகர்களுள் வித்தியாசமானவர் நீங்கள் .., தன்னுடய ரசிகர்கள் வெறும் விசிலடிச்சான்குஞ்சுகளாக இருக்க வேண்டும் என்று எப்போதுமே நீங்கள் விரும்பியதில்லை. உங்கள் பிறந்தநாளன்று உங்களுக்கு பாலபிஷேகமோ பீராபிஷேகமோ உங்கள் ரசிகர்கள் செய்ய வேண்டும் என்று எதிர்ப்பார்க்காமல் நல திட்ட உதவிகளும் இரத்த தான முகாம்களும் நடத்த வைத்தவர்.
உங்களுக்கு ஆங்கிலம் எவ்வளவு தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும் ஆனாலும் எந்த மேடை ஏறினாலும் சுத்த தமிழை மட்டுமே பேசுபவர்.என்னுடைய முகத்தை நான் தினமும் கண்ணாடியில் பார்க்கிறேன் என்னால் இனிமேல் கல்லூரிக்கு போய் சைட் அடிக்கும் படி எல்லாம் நடிக்க முடியாது என்று தைரியமாக உடைத்து கூறியவர் நீங்கள்.
முதன்முதலில் உடல்தானம் செய்த நடிகர் நீங்கள் தான் நீங்கள் செய்ததோடு மட்டும் நில்லாமல் ரசிகர்களையும் செய்யும் படி தூண்டியவர் நீங்கள்.ஆஸ்பத்திரியில் அம்மணமாக வைத்து இருப்பார்களே என்று சிலர் பழித்த போது அப்படி தானே பிறந்தோம் என்று அழுத்தமாக பதில் சொன்னவர் நீங்கள். ரசிகர் மன்றஙகளை நற்பணி மன்றங்களாக முதல் முறையாக மாற்றி உங்களுடைய சமூக பொறுப்பை காட்டினீர்கள்.
பணத்திற்காக என்று இல்லாமல் வாக்கு அளிப்பதன் மற்றும் வரி கட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் எய்ட்ஸ் விழிப்புண்ர்வு ஏற்படுத்துவதற்காகவும் விளம்பரத்தில் தோன்றி மற்றவர்களுக்கு முன்னுதாரனமாக விளங்குபவர்.தனக்கு கிடைக்காத்து மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும் என்ற எண்ணத்தில் சினிமா கனவோடு அலையும் இளைஞர்களுக்கு ப்யிற்சி பட்டறை நடத்தி அவர்களுக்கும் சினிமா பற்றிய புரிதலை ஏற்படுத்தியவர் நீங்கள்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு எடுத்து செல்வதற்க்காக நீண்ட நாட்களாக போராடி வருபவர்.இன்று வித்தியாசமாக படமெடுப்போர் அனைவரும் நீங்கள் கஷ்ட பட்டு போட்ட சாலையில் சுகமாக நடந்து வந்தவர்களே..,
இத்தனை விஷயங்களை முற்போக்காக யோசித்து செய்த உங்களுக்கு கலைஞானி , உலக நாயகன் போன்ற பட்டங்கள் நகைப்புக்குறியதாக இல்லையா..,நீங்கள் உலக நாயகனாக இருந்தால் அப்படி பட்ட பெயர் வைத்து கொள்வதில் எங்களுக்கெல்லாம் சந்தோஷமே ஆனால் நீங்கள் உலக நாயகனாக இருந்திருந்தால் உங்களை கனடா விமான நிலையத்தில் வைத்து ஒரு மணி நேரத்திற்க்கு மேலாக விசாரணை நடத்தி இருக்க மாட்டார்களே.., உங்களை பார்த்து நடிப்பதாக சொல்லும் சூர்யா , விக்ரம் போன்ற நடிகர்கள் பட்டங்கள் ஏதும் வேண்டாம் என்று பட்டங்கள் இல்லாமலே நடித்து வருகின்றனர் அவர்கள் வரிசையில் அஜித்தும் சேர்ந்து விட்டார்.
ஆகவே இனியும் தாமதிக்காமல் உலக நாயகன் பட்டத்தை துறந்து அரசாங்கம் கொடுத்த பட்டமான பத்ம ஸ்ரீ கமல் ஹாசனாகவே தொடருங்கள்.அப்படி செய்வதன் மூலம் இளைய , புரட்சி , சின்ன , குட்டி , நெட்டை , எழுச்சி , வீர ,சிகப்பு , பச்சை ஆகிய தளபதிகளுக்கும் லிட்டில் , யங் , மங் , சங் சூப்பர் ஸ்டார்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குமாறு கேட்டு கொள்கிறோம்...,
இப்படிக்கு..,
ஒரு ரசிகன்...,
.

30 comments:
நீங்க கமல் ரசிகரா பேநாமூடி
கமல் பிடிக்கும் ஆனால் டி,வியில் பேட்டி போட்டா மட்டும் பாக்க மாட்டேன்..
அவசர அவசரமா தலைப்பை மட்டும் பாத்து யாராவது மைனஸ் ஓட்டு போட்டுடப் போறாங்க தம்பி.. பாத்துக்க.. :))
சக்கரை இனிக்கும்
உப்பு துவர்க்கும் - இது
கூப்பனுக்கும் சுப்பனுக்கு தெரியும்.
அப்படி இருக்க கனடா அதிகாரிக்கு தெரியாமல் போனது எப்படி?
இதை "இயக்குனர் பள்ளதாக்கு" பேரரசு-ன் காத்திபார தலமை ரசிகர் மன்றம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்..
பாத்துட்டாலும், ரொம்ப புரிஞ்சிரும் :))
மன்னிக்கணும் , உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை , உலகநாயகன் என்பது 'உலகத்திற்கே கமல் நாயகன் ' என்று அர்த்தமில்லை. தமிழ் சினிமாவை உலகத்தரத்திற்கு எடுத்து செல்வதால்த்தான் 'உலக நாயகன்' என்று பட்டம் என்று நினைக்கிறேன். எது எப்பிடியோ பட்டத்தை துறந்த அஜித்திற்கு வாழ்த்துக்கள்.
//லிட்டில் , யங் , மங் , சங் சூப்பர் ஸ்டார்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குமாறு கேட்டு கொள்கிறோம்.//
இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறேன்... :)
வாங்கப்பா இப்பதான் வேட்டைக்காரன் முடிஞ்சி ஆயிரத்தில் ஒருவன் வந்தது. அதுக்குள்ள அடுத்த டார்கெட் கமலா
அப்ப டிஸ்கவரி சேனலெல்லாம் பிடிக்காதா பேநாமூடி?
//லிட்டில் , யங் , மங் , சங் சூப்பர் ஸ்டார்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குமாறு கேட்டு கொள்கிறோம்...,//
:-)
ஆகவே இனியும் தாமதிக்காமல் உலக நாயகன் பட்டத்தை துறந்து அரசாங்கம் கொடுத்த பட்டமான பத்ம ஸ்ரீ கமல் ஹாசனாகவே தொடருங்கள்.அப்படி செய்வதன் மூலம் இளைய , புரட்சி , சின்ன , குட்டி , நெட்டை , எழுச்சி , வீர ,சிகப்பு , பச்சை ஆகிய தளபதிகளுக்கும் லிட்டில் , யங் , மங் , சங் சூப்பர் ஸ்டார்களுக்கும் முன்னுதாரணமாக விளங்குமாறு கேட்டு கொள்கிறோம்..., ..................mmmmmm..... good suggestion! nice.
நியாயமான கோரிக்கை!
//
கமல் பிடிக்கும் ஆனால் டி,வியில் பேட்டி போட்டா மட்டும் பாக்க மாட்டேன்..
//
ஏன்?
அண்மையில் வந்த உன்னை போல் ஒருவன் படம் பாத்திருப்பீர்கள் எண்டு நெனைக்கிறேன். அதில் எந்த அடைமொழியும் (பத்மஸ்ரீ கூட இல்லை) இல்லாமல் தனியே 'கமல்ஹசன்' என்று பெயர் வந்ததை நீங்கள் கவனிக்காமல் விட்டிருக்கமாடீர்கள் எண்டு நான் நம்புகிறேன். அதிலிருந்தே உங்களின் கடிதம் ரொம்ப லேட் எண்டு விளங்கியிருக்கும் எண்டு நெனைக்கிறான். விளங்கினால் சரி. அவர் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்

ம் பட்டம் துறந்து நடிப்பை வெளிப்படுத்த வேண்டும். இந்த சின்ன, இளைய தொல்லைகள் தாங்கலப்பா
வணக்கம் பேநா மூடி __/\__
முதல் முறை உங்கள் ப்ளாக்கிற்கு வருகிறேன்.
நல்ல பதிவு. அவர் என்றேன்றும் 'பத்ம ஸ்ரீ'-யாக அழக்கைப்படுவது தான் எனக்கும் பிடித்துள்ளது...
பி.கு. முடிந்தால் இந்த கடிதத்தை கமல் சாருக்கு அனுப்புங்கள்...
ரொம்ப பழைய டாப்பிக் ..சும்மா ஏதாவது பரபரப்பா எழுதணுமிண்ணு எழுதியிருக்கீங்க.
ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கமல் தயாரித்த எந்த படத்திலும் நீங்கள் சொன்னது போல ‘பதமஸ்ரீ’ என்பதை தவிர வேறு எந்த அடைமொழியையும் நீங்கள் பார்த்திருக்க முடியாது.
பத்மஸ்ரீ போடறதுக்கு பதிலா சும்மாவே இருந்துறலாம்... சினிமா துறைல அதிக பேர் கிட்ட இருக்கிறது பத்மஸ்ரீ யாதான் இருக்கும்....
MIGAVUM MANA NIRAIVAANA PADHIVU
நீங்கள் நிஜமான ரசிகரனால், கமல் தன் சொந்த படங்களில் எந்த பட்டப்பெயரும் போடாமல் இருப்பதை கவனித்திருப்பீர்கள். கையில் keyboard கிடைத்ததென்று நினைப்பதையெல்லாம் எழுதக்கூடாது!
கமல் சினிமா title ல் உலக நாயகன் பயன்படுத்துகிறார்களா?
பேநா மூடி...
இவ்வளவு அலசிவிட்டு முக்கியமான இடத்தில் கோட்டைவிட்டு விட்டீர்களே...
கமல்ஹாசர் என்றுமே தன் சொந்தபடத்தில் பட்டம் போட்டுக் கொண்டதில்லை...
உன்னைப் போல் ஒருவன் படம் பார்த்தீர்களா??
மற்றவர்கள் தான் தலைவருக்கு பட்டம் சூட்டுகிறார்கள்
ungalathu eluthu yosikka vaikirathu
very gud thinking
thanks
www.karurkirukkan.blogspot.com
நல்ல சிந்தனை.
இரண்டு ஆஸ்கார் வாங்கிய ரகுமான் கூட "ஆஸ்கார் நாயகன்" என்று குறிப்பிடுவதில்லை.
employees fall aids unveren operation carries night suggested comrinse burrows [url=http://www.webjam.com/tshirtprinting]t shirt printing cheltenham[/url]
ecover existing metrology healthy coupler cataloging december ggpregnancy grady resist [url=http://www.webjam.com/homesecurity]home security albuquerque[/url]
productbody resemble rifleman lagirlusa manner solving mailbox bamboo landing supervised [url=http://www.webjam.com/hairremoval]permanent hair removal dallas tx[/url]
ambiguities probe suncare concerns boutique wise stablized egress pace centers [url=http://www.webjam.com/taxattorney]tax attorneys new jersey[/url]
கமல் தன்னை தானே ஒரு போதும் 'கலைஞானி'என்றோ 'உலக நாயகன்'என்றோ மற்ற நடிகர்களை போல சொல்லிகொண்டதில்ல்லை என்று நினைக்கிறன்.
திறமை உள்ள ஒருவருக்கு எந்த பட்டம் கொடுத்தாலும் ,அந்த திறமைக்கு முன்னால் அது சிறிதே !
பகிர்வுக்கு வாழ்த்துக்கள் நண்பரே !
//பத்ம ஸ்ரீ கமல் ஹாசனாகவே தொடருங்கள்///
பத்மஸ்ரீ மட்டும் எதுக்கு. எதுவுமே இல்லாம இருக்கட்டும். பத்ம ஸ்ரீ பட்டமெல்லாம் இப்பொ போறவர்ரவங்களுக்கெல்லாம் குடுக்கறாங்க. சிபாரிசு இருந்த சிறந்த ப்ளாகருக்கான பத்மஸ்ரீ விருது உங்களுக்கே கிடைக்கும்.
regards
ram
www.hayyram.blogspot.com
உங்களோட கருத்து சரியானதே..
இங்க பல பேர் கமல் தன்னை உலக நாயகன் என்று அழைத்து கொண்டது இல்லை என்று சொல்லி உள்ளார்கள்.
தசாவதாரத்தில் வரும் "உலக நாயகன்" பாட்டு அவருக்கு தெரியாமல் வைக்கப்பட்டு விட்டது போல..
பி.கு: நான் கமல் ரசிகன்.
'கமல்ஹாசன்' பேரே எல்லாத்தையும் சொல்லும் போது பட்டம் எதற்கு.
Post a Comment