எங்க ஊரு பொங்கச்சோறு..!!

>> Wednesday, January 13, 2010


   
    பொங்கல் என்பது எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது எனக்கு தெரியாது ஆனால்  விவசாயம் குறைந்து போன இந்த நாட்களில் திருப்பூர் பனியன் தொழிற்சாலைக்கும் மற்ற ஊர்களுக்கும் குடும்பம் குடும்பமாக வேலைக்கு சென்ற எங்கள் ஊர் மக்கள்  வருடத்தின் ஒரு முறையாவது  சொந்த ஊருக்கு வரும் நாளாகவே எனக்கு தெரிகிறது ..,
           மார்கழியின் கடைசி நாள் போகி பண்டிகை .., எங்கள் ஊரில் யாரும் பழைய பொருட்களை  எரித்ததாக  ஞாபகம் இல்லை. சுமார் ஒரு மாதமாகவே நடந்து வரும் வீட்டை சுத்தப்படுத்துதல் மற்றும் வெள்ளை அல்லது வேறு வண்ணங்கள் அடித்தல் இன்றோடு முடிந்து விடும்..,இந்த நாளின் முக்கிய நிகழ்வே (சீர்)  வரிசை கொடுப்பது  தான். தங்கள் குடும்பத்து பெண்கள் வாழும் வீட்டுக்கெல்லாம் புதுப்பானை,அரிசி,கரும்பு, மஞ்சள் கொத்து,வாழைப்பழம்  போன்றவற்றுடன் வசதிக்கு தகுந்தார் போல் பணத்தையும் சேர்த்து கொடுக்கும் வழக்கம் இன்றும் உள்ளது . நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை மாட்டு வண்டிகளே இதற்காக பயன்படுத்த பட்டது ஆனால் இப்போது அது வெகுவாக குறைந்து விட்டது பேருந்திலோ பைக்கிலோ போய் வரிசை குடுத்து விடுகிறார்கள்..
           தை முதல் நாள் சூரிய பொங்கல் .., இன்று பெரிய பரபரப்பு ஏதும்  இருக்காது. காலையில் பொங்கல் வைக்கும் பழக்கம் இல்லை காலையில்  மாட்டு வண்டி வைத்து இருப்பவர்கள் வயலுக்கு போய் களிமண் வெட்டி வருவார்கள் இல்லாதவர்கள் அவர்களிடம் வாங்கி கொள்வார்கள்..,  சூரியன் உச்சியில் இருக்கும் நேரத்தில் வீட்டு வாசலில் மேற்கு திசையில் திட்டாணி போடப்படும் கிழக்கு திசையில் கோடு வெட்டப்படும்..கோடு என்பது மண் வெட்டியால் வெட்டப்படும் சிறு பள்ளம் அந்த பள்ளத்தின் மேல் மூன்று களிமண் உருண்டைகளை வைத்து அடுப்பு செய்வார்கள் அந்த அடுப்பில் தான் பொங்கல் வைக்க படும். இன்று இரண்டு அடுப்பு செய்வார்கள் ஒன்றில் சக்கரை பொங்கல் மற்றொன்றில் வெண்பொங்கல்.., திட்டாணி என்பது எங்கள் ஊரில் பயன்படுத்த படும் வழக்கு சொல் போன வருடம் எங்கள் வீட்டில் போடப்பட்ட திட்டாணி கீழே..,

   தை இரண்டாம் நாள் மாட்டு பொங்கல் ..,இன்று காலை கிட்டத்தட்ட அனைவரின் வீட்டிலும் இட்லி செய்வார்கள் இது சிலருக்கு தினமும் நடக்கும் சாதாரண நிகழ்வாகவும் வேறு சிலருக்கு வருடத்தின் ஒரு நாள் மட்டுமே நடக்கும் சரித்திர நிகழ்வாகவும் இருக்கும்.காலை உணவு முடிந்ததும் ஊரில் ஆண்கள் யாருமே இருக்க மாட்டார்கள் ஏனெனில் எந்த வீட்டிலும் மதியம் சமைக்க மாட்டார்கள் அப்படி இருந்து தான் தீருவேன்  என்று நீங்கள் அடம் பிடித்தால் மதியம் காலையில் சுட்ட இட்லி மட்டுமே சாப்பிட கிடைக்கும்.., ஆகையால் மாட்டிற்கு மாலை,கொம்பிற்கு பெயிண்ட் வாங்கவும் இரவு சமையலுக்கு தேவையான பொருட்கள்  வாங்கவும் புது படம் பார்க்கவும் துணி எடுக்காதவர்கள் புது துணி எடுக்கவும் என எல்லோரும் பட்டுகோட்டை சென்று விடுவார்கள்.
         ஒரு ஐந்து மணி வாக்கில் திடலுக்கு மாடுகளை ஓட்டி வருவார்கள் முதலில் ஐயர் வீட்டிலிருது மாடு வரும் பிறகு ஒவ்வொரு கரையாக ஏழு கரை மாடுகளும் திடலுக்கு வந்து சேரும் " ரொம்ப குறைஞ்சுட்டுல" , " எனக்கு கல்யாணம் ஆனா வருஷம் மேலத்தெரு முக்கு வரைக்கும் மாடு இருதுச்சு இப்போ என்னடான்னா தண்ணி டேங்க கூட தாண்டல " இதெல்லாம் வருடம் தவறாமல் கேட்க்கும் குரல்கள்.  அதன் பின்னர் அவை மாட்டு கொட்டகையில் கட்டப்படும். பிரண்டையை ஒன்றாக பிணைத்து தோரணம் போல ஒன்று தயார் செய்து மாட்டு கொட்டகை வாசலில் கட்டப்படும் வெள்ளை மற்றும் மஞ்சள் மிரத்தில் பூக்க கூடிய ஒரு வகை பூவை (பெயர் தெரிய வில்லை ) நாணலில் கட்டி மட்டுக்கு மாலை இடப்படும்.
          வீட்டிலேயே மாட்டு கொட்டகை உள்ளவர்கள் நேற்று போட்டா திட்டாணியில் சாணி மொழுகி பயன்ப்படுத்துவர் மற்றவர்கள் புதிதாக திட்டாணி போடுவார்கள். அதே போல் கோடு வெட்டி சக்கரை பொங்கல் மட்டும் வைப்பார்கள். அது முடிந்ததும் திட்டாணியில் இலை போட்டு  பொங்கல் கொட்டி அதனுடன் வாழைப்பழம் மற்றும் பால் கொண்டு  நன்றாக பிசைந்து அனைவருக்கும் கொடுப்பார்கள்.அவ்ளோ டேஸ்டா  இருக்கும் தெர்யுமா..,அதன் பிறகு மாட்டுக்கு பொங்கல் ஊட்ட படும்... பொங்கலோ பொங்கல் என்று சொல்லியபடி தாம்பாளத்தில் கரும்பால்  அடித்து கொண்டும் அடுப்பூதும் குழலில் சங்கு போல் வாயில் வைத்து ஊதி கொண்டும் சுத்தி வருவோம்..,
      தை மூன்றாம்  நாள் பெரிய பொங்கல்.., இன்று தான் முக்கியமான தினம் காலை எழுந்த உடன் மாட்டிற்கு அலங்காரம் நடக்கும் கொம்பிற்கு பெயிண்டும் polythene பேப்பர்-ல் செய்த மாலையும் போட படும் அவை இரண்டும் அவர்கள் எந்த கட்சியினர் என்பதை காட்டும் படி இருக்கும்.  இன்று தான் அனைவரும் புது ஆடை அணிவார்கள். இரண்டாம் நாள் மாலை சென்ற அதே திடலுக்கு அனைவரும் புத்தாடையோடு வருவார்கள் வேலை காரணமாக முதல் நாள் வரமுடியாதவர்கள் கூட இன்று வருவார்கள். நேற்று மாலை வந்த அதே வரிசையில் மாடுகள் வரும். அவைகள் அந்த திடலுக்கு வந்து சேர்வதற்கு முன்னரே அந்த polythene  மாலைகளை  அறுக்க ஒரு கூட்டம் காத்திருக்கும் அது தான் எங்கள் ஊரில் ஜல்லிக்கட்டு.மாடுகள் அனைத்து வந்து அரைமணி நேரத்திற்கு  பிறகு மறுபடி அனைத்தும் திரும்ப ஓட்டி செல்லப்படும்..,அதன் பிறகு ஓட்டபந்தயம்,சாக்கு ஓட்டம் ,தவளை ஓட்டம் , முறுக்கு கவ்வுதல் , காலி பாட்டிலை நிரப்புதல் , அதி வேக சைக்கிள் பந்தயம் , மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி , பாட்டு போட்டி , மாறு வேட  போட்டி  என பலவகையான போட்டிகள் இரவு  வரை இனிதே நடந்து பரிசு வழங்கும் நிகழ்ச்சியோடு முடியும்.., திருப்பூர் தவிர மற்ற ஊர்களில் வேலை செய்வோர் அன்று இரவும் திருப்பூரில் வேலை செய்பவர்கள் அடுத்த நாள் இரவும் கிளம்புவார்கள் "சித்திரை திருவிழாவிற்கு லீவ் கிடைக்குமா என்ற கேள்வியோடு .....,,"

டிஸ்கி :- அனைவருக்கும் இனிய  பொங்கல் நல்வாழ்த்துக்கள்...,
.
.

13 comments:

Anonymous,  January 13, 2010 5:31 PM  

தமிழ் புத்தாண்டு , நாளை இல்லை .. சித்திரை ஒன்று தான் . விளக்கத்துக்கு இந்த சுட்டியை பாருங்கள்
http://mohanacharal.blogspot.com/2009/01/blog-post_21.html

Kumar January 13, 2010 5:31 PM  

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

சி. கருணாகரசு January 13, 2010 5:34 PM  

பகிர்வுக்கு நன்றிங்க......

தங்களுக்கு எனதினிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வானம்பாடிகள் January 13, 2010 5:47 PM  

ம்ம். நல்லாருக்கு.பொங்கல் வாழ்த்துகள்.

பின்னோக்கி January 13, 2010 6:32 PM  

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Chitra January 13, 2010 8:05 PM  

அருமையாக தொகுத்து சொல்லி இருக்கீங்க. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) January 13, 2010 8:05 PM  

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) January 13, 2010 8:13 PM  

இனிய தமிழர் திருநாள் நல்வாழ்துக்கள்

Priya January 14, 2010 3:06 AM  

அழகான தொகுப்பு, அருமையான விளக்கம்!
என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!

Sangkavi January 14, 2010 8:54 AM  

பொங்கலோ பொங்கல்

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

cheena (சீனா) January 14, 2010 9:01 AM  

அன்பின் ஆனந்த்

தஞ்சைத் தரணியின் பொங்கலா - அசைபோட்டு ஆனந்தித்து எழுதப்பட்ட இடுகை - சொந்த ஊரில் பொன்கல் கொண்டாடியதை அருமையாக விவரித்து இடுகை இட்டது பாராட்டுக்குரியது.

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்

Dr.எம்.கே.முருகானந்தன் January 14, 2010 2:53 PM  

நல்ல பதிவு. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

பேநா மூடி January 19, 2010 12:23 PM  

@Anonymous
விளக்கம் தேவை இல்லை.. சித்திரையில் தான் நாங்கள் கொண்டாடி வருகிறோம்....

@குமார்
வாழ்த்துக்களுக்கு நன்றிங்க...

@சி. கருணாகரசு
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

@வானம்பாடிகள்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

@பின்னோக்கி
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

@சித்ரா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

@உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com)
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

@பிரியா
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

@சங்கவி
பொங்கலோ பொங்கல் தான்...,

@cheena (சீனா)
உங்களுக்கும் தான்...

@Dr.எம்.கே.முருகானந்தன்
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க...,

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP