ஆயிரத்தில் கொஞ்சம் பேர்...,
>> Tuesday, January 19, 2010
செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் நேற்று தான் பார்த்தேன்.முதல் நாளே பார்த்து இருக்கலாம் என்று தோன்றியது காரணம் நிறைய வெட்டி விட்டார்கள். இரண்டாம் பாதி ஒரு மணி நேரம் தான் ஓடியது ஆகா மொத்தமாக இரண்டரை மணிநேரம் மட்டுமே..,கதை என்ன வென்று கூறி இப்போ நா விமர்சனம் எல்லாம் பண்ண போறது இல்லை ஏற்கனவே எல்லாரும் பண்ணிட்டாங்க...,வலைப்பூவில் நிறைய பேர் கிழி கிழின்னு கிழிச்சிட்டாங்க ஆமா..! அவ்வளவு மோசமான படமா இது ????
இல்லை.., நிச்சயமாக இல்லை..., முதல் குற்றச்சாட்டு கார்த்தியை வீணடித்து விட்டார்கள் என்பது .., ஹீரோ என்றால் முன்னால் தான் வர வேண்டுமா ?? எல்லோரையும் அடிக்க வேண்டும் பெண்களிடம் அடி வாங்குபவனாக இருக்கா கூடாது அப்படி தானே.., பத்து பேர் வெட்ட வெட்ட வரும் போது குனிந்த முதல் ஹீரோ இவர் தான் எனக்கு தெரிந்து...,அடுத்து பார்த்திபன் .., யார் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும் ஹாட்ஸ் ஆப் பார்த்திபன்.., நிழலை வைத்து புணரும் போதும் , இயலாமையால் தற்கொலைக்கு முயலும் போதும் , சாவு நிச்சயம் என தெரிந்து கம்பீரமாக சிரிக்கும் போதும் தன்னுடைய நடிப்பின் எல்லையை பல கிலோமீட்டர் விஸ்தரிக்கிறார்...,
முக்கியமாய் ரீமா, இரண்டு நாயகர்கள் இருக்கும் எந்த ஒரு படத்திலும் ஒரு நாயகிக்கு இப்படி ஒரு வெய்ட்டான கதாபாத்திரம் கொடுத்து இருக்க மாட்டார்கள். சிரிப்பது , முறைப்பது , சிரித்த உடன் முறைப்பது , தொடாமல் புணரப்படும் போது கொடுக்கும் முகபாவங்கள் , அனாசியமாய் துப்பாக்கியால் சுடுவது .., கலக்கல் தான்...,
இந்த படத்தை செமி ப்ரோனோ என்று எழுதி இருக்கிறார் ஒரு அதி புத்திசாலி பதிவர் .., அப்போ அடிக்கடி நிர்வாணம் வரும் மெலினா போன்ற படங்கள் உங்களுக்கு ப்ரோனோ வகையை சேர்ந்ததா...
வரலாற்றை திரித்து விட்டார்கள் என்று அலறுபவர்களே இது வெறும் வரலாற்று புனைவு மட்டுமே.., உண்மை சம்பவம் அல்ல.., உண்மையான கிரேக்க வரலாற்றை படமாக எடுக்கிறேன் பேர்வழி என்று அதை சிதைப்பவர்களை நீங்கள் கண்டுகொண்டதில்லையே.., உதாரணமாக ட்ராய் படத்தை பார்த்து விட்டு அதன் வரலாற்றை படிக்கவும் அப்போது தெரியும் வரலாற்றிற்கும் படத்திற்கும் உள்ள வித்யாசங்கள் அந்த படம் உங்களின் பலரின் விருப்ப படமாக இருப்பதை பார்த்து இருக்கிறேன் ..,
மேலே நான் ஹாலிவுட் படங்களை பற்றி சொல்லியது வெறும் உதாரணங்களுக்காக மட்டுமே நம்மை விட பல வருட தூரத்தில் அவர்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை தான்..., எனினும் அவர்களை தமிழ் சினிமாவோடு ஒப்பிடுவது நேற்று நடக்க தொடங்கிய குழந்தையை உசேன் போல்டின் வேகத்தோடு ஒப்பிட்டு பார்ப்பது போல் கேனத்தனமானது...,
செல்வராகவனே மறுத்தாலும் கடைசி காட்சி ஈழ கொடுமையின் பிரதி பலிப்பு தான்..., எனக்கு தெரிந்து எந்த ஒரு தமிழ் படமும் போர் கைதிகளாக வரும் பெண்களிடம் எப்படி ராணுவம் நடந்து "கொல்லும்" என்று பதிவு செய்தது இல்லை.., ஒருவன் ஒரு பெண்ணின் சேலையை பிடித்தல் அவன் ஹீரோவாக இருந்தால் பாட்டு வரும் அவன் வில்லனாக இருந்தால் இழுத்து முடிவதற்குள் ஹீரோ வருவான் சண்டை வரும் எனக்கு தெரிந்து உண்மையில் எந்த ஹீரோவும் வருவது இல்லை.., அந்த கொடுமையை அப்படியே படத்தில் பதிவு செய்து உள்ளார்..,யாரும் தொட அஞ்சிய விஷயத்தை தொட்டு இருப்பற்காகவே ஒரு எக்ஸ்ட்ரா சல்யுட் ..,
படத்தில் குறைகள் இருக்கின்றன குறிப்பாய் லாஜிக் மீறல்கள் இது படபிடிப்பில் உட்கார்ந்து கொண்டு எழுதியதால் வந்த வினை..,மெக்கனா'ஸ் கோல்ட் , 300 , கிலாடியட்டர், லாஸ்ட் சாமுராய் ஆகிய படங்களில் வந்த காட்சிகளை தழுவி காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தன. எனக்கு இது பெரிதாய் தோன்றவில்லை காரணம் ஒரே படத்தில் ஏகப்பட்ட நல்ல விசயத்தை செய்து உள்ளார் அதனால் இந்த விசயத்தை மட்டும் பிடித்து கொண்டு குறை சொல்ல எனக்கு மனசு வரவில்லை .., அப்புறம் எனக்கு தெரிந்து தமிழில் வெளி வந்த மிகப்ப்ரமாண்டமான படம் இது தான் ...,
நான் தஞ்சை விஜயா தியேட்டரில் பார்த்தேன் .., முதல் பாதி நெடுகவும் கை தட்டல்கள் கேட்டு கொண்டே இருந்தன இரண்டாம் பாதியில் அந்த அளவிற்கு இல்லை என்றாலும் பார்த்திபனின் "அஞ்சி விடுவோம் என்று எண்ணிநீரோ" என்ற கடைசி வசனத்திற்கும் அரங்கமே கை தட்டியது .., படம் நிறைய பேருக்கு பிடித்திருந்தது .., படம் நிச்சயமாய் வசூல்ரீதியாகவும் வெற்றி பெறும்..,ஆயிரத்தில் கொஞ்சம் பேருக்கு பிடிக்காமல் போனதால் எல்லாம் தோல்வி அடையாது..,
செல்வராகவன் அவர்களே இந்த படத்திற்கு இரண்டாம் பாகம் எடுக்க போவதாக அறிவித்து உள்ளீர்கள் .., அந்த படதிற்க்காவது எழுதி முடித்த பின் படபிடிப்பிற்க்கு செல்லவும்..,அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த படத்தை விட அது பல மடங்கு சிறப்பு வாய்ந்ததாக அமையும்.., வாழ்த்துக்கள் மறுபடியும்..,
டிஸ்கி :- யாரவது திட்டனும்னா நாளைக்கு வந்து திட்டுங்க என்ன இன்னிக்கு திட்டு வாங்குனா வருஷம் முழுசும் திட்டு வாங்க வேண்டியிருக்குமாம் அம்மா சொன்னங்க...,
.
.


21 comments:
விஜயாவில் ஏசி ஒழுங்கா போடறாங்களாப்பா?
ஹா ஹா ஹா ஹா . நான் சிரிச்சுட்டேன்.. நீங்க?
Nanbare,
Melina padam patri sila thagavalgal vendum. english spelling correcta ?
Good review.........nice film
என்னது படம் பிடிச்சு இருந்ததா? சரி விடுங்க.. நான் ஒன்னும் சொல்றதுக்கு இல்ல..:) இந்த படத்த பாக்க வேண்டும் என்ற நான் தான் என் வீட்டுல சிபாரிசு பண்ணேன். போய் பார்த்தேன். அன்று முதல் எல்லாரும் கண்ணுல கொலவெறியோடு அலையுறாங்க. என்னைய போட்டு தள்ளுறது உறுதி ஆச்சு!!
படம் எனக்கு மிக மிக பிடித்திருக்கிறது தல...
இன்னிக்கு ஏங்க திட்ட கூடாது?
:)
வாவ் நல்ல பார்வை.. மிக்ஸட் விமர்சனங்கள் வருவதால், படத்தை பார்த்துவிடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
HAPPY BIRTHDAY! Movie treat pola........ :-)
commedyana review,... :)
Happy Birthday.....
//யாரவது திட்டனும்னா நாளைக்கு வந்து திட்டுங்க என்ன இன்னிக்கு திட்டு வாங்குனா வருஷம் முழுசும் திட்டு வாங்க வேண்டியிருக்குமாம் அம்மா சொன்னங்க...,//
சரி, நான் போயிட்டு நளைக்கு வரேன்!
குத்துபவர்கள் மத்தியில் ஆயிரத்தில் ஒருவனை வருடியதற்கு நன்றிகள்.
arumaiya padhiladi. im like this movie very much
அருமையான பதிலடி.
@தண்டோரா ......
விஜயாவுல ஏ/சி யா காமடி பண்ணாதிங்க அண்ணே.., பேன் போட்டாலே பெரிய விஷயம்...
@அண்ணாமலையான்
ஏங்க சிரிக்கணும்...,
@Anonymous
Malena இதுவே சரியான ஸ்பெல்லிங்..., சினிமா பாரடைஸோ , தி ஸ்டார் மேக்கர் ஆகிய படங்களை இயக்கிய Giuseppe Tornatore இயக்கிய படம்...
@அத்திரி
வருகைக்கு நன்றி...,
@Thamizhmaangani
எனக்கு படம் பிடிச்சே இருந்துச்சு..., பரவால்ல விடுங்க.., இதெல்லாம் நமக்கு சாதாரணம்...
@புலவன் புலிகேசி
எனக்கும் தான்...
@வெற்றி
நேத்து எனக்கு பொறந்த நாளுங்க...
@முகிலன்
செய்கிறம் பாத்துடுங்க... நிறைய வெட்டிட்டு இருக்காங்க..,
@சித்ரா
இல்லை.., ரெண்டு நாள் முன்னவே பாத்துட்டேன்...,
@Anonymous
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி...,
@பிரியா
சரி வாங்க... ALWAYS WELCOME
@முத்துக்குட்டி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...
பிறந்த நாளா? வாழ்த்துகள்.
Hats off.. this is the true review of the moview. all the news papers rating this movie to low beacuse want to take revenge on Karthi family.
என்னது படத்த வெட்டிட்டாங்களா ?. தியேட்டர் ஆப்பரேட்டரா இல்லை டைரக்டரே வெட்டினாங்களா ?. சிலர் சூப்பர், சிலர் மொக்கை என்கிறார்கள். பார்ப்போம்.
@வானம்பாடிகள்
ஆமா நேத்து.., வாழ்த்துக்கு நன்றி....,
@Anonymous
ஆகா இப்புடி ஒரு உள் குத்து இருக்கோ ....
@பின்னோக்கி
பாத்துட்டு நீங்களே முடிவு பண்ணிடுங்க....
Post a Comment