எனக்கு எப்போ நோபல் பரிசு குடுப்பாங்க ???

>> Wednesday, January 20, 2010

        பொங்கலுக்கு தேமே என்று தொலைக்காட்சி சேனல்களை மாற்றி மாற்றி பார்த்து கொண்டு இருந்தேன். அப்போ தான் தடார்னு ஒரு ஐடியா ஒரு ஆராய்ச்சி பண்ணி நோபல் பரிசு வாங்கிட்டா என்ன அப்டின்னு தான்..., அன்னிக்கு நா டி.வில படம் பாத்துட்டே எடுத்த ஆராய்ச்சி குறிப்புகள உங்கள் முன்னால அள்ளி வீசுறேன் அப்படியே படிச்சு பாத்துட்டு நீங்களும் நோபல் கமிட்டிக்கு ஒரு ஓலை அனுப்பிடுங்க....,



ஆராய்ச்சி 1 :-
               சந்தோஷ் சுப்பிரமணியம் படத்துல  எல்லாருமே லேன்ட் லைன்  தான் பயன் படுத்துறாங்க Except   பானிபூரி வியாபாரியிடம் ஒரு காட்சியிலும் M.S.பாஸ்கர் ஒரு காட்சியிலும் செல் போன் வைத்து இருப்பார்கள்   ..., படம் 2008 -ல வந்துச்சு அப்போ என்கிட்டையே செல் இருந்துச்சே பெரிய தொழிலதிபரான பிரகாஷ் ராஜ் கிட்ட இல்லையா ஹம்ம்...,  சரி டைரக்டர் ராஜா கிட்ட கேக்கலாம்னா அவர் பொம்மரிலு டி.வி.டியை குடுத்துட்டு போய்ட்டார் .., அதை போட்டு பாத்தா  அட அதுலயும் அப்டித்தான் ஒரு வேள இது ரொம்ப பழைய படமான்னு பாத்தா அதும் 2006 -ல வந்து இருக்கு அப்பவும் செல் போன் இல்லையா...அவர் உதவி இயக்குனரா இருந்தபோ உருவாக்குன கதைய மாத்தாம எடுத்துடரோ ???


ஆராய்ச்சி 2 :-
             ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆரம்பத்தில் ஒரு கூத்து ஆடுகின்றனர் அது தஞ்சையில் ஆடுவதாக காட்டப்படுகிறது ஆனால் இத்தனை ஆண்டுகளில் தஞ்சையில் நான் பார்த்த கூத்துகளுக்கும் அதற்க்கும் நிறைய வித்யாசங்கள் இருந்தன..,நான் சிவகங்கை பக்கத்தில் ஒரு கோவிலுக்கு போய் இருந்த போது அந்த வகை கூத்தை பார்த்து இருக்கிறேன்.., அந்த வகையான கூத்து தஞ்சை சுற்று வட்டார பகுதிகளில் உண்டா ??? 

             
ஆராய்ச்சி 3 :- [ நோபல் பரிசை எதிர் பார்க்கும் ஆராய்ச்சி இது தான் ]
         ஈரம் படத்தை மறுபடியும் பார்த்தேன் [ எங்க ஊரு கேபிள் டி.வில போட்டாங்க ] . அதில் ஒரு காட்சி சிந்து மேனன் நாயகன் ஆதிக்கு  ஆப் பாயில் போட்டு கொடுப்பார் அவர் சாபிட்டு விட்டு நல்ல இருக்குனு certificate வேற குடுப்பார்... ஆனா அந்த காட்சியில் சிந்து மேனன் முட்டையை உடைத்து தோசை கல்லில் போடும் போதே அதன் மஞ்சள் கரு உடைந்து விடும் [படத்தில் கவனிக்க ] . மஞ்சள் கரு உடைந்தால் ஆப் பாயில் ஒழுங்கா வராது என்பது  ஆப் பாயில் சாப்பிடும் அகில உலகமும் அறிந்ததே .., அப்படி இருக்க அடுத்த காட்சியில் எப்படி ஒரு அழகான ஆப் பாயிலை தட்டில் வைத்து எப்படி கொண்டு வந்தார்??? இதில் எங்காவது லாஜிக் இருக்கிறதா ????

டிஸ்கி :- இப்புடி ஒரே பதிவுல மூணு ஆராய்ச்சிய பண்ணி இருக்கேனே  எனக்கு எப்போ நோபல் பரிசு குடுப்பாங்க ??? [ அப்பாடி தலைப்பு வந்துட்டு .., ]
.
.

18 comments:

வெற்றி January 20, 2010 1:32 PM  

நல்லா ஆராய்ச்சி பண்றீங்க..:)

//எனக்கு எப்போ நோபல் பரிசு குடுப்பாங்க ??? //

உங்களுக்கு எல்லா பல்லும் விழுந்தவுடனே கொடுப்பாங்க..:))))

Thamizhmaangani January 20, 2010 1:34 PM  

obama just received his nobel prize. next will be u! don't worry. they shld give it u esp for the half-boiled egg research..*sorry i can't speak anymore. tears rolling down my cheeks. tears of joy. nalla irukunga*

ஜெட்லி January 20, 2010 2:08 PM  

//ஆனா அந்த காட்சியில் சிந்து மேனன் முட்டையை உடைத்து தோசை கல்லில் போடும் போதே அதன் மஞ்சள் கரு உடைந்து விடும் [படத்தில் கவனிக்க ] //

நானும் கவனித்தேன் நண்பா..இது குறித்து நானும்
நார்வேக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்...நீங்களும்
முடிந்தால் அனுப்புங்கள்..யாருக்கு பரிசு கிடைக்கிறது
என்று பார்ப்போம்.....

ஜெட்லி January 20, 2010 2:08 PM  

மேலும் இது குறித்து பேச பார்க் ஹோட்டல்லில்
ரூம் புக் செய்யவும்...நாம் அலசுவோம்...

சங்கர் January 20, 2010 2:43 PM  

தம்பி ஆனந்த் தமிழ் சினிமாவுக்கு செய்து வரும் சீரிய சேவையை பாராட்டி இந்த நோபல் பரிசினை வழங்குவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம், யாருப்பா அது அழுகின முட்டை வீசுறது, நல்லா முட்டையா வீசினா தம்பிக்கு ஆம்லேட் போட்டு தருவோம்ல

Sangkavi January 20, 2010 2:43 PM  

//இப்புடி ஒரே பதிவுல மூணு ஆராய்ச்சிய பண்ணி இருக்கேனே எனக்கு எப்போ நோபல் பரிசு குடுப்பாங்க ??? //

குப்பற படுத்து கனவு கானுங்க கொடுப்பாங்க...

பின்னோக்கி January 20, 2010 2:56 PM  

அட..அட என்ன ஒரு ஆராய்ச்சி. ஆனாலும் உங்களுக்கு கழுகு கண்ணு, கம்பியூட்டர் மூளை. ஆக மொத்தம் நீங்க மனுஷனே இல்லை... தெய்வம்னு சொல்ல வந்தேன். :)

வானம்பாடிகள் January 20, 2010 3:27 PM  

சேசே! இது நோபலுக்கெல்லாம் அப்பாற்பட்ட திறமை. :))

பேநா மூடி January 20, 2010 4:22 PM  

@வெற்றி
அப்போவாவது குடுப்பாங்களா...., நன்றி...

@Thamizhmaangani
நன்றி நன்றி.. கண்ணா தொடைசிட்டு போய் வேலைய பாருங்க...,

@ஜெட்லி
ஆகா.., எனக்கு போட்டியா .., பாத்ருவோம் யாருக்கு கிடைக்குதுன்னு...,

@சங்கர்
எதுக்கு தல ஆம்லேட் மஞ்சள் கரு உடையாத ஆப் பாயில் போடலாம்... ஹி ஹி..,

@சங்கவி
அப்படியா தல...!!!

@பின்னோக்கி
எனக்கு முகத்துக்கு முன்னால புகழ்ந்தா பிடிக்காது தல .... நன்றி நன்றி..,

@வானம்பாடிகள்
உங்களுக்கு தெரியுது ..., ஹம்ம்.., நன்றி..,

வெ.இராதாகிருஷ்ணன் January 20, 2010 7:43 PM  

ஆராய்ச்சி என்றால் அதற்குரிய பதில்களும் இருக்க வேண்டும். நீங்கள் கேள்வி மட்டும் கேட்டு வைத்திருக்கிறீர்கள். எனவே இப்போதைக்கு நோபல் பரிசு கிடைப்பது கடினமே.

நன்றாக கடினமாக முயற்சி செய்யுங்கள்.

பிரகாஷ் January 20, 2010 8:38 PM  

உங்களைப்போன்ற ஆராய்ச்சியாளர்கள் நம் இந்தியாவுக்கு நிச்சயம் தேவை. தொடருங்கள்..
நாடு விளங்கிடும்..
ஆ.. அப்புறமா ரூம் புக் பண்றதா இருந்தா, எனக்கும் சேர்த்து புக் பண்ணுங்கோ.. நாட்ட வெளக்கீடலாம்

sarvan January 20, 2010 10:00 PM  

ஆப் பாயில் ஆராய்ச்சி சூப்பர்

குப்பன்.யாஹூ January 21, 2010 12:11 AM  

actually you deserve for 2 noble prizes.

one for your 3 researches, the 2nd for this blog, advance wishes.

Anonymous,  January 21, 2010 1:30 AM  

non sence

Kumar January 21, 2010 12:35 PM  

shaaaaabbbaaaaa.... mudiyale..

~V=> <=J~ January 21, 2010 2:48 PM  

ரொம்ப ஆராய்ச்சி பநாதிங்க ......

முடி கொட்திடும்........

rama January 21, 2010 8:16 PM  

there is no dance at starting of movie..

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP