என் கதையும் எதிர் வினையும்...,

>> Thursday, December 31, 2009

       நான் இந்த கதையை எழுதி என்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பிறகு என்னுடைய சாட் லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் என்னுடைய கதையை படித்து விட்டு கருத்து சொல்லுமாறு அழைப்பு விடுத்தேன் முதல் எழுத்து எழுதிய குழந்தை அனைவருக்கும் எழுதிக்காட்டுவது  போல  .., கிட்டத்தட்ட அனைவரும் படித்து விட்டு கருத்து சொன்னார்கள்.., கிட்ட தட்ட அனைவரும் அதில் இருந்த குறைகளை சுட்டி காட்டினார்கள் ..,The Identity போன்ற படங்களை பார்த்து விட்டு விளக்கமாக விமர்சனம்  போடும் ஹாலிவுட் பாலா,எல்லா படங்களையும் பார்த்து விட்டு விமர்சிக்கும் ஜெட்லி  உட்பட பலரும் சொன்னது  புரியவில்லை.எனக்கு தெரிந்து நா சொல்ல வந்ததை முழுமையாக புரிந்து கொண்டது நான் மட்டுமே..,
     அப்புறம் இது நான் லினியர் கதை அப்படின்னு நெனச்சேன் அதும் இல்லையாம் கேபிள் அண்ணன் சொன்னார். நிகழ்வு கதைகளை எழுதி பழகுமாறு போஸ்டன் ஸ்ரீராம் சொன்னார்.இந்த கருத்துக்கள் என்னை கண்டிப்பாய் ஊக்க படுத்தும் மற்றும் இந்த கருத்துக்களால் எனக்கு பெரிதாய் ஒன்றும் வருத்தம் இல்லை முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையும் முதல் முறை மிதிவண்டி ஏறும் சிறுவனும் முதல் முறை காதலிக்கும் விடலையும் தவறி விழுவதில் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை விழாமல் இருந்தால்  வேண்டுமானால் ஆச்சர்யப்படலாம்.எனக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு என்னுடைய அடுத்த கதை குறைந்தது உங்களுக்கு புரியும் படி இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்...
         போன வரியுடன் முடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தனை ஆக்கப்பூர்வமான கருத்துக்களோடு இன்னொன்றும் வந்தது.., ஆணை திறந்ததும் ஆற்றில் மிதக்கும் மலத்தை போல "என்ன ம******************************
கோவி கண்ணனை பார்த்து கத்துக்கோடா,சுமஜ்லாவை பார்த்து கத்துக்கோடா,சந்தனமுல்லையை பார்த்து கத்துகோடா, விதூஷைப்பார்த்து கத்துக்க்கோடா,அதிஷாவைபார்த்து கத்துக்கோடா, நர்சிம்மை பார்த்து கத்துக்கோடா,டோமர்,
கதை எலுதுறானாம் வெள்று,முதல்ல படி,அப்புறம் எலுது,எல்லாம் எடுத்தவுடனே இப்புடி *************************************** ???" . * போட பட்ட பகுதிகளை பிரசுகரிக்க விரும்ப வில்லை. எனக்கே தெரியும் மேல்குறிப்பிட்ட எவர் போலவும் இப்பொழுது என்னால் எழுத முடியாது அதை பண்பான வார்த்தைகளால் சொல்லி இருக்கலாம் .ஆகவே இந்த பதிவையும் படிக்குமாறு அனைவருக்கும் சுட்டியை அனுப்ப போகிறேன்.., நீங்களே  சொல்லுங்கள்..,இப்பொழுது  எனக்கு எழுத தகுதி இல்லை என்றால் சொல்லுங்கள்  அந்த தகுதி வரும் போது எழுதி கொள்கிறேன் இப்போது பதிவுகளை படிப்பதோடு  நிறுத்தி கொள்கிறேன்...
 .
.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 
.
.

Read more...

ரெண்டு படம் போதும் ஹாலிவுட் பிச்ச வாங்க...,

>> Wednesday, December 30, 2009


     
  நேற்று தான் ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பார்த்தேன்.நிச்சயமாய் ஒரு பிரமாண்டமான படம் தான்.ஆனால் தமிழ் படமா என்பது தான் கொஞ்சம் சந்தேகமாக உள்ளது.படம் ஆரம்பிக்கும் போது ரீமா சென்னும் ஒரு பெண்ணும்  ஆங்கிலத்தில் எதோ கெட்ட வார்த்தைகளாக பேசுகிறார்கள்.அப்புறம் தான் தமிழ் சினிமா காணாத பிரமாண்டங்கள் எல்லாம் வரிசையாக வருகின்றன கார்த்தி,ரீமா,ஆண்ட்ரியா என மூன்று பேரும் பாலைவனத்தில் நடந்து போகிறார்கள் , இரண்டு படைகள் மோதி கொள்கின்றன .., என்ன  இதெல்லாம் மம்மி படத்துல பாத்தது போலவே இருக்கா   வாய்ல அடி.., வாய்ல அடி..,வாய்ல அடி.., அவனவன் ஹாலிவுட்-ல ஆயிரம் கோடில எடுக்குறத  எல்லாம் நம்ம ஆளுங்க முப்பது கோடில எடுக்குறாங்க. இப்படி மட்டும் நாலு படம் வந்துச்சுன்னு வைச்சுக்க ஹாலிவுட் என்ன ஹாலிவுட் ஜாலிவுட்யே நம்ம கிட்ட பிச்ச தான் வாங்கணும்.., இப்ப போய் மம்மில  பாத்தேன் தாடில பாத்தேன்னு சொல்லிக்கிட்டு ..,


        அப்புறம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா இன்னொன்னும் நடக்க போகுது என்னான்னு நீங்க கி-போர்ட ப்ராண்டுறது  நல்லா தெரியுது..,நம்ம வருங்கால முதல்வர் சரத் குமார் ஜக்குபாய் படத்துல ஸ்ரேயாவுக்கு அப்பாவ நடிச்சிருக்காராம் இப்போ சொல்லுங்க .., ஹாலிவுட்,ஜாலிவுட்,பாலிவுட்,காலிவுட் இப்டி எத்தன வுட் இருக்கு எதுலயாவது இப்டி ஒரு படம் வந்துருக்கா ..,என்னது  இது எதோ டேக்கன் அப்படிங்குற இங்கிலீஷ் படத்துலேந்து சுட்டதா .., மறுபடியும் வாய்ல அடி.., வாய்ல அடி.., இது நாளா தான் தமிழ் நாடு உருப்படமாட்டேன்குது .., நா சொல்றத மட்டும் எழுதி வைச்சுக்கோ ..,இது மாதிரி படம் நாலு வேண்டாம் ரெண்டு படம் போதும் ஹாலிவுட் என்ன ஹாலிவுட் ஜாலிவுட்யே நம்ம கிட்ட பிச்ச தான் வாங்கணும்..,

டிஸ்கி:- ஆமா .., இந்த ஜாலிவுட் எங்க இருக்குனு தெரியுமா???????
.
.

Read more...

சிரித்தாள்...,முறைத்தாள்...,



எல்லா வித்தியாசங்களும்
தெரியவதில்லை என்றேன்
புரியவில்லை என்றாள்
பூவுக்கும் உனக்கும்
என்றேன் சிரித்தாள்
பொய்க்கும் எனக்கும்
என்றேன் முறைத்தாள்

டிஸ்கி :- ஆகா.., கவித கவித...
.
.

Read more...

2009-ன் டாப் டென் படங்கள்...

>> Tuesday, December 29, 2009

        எல்லா வருடங்களை போலவும் இந்த வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகி உள்ளது .., அவற்றுள் சிறந்த பத்து படங்களை பட்டியலிட்டு உங்கள் முன் படைப்பதே எங்களின்  நோக்கமாகும். ஏற்கனவே பல இடங்களில் இது போன்ற தரவரிசையை நீங்கள் பார்த்து இருந்தாலும் இது மட்டுமே தங்கள் அனைவரின் எண்ண ஓட்டத்தை தெரிந்து கொண்டு பட்டியலிடப்பட்ட வரிசையாகும்..,

10 .உன்னை போல் ஒருவன்
            கமல்ஹாசன் தன்னுடைய திரை வாழ்வின் ஐம்பதாவது வருடத்தில்  நடித்திருக்கும்  படம். இந்த படம் வெற்றி படம் தான் என்ற போதிலும் மிகபெரிய வெற்றியை பெற முடியவில்லை. இதுவே சன் பிக்சர்ஸ் வெளியிடாக இருந்திருந்தால் இந்த வரிசையில் இப்படம் முதல் இடத்தில் கூட இருந்திருக்கலாம்.
 உன்னை போல் ஒருவன் - இடம் மாறி

9 . ஆதவன் 
             அயன் வெற்றிக்கு பிறகு சூர்யாவும் தசாவதாரத்துக்கு பிறகு ரவிக்குமாரும் இணைத்த படம் என்பதால் அதிக எதிர் பார்ப்புடன் வெளி வந்த படம். ஆரம்பத்தில் தோல்விபடமாகவே அறியப்பட்ட இந்த படம்.சன் டி.வியில் விளம்பரம் போட தொடங்கிய பின் பற்றவைக்க பட்ட பட்டாசாய் வெடித்து சிதறியது என்றால் அது மிகையாகது..,
ஆதவன் - மழைக்காலத்தில் 

8 . The Outlander 
          ஆங்கில படமாக இருந்தாலும் தமிழ் படங்களுக்கு இணையாக ஓடிய திரைப்படம். இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
 The Outlander - The Record Holder

7 . தீ
            மிக சிறய பட்ஜெட்டில் எடுக்க பட்டு மிக பெரிய வெற்றியை பெற்ற படம்.., படத்தில் இடம் பெற்று இருந்த தீ போன்ற வசனங்களால் ஏ/சி அரங்கம் கூட சுட்டதாக ரசிகர்கள் கூறியதை ஏற்கனவே செய்திகளில் பார்த்து இருப்பிர்கள்.இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
 தீ - காட்டு தீ 

6.மாசிலாமணி 
             படத்தின் பாடல்களுக்கு அரங்காமே எழுந்து ஆடியதாக செய்திகளில் வந்தது நாம் அனைவரும் அறிந்ததே . மிக சிறந்த பொழுதுபோக்கு படமான இது புத்திசாலித்தனமான திரைக்கதையால் நாம் அனைவரையும் ஈர்க்கிறது. இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
 மாசிலாமணி - மகுடத்தில்

5 . நினைத்தாலே இனிக்கும் 
                  நாம் அனைவரின் கல்லூரி பருவத்தையும் கண்முன்னே நிறுத்திய படம். படம் பார்த்த அனைவரும் கல்லூரி ஞாபகத்தில் அரங்கத்தில் விழுந்து புரண்டு அழுததும் அது செய்திகளில் வந்ததும் நாம் அறியாதது அல்ல. கல்லூரி மாணவர்களின் தேசிய கீதமாகவே மாறிப்போன பாடல்களை கொண்டப்படம்.. இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
நினைத்தாலே இனிக்கும்  - திகட்ட திகட்ட 


4 .கண்டேன் காதலை 
                 சாதாரண ஹீரோவாக இருந்த பரத்தை நட்சத்திர அந்தஸ்துக்கு இழுத்து சென்ற படம். தன்னை விட தமனா சிறப்பாக நடித்ததாக கரீனா கபூர் எங்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பினார் என்பதை இங்க தெரிவிக்க விழைகிறோம்.இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
கண்டேன் காதலை - கண் இருப்போர்க்கு  எல்லாம் 

3 .படிக்காதவன் 
                 இந்த வருடம் வெளிவந்த படங்களுக்குள் மிகபெரிய வெற்றி படங்களுள் இதுவும் ஒன்றாகும்.படத்தின் நகைச்சுவை பகுதிகள் பற்றி பேச நெனைக்கும் போதே எனக்கு சிரிப்பு போது கொண்டு வருவதால் உங்களுக்கு சொல்ல முடியவில்லை. இந்த படத்தில் மிக கொடுரமான வில்லனாக சுமன் நடித்து எல்லோரையும் பயமுறுத்தியதும் அது செய்திகளில் வந்ததும் நாம் அறிந்ததே..,இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
படிக்காதவன் - பட்டம் பெற்றவன் 

2. அயன் 
      சாதாரண வெற்றி படமாக இருந்திருக்க வேண்டியது சன் பிக்சர்ஸ் கிட்ட வந்ததால் விண்ணை முட்டும் வெற்றியை பெற்றது. படத்தின் பாடல்கள் அனைத்தும் ஒரு நாளைக்கு ஐம்பது முறை தொலைக்கட்சியில் போடும் அளவிற்கு மாபெரும் வெற்றியை பெற்றது..இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
அயன் - அயர்ன்

1 . வேட்டைக்காரன் 
யாருமே சீண்டாமல் இருந்த  படம் சன் பிக்சர்ஸ் வெளி இடுகிறார்கள்  என்றதுமே தீ  பற்றிக்கொண்டது.  மிக பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்த படம் அந்த எதிர்பார்ப்பை பலமடங்கு திருப்தி படுத்தியது என்றால் அது மிகையாகது.தமிழ் சினிமா வரலாற்றிலேயே திரைக்கு வந்து அடுத்த நாளே மெகா ஹிட்டான ஒரே படம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.இன்னும் தொடரும் வேட்டைக்காரனின் வேட்டை அடுத்த ஆண்டும் தொடரும் என்பது அனைவரும் அறிந்ததே..,இந்த படம் இந்த அளவிற்கு வருவதற்கு பல வகையிலும் உழைத்த கலாநிதி மாறன் அவர்களுக்கும் மற்ற தொழில்நுட்ப்ப வல்லுனர்களுக்கும் பாராட்டுக்கள்..,
வேட்டைக்காரன் - வெற்றிக்காரன்

டிஸ்கி :- இப்படி தான் 2010-ம் வருடம் ஜனவரி முதல் நாள் சன் டி.வி-ல போடுவாங்கோ...
.
.

Read more...

போய் தொல 2009..,

>> Monday, December 28, 2009



சிரித்த நாட்களை
எண்ணி எண்ணி
எண்ணி பார்த்தேன்..,
பால்யப்பருவ நட்சத்திர
எண்ணலாய் போனது..,

அழுத  நாட்கள்
அடங்கி தான் போனது
என் விரல்களுக்குள்..,
குறைவு தான்
வாத்தியார் பிரம்பின்
விளாசல் போல..,

சிரிக்கவும் இல்லாமல்
அழவும் இல்லாமல்
உப்பில்லா இட்லி
போல உயிரோடிருப்பதை
உறுதி மட்டும் செய்த நாட்கள்
சொல்வதற்கில்லை என்றாலும்
நிறையவே உண்டு..,

எப்போதும் பிரிய
மாட்டோம் என்று சூளுரைத்த
தோழரும் தோழியரும்
ஓர் சுபதினத்தில்
பரீட்சை  எழுதி
பிரிந்து  போனோம்...,

இன்னும் கூப்பிடாத
எதிர்கால முதலாளி
எப்போது கூப்பிடுவான்
என்ற எதிர்பார்ப்பு
இன்னும்   முடியவில்லை...,

தீதும் நன்றும்
பிறர் தர வாரா
தெரிந்தும் பழி  போடுகிறேன்
உன் மீது...,
ஆகவே கொஞ்சம்
அழுத்தியே சொல்லுகிறேன்
போய் தொல
இரண்டாயிரத்து ஒன்பதே...
.
.

Read more...

யார் அவள்-கிட்ட தட்ட முதல் கதை..,

>> Saturday, December 26, 2009

2009 ...., மீண்டும்  ஓர்  மழை நாள்..,
"மழை இருந்தாலும் பரவால்ல  ஊருக்கு வந்துடவா  ?" என்று ஆறாவது முறையாய்  அலைபேசியில் கேட்டாள்.வேண்டாம் என்று அத்தனை முறையும் தடுத்து விட்டான். அவள் அண்ணன் மகள் திருமணத்திற்காக மூன்று  வயது மகனையும்   ஐந்து  வயது மகளையும் கூட்டிக்கொண்டு   ஊருக்கு போனவள் ஆடைமழை அங்கேயே தங்கவைத்து விட்டது.இந்த நாட்களில் சாப்பாட்டுக்கு சற்று சிரமப்பட்டு தான் போய்விட்டான்.மழை பெய்து கொண்டிருந்ததால் குடையுடன் பேருந்து நிறுத்தம் நோக்கி நடக்க தொடங்கினான் "பள்ளி கல்லூரிக்கெல்லாம் விடுமுறை...ஆனா நாம வேலைக்கு போகணும் "என்ற முனகலோடு ...,

1995 ...,ஓர் மழை நாள்..,
"இவ்வளோ மழை பெய்யுதே இன்னிக்குமா பரீட்சை வைக்கணும் .., நாதாரிங்க தள்ளி வைக்க கூடாதா" என்று கொஞ்சம் சத்தமாகவே திட்டி கொண்டிருதான் .பேருந்து வந்தது பெரிதாக கூட்டம்  இல்லை ஆனாலும் படியில் நிற்க முடியாது என்ற காரணத்தினால் படியிலும் நிற்காமல் உள்ளேயும் செல்லாமல் ஓர் இடைப்பட்ட இடத்தில் நின்று கொண்டான்.எதேட்சையாய் திரும்பிய போது 
அவளை பார்த்தான் சற்று அடிக்கும் சிகப்பு நிறத்தில் நாகரிக வெளிப்பாடாய் சுடிதார் அணிதிருந்த தேவதையை...,

பேருந்து வந்து  விட்டது .சற்று கூட்டம் அதிகம் தான் எனினும் படியில் யாரும் நிற்காத காரணத்தால் கொஞ்சம் நிம்மதியாகவே ஏறினான்.உள்ளே செல்ல முடியாத அளவிற்கு கூட்டம் இருந்ததால் படிக்கு பக்கத்திலேயே நின்று கொண்டான்.எதேட்சையாய் திரும்பிய போது பார்த்தான் அவளை சற்று அடிக்கும் சிகப்பு நிறத்தில்  ஆங்கிலத்தில் கிறுக்கப்பட்ட பனியனும் ஜீன்சும் அணிந்திருந்த தேவதையை.இரண்டாம் முறை பார்த்த போது தான் பொறி தட்டியது அட.., இது அவளே தான் ஆனால்..,

இரண்டாம் முறை திரும்பிய போதே கவனித்து விட்டாள்.அத்தனை மழையிலும் சுட்டது அந்த பார்வை  எனினும் இவன் பார்வையை திருப்ப அந்த சூடு போதவில்லை.குளிருக்கு இதமாய்  சிறு சிறு இடைவெளியில் சுடும் நெருப்போடு பயணத்தை தொடர்ந்தான் கல்லூரியை கடந்தான் பரிட்சையை மறந்தான்.அவள் இறங்கிய இடத்தில் இறங்கினான் பெயர் கேட்டான் பிய்ந்துவிடும் என்றாள்.


ஆனால் அவள் மகளாய் இருக்குமோ இல்லையே இவ்ளோ பெரிய மகள் இருக்க வாய்ப்பில்லையே .. அப்போ அவளோட தங்கையா இருக்குமோ இல்ல அவளே ஓவர் மேக் அப்ல வந்து இருக்காளா.., குழப்பத்துடன் அவள் பனியனில் உள்ளதை படிக்க தொடங்கிய போது சுட்டது...

தைத்து கொள்ளலாம் என்று மொக்கை போட்டன் ., சிரிக்க துடித்த உதடுகளை கடித்த படியே  ஒழுங்கா போய்டு எங்க ஏரியா .., என்று முடிக்கும் முன் நான்கு கண்கள் முறைப்பதை உணர்ந்து  திரும்ப நினைத்த போது..,

அவளுடைய பார்வை.., அவனை தானா  என்று திரும்பி பார்த்து கொண்டான். கண்டிப்பாக நிச்சயமாய்அவனை தான் .அப்புறம் அவள் பனியனை அவ்வளவு நேரம் பார்த்து கொண்டிருந்தால் முறைக்காமல் என்ன பண்ணுவாள்.தன்னுடைய கைப்பைக்குள் கை விட்டாள்...,

முதுகில் விழுந்தது முதல் அடி அதன்  பிறகு கணக்கு இல்லை.., நான்கு கைகள் அவன் உடம்பில் சதிராடி விட்டன..,ஆஸ்பத்திரியில் படுக்க வைத்து விட்டனர்.., மூன்றாம் நாள் மழை குறைந்திருந்த போது அவள் வந்தாள் ..., அழுதாள் மொக்கை போட்டு சிரிக்க வைத்தான்  அடுத்த  நாளும்  வந்தாள் ..,

செல் போனை எடுத்து கண்களால் இவனை சுட்ட படியே  பேசினாள்.., பேசி முடித்து திரும்பி பார்த்தாள்..,அங்கு  இன்னும்  நான்கு கண்கள் இவனை முறைத்த படி இருந்தன .திரும்பி நின்றுக்கொண்டான் ..,

காதலிக்கிறேன் என்றான்.., சிரிக்கவும் இல்லை அழவும் இல்லை மௌனமாய் இருந்தாள்.., கொஞ்ச நேரம் கழித்து போய்விட்டாள்.., அடுத்த நாள் சாப்பாடு கொண்டு வந்தாள் சிரித்த படியே..,


பழைய ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு ...,சீ.. பாத்ததுக்கெல்லாமா அடிப்பாங்க.., திரும்பி பார்க்கலாமா என்று நினைத்த போது..,

நாளை வீட்டுக்கு செல்வதாக சொன்னவன் அப்படியே நேற்றைய கேள்விக்கு பதில் கேட்டான் . நாளைக்கு  சொல்வதாக சொல்லிவிட்டு போனாள்.மதியம் கிளம்ப வேண்டியவன்  மாலை தான் கிளம்பினான் அதுவரை வரவே இல்லை...,


ஒரு கை அவன் தோளில் அழுத்தமாக பதிந்தது.., அந்த கை.., அந்த கை  அவளுடைய கையாகவும் இருக்கலாம்.., அவர்களின் கையாகவும் இருக்கலாம்.., டிக்கெட் கேட்டு கண்டக்டரின்  கையாகவும் இருக்கலாம்.., யார் கையா இருக்கும்??????
 



.....................(முற்றும்)..............

டிஸ்கி :- கிட்ட தட்ட இது தான் என்னுடைய முதல் கதை (இதற்கு முன்பு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது போட்டிக்காக ஒரு கதை எழுதி இருக்கேன்..,இந்த கதையின் (?) நிறை குறைகளை கூறுமாறு பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்... அப்புறம் “செம்மொழிப் பைந்தமிழ் மன்றம்” வழங்கும் பரிசுப் போட்டிக்கும் இந்த கதையை அனுப்பி உள்ளேன்(என்னா  ஒரு தைரியம்..)..,
.
.

Read more...

ஓர் விளக்கம்..,இரு தகவல்..

>> Thursday, December 24, 2009

         என்னுடைய போன பதிவிற்கு பாராட்டுக்களும் வசவுகளும் வந்து விழுந்தன.. அது முக்கியம் இல்லை ஆனால் அதற்க்கு நான் வைத்த தலைப்பு தான் பிரச்சனை.., எனக்கு தொடர்ந்து எழுத ஊக்கம் கொடுத்து கொண்டிருக்கும் வானம்பாடிகள் , இரும்பு திரை அரவிந்த் போன்றவர்கள் கூட ஏன்  இப்படி தலைப்பு என்று கேட்டார்கள். இன்பம் X துன்பம் ,
மகிழ்ச்சி X இகழ்ச்சி என்றே எதிர்சொல்  படித்து பழக்க பட்டவனான நான்  அதே முறையில் தான் தேவுடியாள் என்ற அந்த  வார்த்தைக்கு என்ன எதிர் சொல்  என்ற நோக்கில் அப்படி ஒரு தலைப்பு வைத்தேன்.., மற்றபடி அந்த தலைப்பு உங்களுக்கு  ஒரு அருவிருப்பு உணர்வை உருவாக்கி இருந்தால்  இனிமேல் இப்படி நடக்காது என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்...
        மேலே நான் வருத்தம் தெரிவித்தது தலைப்புக்கு தானே தவிர கருத்துக்கு அல்ல..,அந்த கருத்துக்கள் சொன்ன அதே நிலைப்பாட்டில் தான் இப்பவும் இருக்கிறேன்..,
//எனவே பத்திரிக்கையை குறை சொல்லிப்பிரயோசனமில்லை. தகுந்த கவனிப்புகளை கல்லூரி நிர்வாகமும் , அறிவுரைகளை பெற்றோரும் மேற்கொண்டால் மட்டுமே முடியும்.// இப்படி ஒரு கருத்தை ஒரு நண்பர் பதிவு செய்து இருந்தார். தங்களுக்கு ஒன்றை மட்டுமே சொல்ல விழைகிறேன் எந்த அளவிற்கு கட்டுப்பாடு அதிகரிக்கிறதோ அதே அளவிற்கு அவை மீறவும் படும் இது மாற்றமுடியாத நியதி.., நண்பர் எப்பூடி சொன்னது போல் உடை தான் கலாச்சாரம் என்றால் ஆடை அணிந்ததே கலாச்சார மீறல் தான்.., உணவு தான் கலாச்சாரம் என்றால் சமைக்க தொடங்கியதே கலாச்சார மீறல் தான்.., யார் அழுது புரண்டாலும் , அதட்டி ஒடுக்கினாலும் , புகுந்து அடித்தாலும் இந்த மாற்றம் மட்டும் உறுதியாய் நடந்தே தீரும் ஏனெனில் இது நண்பர்  ஹாலிவுட் பாலா சொன்னது போல் இது எவலுஷன் யாராலும் தடுக்க முடியாது...



சரி இந்த டெர்ரர் விஷயத்தையெல்லாம் விட்ருவோம் அதை விட டெர்ரர் விஷயம் ஒன்னு இருக்கு .., என்னன்னா வேட்டைக்காரன் விளம்பரதால டர்ர்ராகி சன் பக்கமா போகாத மக்கள் அனைவரும் நாளை காலை எட்டு மணிக்கு சன் டி.வி முன் ஆஜராகுமாறு கேட்டுக்கொள்ள படுகிறார்கள் ஏனெனில் சகலகலா வல்லவர் , சொல்லிலே வித்தைக்காரர் , குறள் கொண்ட பாட்டுக்காரர் தென்னகத்தின் மைக்கேல் ஜாக்சன் டி.ராஜேந்தர் பேட்டி கொடுக்கிறார் .ஆகவே மகாஜனங்களே நாளை பல்லு விளக்காட்டி  கூட பரவால்ல.., பாத்துடுங்க..பாத்துடுங்க.., பாத்துடுங்க..,

அப்பால...., நா கவித மாதிரி எழுதுற  எல்லாத்தையும் படிச்சிட்டு கஷ்டப்படுற உங்களோட கஷ்டத்த போக்க அந்நியன் தோன்றுவார்னு  எல்லாம்  நம்பிடாதிங்க ஏன்னா உங்க கஷ்டம் அதிகமாக போகுது என்ன அப்டின்னு கேக்குறிங்களா  நா கத மாதிரி ஒன்னு எழுதலாம்ன்னு இருக்கேன்.., எல்லாரும் அதை படிச்சிட்டு  ஹம்ம் ஹ்ம்ம்... நா ஒன்னும் சொல்லலப்பா ..,
.
.

Read more...

தேவுடியாள் X ????

>> Wednesday, December 23, 2009

        சமீபத்தில் ஒரு வார பத்திரிக்கையில்  ஒரு தலையங்கம் பெண்கள் ஹாஸ்டலில் தண்ணி அடிக்கிறார்கள் , தம்  அடிக்கிறார்கள்,ஆணுறை கிடக்கிறது என்றெல்லாம் நான் அந்த கட்டுரையை படிக்கவில்லை என்றாலும் அதில் என்ன எழுதி இருந்திருப்பார்கள் என்பதை ஒரு மாதிரியாக கணிக்க முடிந்தது...என்ன எழுதி இருப்பார்கள் அதில் கலாச்சாரம் கெட்டு விட்டது..,  மேற்கத்திய கலாச்சார பித்து பிடித்து அலைகின்றனர், கல்லூரி பெண்கள் கற்பை பெரிதாக மதிப்பதில்லை , மது , சிகரெட் எல்லாம் சாதாரணம் என்று சொல்லி அதை செய்யும் பெண்களிடம் பேட்டி கண்டிருப்பார்கள் அதை அட்டை படத்தில் போட்டு ஒரு சின்ன பரபரப்பை உண்டாக்கி சுழற்சியை கூட்டி காசு பார்த்து இருப்பார்கள்.தலைவர் பிரபாகரன் இறந்ததாக அறிவிக்க பட்ட போது அவர் பற்றிய உண்மையான விவரங்கள் தெரியாமல் கிராபிக்சில் அவர் படத்தை போட்டு காசு பார்த்த கயவர்கள்  தானே இவர்கள் .இந்த பதிவை  படிக்கும் ஒருவர் கூட அந்த பத்திரிக்கையை வாங்கி விட கூடாது என்ற காரணத்தினாலே அந்த பதிப்பு வந்து ஒரு மாதத்துக்கு பிறகு அதை பற்றி எழுதுகிறேன்..,
        அந்த கட்டுரையின் மூலம் என்ன பாதிப்பு வந்துவிடும் என்று நீங்கள் கருதலாம் . முதல் பாதிப்பு அதை படிக்கும் பட்டம் பெறாத கிராமத்து பெற்றோர்கள் எப்படி தங்கள் பெண்களை நகரத்தில் தங்கி படிக்க அனுமதிப்பார்கள்.என்னால் உறுதியாக சொல்ல முடியும் அந்த கட்டுரை நிச்சயம் ஒரு பெண்ணின் கல்வி கனவையாவது தீயிட்டு கொளுத்தி இருக்கும்..,இன்னொன்று அதில் நிரம்பி வழியும் ஆணாதிக்க பார்வை இதுவே ஒரு ஆண்கள் ஹாஸ்டலில் தண்ணி அடிக்கிறார்கள் தம் அடிக்கிறார்கள் என்று ஒரு தலையங்கம்  போடுங்கள் படிப்பவர்கள் சிரிப்பார்கள். அப்படி ஏதும் நடக்காத ஆண்கள் ஹாஸ்டல் பற்றி  வேண்டுமானால் தலையங்கத்தில் வரலாம்..,



       அடுத்த முக்கியமான விஷயம் கலாச்சார சீரழிவு , கற்பு. எது கலாச்சரம்? உடையா? சாப்பாடா?எது கலாச்சரம்? பதினைந்து வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் சுடிதார் அணித்து ஒரு பெண் வந்தால் ஏற இறங்க பார்ப்பார்கள்.என்னுடைய சித்தி சுடிதார் கேட்ட போது அவருக்கு  என்ன மாதிரி திட்டு கிடைத்தது என்பதை நான் அறிவேன்.ஆனால் என் தங்கையோ அவளை ஒத்த வயது பெண்களோ சுடிதார் அணிவதை யாராலும் தடுக்கமுடிவதில்லை. சொல்லுங்கள் எது கலாச்சாரம்?அப்படி நீங்க எதை கலாச்சாரம் என்று காட்டினாலும் அது கடந்த இருபது வருடங்களுக்குள் அடைந்த மாற்றத்தை எண்ணி பாருங்கள்.
        கற்பு? ஒரு பெண் திருமணதிற்கு முன்போ பின்போ கணவனை தவிர வேறு ஆண்களுடன் உறவு கொண்டால் அவளுக்கு தான் எத்தனை பெயர்கள் .., தேவுடியாள்,குச்சிக்காரி,விபச்சாரி,வேசி இன்னும் அவர் அவர் ஊருக்கு ஏற்றார் போல் நிறைய பெயர்கள்..,இத்தனை பெயர்களுக்கும் அதன்  எதிர்பாலினத்தில் பெயர்களே இல்லை என்பது தானே இங்கு நிலைமை .., ஏன் பெண்ணுக்கு மட்டும் இத்தனை கட்டுபாடுகள் விதித்த நாம் சமூகமும் கலாச்சாரமும் ஆணுக்கு விதிக்க வில்லை. ஏனெனில் இத்தனை சட்டங்களும் போட்டவர்கள் ஆண்கள் தானே..,தனக்கு மனைவியை வருபவள் தனக்கு மட்டுமே சொந்தமானவளாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் அப்படி நினைக்க தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்மல்லவா.., ஒரு ஆணுக்கு இல்லறத்தில் திருப்தி இல்லை என்றால் வேசியை தேடி போகிறான் ஆனால் ஒரு பெண் வேசியாக மாறிப்போகிறாள்..., இந்து மாற புரட்சியோ பூகம்பமோ தேவையில்லை தேவை வெறும் மனமாற்றம் மட்டுமே...


டிஸ்கி:-  இது என்னுடைய கருத்து மட்டுமே ..,உங்கள் கருத்தையும் இங்கு   பதிவு செய்யவும் பின்னூட்டத்தில்..,
.
.

Read more...

அழ வேண்டும் ...,



அழ வேண்டும்
என தோன்றியது
அவள் இருந்தால்
ஆண்மை தடுத்தது...,

சொல்லியே விட்டேன்
அவளிடம் சேர்ந்தே
அழலாம் என அழைத்தாள்
ஆண்மை தடுத்தது...,

போ  என்று
அழுத்தி தள்ளியும்
வா என்றாள்
வாழ்கை தடுத்தது...,
ஆண்மை முறைத்து...,
.
.

Read more...

ஒரு தமிழனின் கேள்விகள்..

>> Tuesday, December 22, 2009





  •  ரஜினி அரசியலுக்கு வருவாரா???
  • 2011 -ல் யார் ஆட்சியை பிடிப்பார்கள்?
    A )விஜய்
    B )சரத்குமார்
    C )ராமதாஸ்
    D )டி.ராஜேந்தர்
  • ஆதவன் படம் சிவாஜியின் வசூலை கடந்தது சாதனை படைத்தது போல் வேட்டைக்காரனும் , சுறாவும் சாதிக்குமா???
  • இளையராஜா இப்போலாம் இசை அமைக்கும் படங்கள் எல்லாம் மொக்கை ஆகிடுதா?? இல்ல அவர் மொக்கை படத்துக்கா இசை அமைக்குறாரா??
  • நேற்று தமனா இருபதாவது பிறந்தநாளை கொண்டாடினாராம்  அப்போ கேடில ரிலீஸ் ஆகும் போது பதினாறு வயசா? அந்த படமே ரொம்ப நாளா ஷூட்டிங்க்ல இருந்துச்சே...??(எனக்கு ஏன் தான் இத படிச்சப்போ கரக்காட்டகாரன் கவுண்டமணி வசனம் ஞாபகம் வருதோ...)
டிஸ்கி 1 .0 :- தமிழ்நாட்டில் ஈழம் , விலைவாசி என்று நிறைய பிரச்சனை இருக்கும் போது இதெல்லாம் ரொம்ப முக்கியமா என்று கேட்பவர்களுக்கு .... இது தான் முக்கியம் என்று நினைப்பவர்களே இங்கு அதிகம் என்று தெரிவித்து கொள்கிறேன்...

டிஸ்கி 1 .1  :- இத கேள்விகளுக்கு தங்களுக்கு பதில் தெரிந்தால் பின்னோட்டத்தில் தெரிவிக்கவும்...,
.
.

Read more...

மாமா வேலையும் மாயாஜாலமும்...,

>> Monday, December 21, 2009


 
     நேற்று இரவு விஜய் டி.வியில் நீயா நானா பார்த்து கொண்டிருந்தேன்.ஒரு தலைப்பில் மிக சுவாரசியாமான விவாதம் நடந்து கொண்டிருந்தது..,ஆனால் அதை விட சுவாரசியமான ஒன்று இருவரின்  கண்களில் நடந்துகொண்டிருந்திருக்கிறது யாருக்கும் தெரியாமல்..,உண்மைலேயே அது யாருக்குமே தெரியாமல் நடந்து முடிய வேண்டிய விஷயம்  தான் ஆனால் அதையும் டி.ஆர்.பி ஆக்கி விட்டனர் நம்மவர்கள்.எப்படி கண் காட்டினிர்கள் எப்படி ஜாடை காட்டினிர்கள் என்று கேள்வியை கேட்டு சந்தோசப்பட்டனர்  இதற்கு ஆக்க்ஷன் ரீப்ளே வேறு..., செல் போன் காரர்கள் பார்த்த மாமா வேலையை இவர்களும் பார்க்க தொடங்கி விட்டனர்.., என்ன இருந்தாலும் அவர் சொன்னது போல அந்த பொண்ணோட கன்னத்து குழியும் இடது கை மோதிரமும் அழகு தான் போங்க...,

  
        அதன் பிறகு இது ரோஸ் நேரம் பார்க்க தொடங்கினேன் போன மாதம் எனக்கு செய்வினை வைங்க  எனக்கு ஒன்னும் ஆகாது என்று சொன்ன ஒருவருக்கு என்ன ஆனது என்று காட்டுவதாக சொன்னதால் கொஞ்சம் ஆர்வத்தோடு பார்க்க தொடங்கினேன. அவரை காட்டுவதற்கு முன்னால அவருக்கு செய்வினை வைத்த ஒரு இளம் மந்திரவாதி பேசினார்.அவர் இயக்குனர் ஆகமுயற்சி செய்வதாகவும் இப்படி செய்வினை வைப்பதன் மூலம் தன்னை ஒரு தயாரிப்பாளர் ஒரு படம் கொடுப்பார் என்றும் பேசினார்..,அதை கூட  பொறுத்து கொள்ளலாம் அதன் பிறகு பேசியதை தான் ஹ்ம்ம் தாங்க முடில ... அவர் பேசியது இது தான் " நான் தான் இந்த சாவலில் ஜெய்க்க வேண்டும் என்று நிறைய பெண்கள் சொன்னார்கள்.குறிப்பாக லேடீஸ் காலேஜில்  இருந்து நிறைய போன் கால்ஸ் நீங்க தான் ஜெய்க்கனும் அப்டின்னு எல்லாரும் சொல்றாங்க.., நாலு பொண்ணுங்க என்கிட்டே ஆட்டோகிராப் கூட வாங்குனாங்க..,இதுலேந்தே நீங்க என்னோட சக்திய பத்தி  தெரிஞ்சுக்கலாம் " என்று  பேசி முடித்தார்.ஏன்டா இப்படிலாம் பேசுறீங்க அதும் நா சாப்பிட உக்காரும்போது தான் இந்த எளவெடுத்த நிகழ்ச்சியெல்லாம்  போடனுமா..,

   ஆனால் ஒரு விஷயம் அவர் பேசியது  மட்டும் உண்மையாக நடந்திருக்குமானால் பிரேமானந்தா முதல் கருவறை அர்ச்சகர் வரை உள்ள பிரபலங்களின் தொடக்கம் இது தான் ..ஆனா முடிந்தால் செய்வினை வைங்க அப்படின்னு சொன்னவருக்கு என்னாச்சுனு (ஒன்னும் ஆகி இருக்காது ...!) கடைசி வரை காட்டவே இல்லை.., அடுத்த  வாரம் பாருங்கோ அப்டின்னு சொல்லிட்டாங்க..,

டிஸ்கி:- முதல் முறையாக ராஜேஷ் குமாரின் கதையை தொடராக போடுவதாக கலைஞர் தொலைக்காட்சியல் விளம்பரம் போட்டார்கள் . ஆனால் போன வருடமே வின் தொலைகாட்சியிலோ ஜீ தமிழிலோ அவரது கதையை தொடராக போட்டதாக எனக்கு ஞாபகம்... அப்போ இரண்டாவதாக அப்டின்னு தானங்க விளம்பரம் போடணும்..,
.
.

Read more...

கவிதை எழுதுவது எப்படி...,

>> Saturday, December 19, 2009

     உரையாடல் கவிதை போட்டிக்கு ஒரு கவிதை அனுப்பலாம் என்ற ஆசை இருந்தாலும் எனக்கு கவிதை எழுத தெரியாத காரணத்தால் உங்களுக்கு கவிதை எழுதுவது எப்படி என்ற பாடத்தை மட்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளேன்...,



  • முதலில் எதாவது உண்மையான கவிஞரின் கவிதையை ஒரு மணி நேரம்  படிக்கவும்.
  • கொஞ்சம் நேரம் படுத்து தூங்கவும் .
  • எழுந்த பிறகு எந்த கவிதையெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ அதெற்கெல்லாம் பத்தாவது பிள்ளை போல்  விளக்கம் எழுதவும்.
  • பிறகு கண்ணை மூடி கொள்ளவும் .
  • இது தான் முக்கியமான கட்டம் மூடிய கண்ணை திறக்காமல் அந்த விளக்க கட்டுரையில் மௌஸில் ஒரு கிளிக் அப்புறம் என்ட்டர் பட்டனை ஒரு கிளிக்.இதை 15 நிமிடத்திற்கு செய்யவும்.
  • கண்ணை திறந்து பார்க்கவும் எந்த வரியிலாவது நாலு வார்த்தைக்கு மேல் இருந்தால் அதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உடைக்கவும்.
  • ஒரு முறை படித்து பார்க்கவும் பிடிக்காத வார்த்தைகளை உடனடியாய் யோசனை இன்றி அழிக்கவும்.
  • இதோ ஒரு சூடான கவிதை ரெடி..,
டிஸ்கி:- கவிதையில் பின் நவீனத்துவம் தான் இப்ப பேமஸ் ஆகவே உங்கள் கவிதையில் பின் நவீனத்துவத்தை புகுத்தவும்.  அது என்ன என்று தெரியாதவர்கள் என்னுடைய இந்த பதிவை படிக்கவும்..,பின் நவீனத்துவத்தில் முதல் கட்டுடைத்தல் இது தான் கவிதை எழுத பேனாவோ பேப்பரோ எடுக்க கூடாது.., கணினி மட்டுமே பயன் படுத்தவும்.

பின் குறிப்பு:- கணிணியில் என்ட்டர் பட்டன் சரியாய் வேலை செய்கிறதா என்பதை இரண்டு முறை சரி பார்க்கவும்..,
.
.

Read more...

புரட்சி தளபதி விஷாலுக்கு நோபல் பரிசு..,

>> Thursday, December 17, 2009

        இன்னும் நீங்கள் இன்றைய  தினதந்தியோ அல்லது தினகரனோ படிக்க வில்லை என்றால்உடனே வாங்கி படித்து விடுங்கள்..., ஏனெனில் இதை நீங்கள் தவறவிட்டால் நம்மிடையே  உள்ள மாபெரும் விஞ்ஞானியை நீங்கள் அடையாளம் காணமுடியாமல் போகலாம்..., யார் அந்த விஞ்ஞானி என்ற ஆவல் உங்களிடையே மேலிடுவதை  என்னால் உணர முடிகிறது அது வேறு யாரும் அல்ல  நம்முடைய புரட்சி தளபதி விஷால் தான்.அவர் அப்படி என்ன கண்டு பிடித்தார் என்று கேட்கிறீர்களா...., பென்ஹூர் படத்தை தமிழில் ரீமேக் செய்வதை விட  கடினமான செயல் ஒன்று உண்டென்றால் அது  மூன்று நாயகிகளுடன் சேர்ந்து நடிப்பது தான் என்ற மாபெரும் தத்துவத்தை கண்டறிந்து உள்ளார். இப்படி ஒரு மாபெரும் ஆராய்ச்சியை  செய்து நம்மை திக்கு முக்காட வைத்துள்ளார் நம்முடைய புரட்சி தளபதி .



    இரண்டு  படங்களில் 5 நாயகிகளுடன் நடித்த ஜீவனோ ,ஒரு படத்தில் 5 நாயகிகளுடன் நடித்த லாரன்ஸோ இவ்வளவு ஏன் எல்லா படங்களிலும் இரண்டு நாயகிகள் வைக்கும் அர்ஜுனோ கண்டு பிடிக்க முடியாத ஒரு மாபெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திய எங்கள் புரட்சி தளபதிக்கு இந்த ஆண்டின் சிறந்த ஆராய்ச்சியாளருக்கான  நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்..,
இவர் இதை மட்டுமா கண்டு பிடித்து உள்ளார் இந்த ஆண்டு மட்டும் இவர் கண்டு பிடித்த விஷயங்கள் எத்தனை எத்தனை ...,

    தன்னுடைய சத்யம் என்ற திரை காவியம் தோல்வி அடைந்ததிற்கு மக்களுடைய ரசிப்பு தன்மை குறைந்து போனது தான் காரணம் என்ற அறிய உண்மையை கண்டுபிடித்தவர்.

    சத்யம் படத்தினால் ஏற்பட்ட இழப்பிற்கு ஈடு செய்வதற்காக தோரணை என்ற அருமையான கதையை கண்டுபிடித்தவர்.

    என்னை போன்ற கவுண்டமணியின் தீவிர ரசிகர்கள் அவருக்கு இணையான ஒரு நடிகரை கண்டுபிடிக்க  முயற்சி செய்து கொண்டிருந்த சமயத்தில்  அதையும் கண்டு பிடித்தவர் இவர் தானே.அது யார் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றினால் நீங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கும் "தீராத விளையாட்டு பிள்ளை " படத்தை பாருங்கள்.கவுண்டமணி கிட்ட தட்ட ஓய்வு பெற்று விட்டார் என்று கவலைபடுபவராய்  இருந்தால் அந்த கவலை காக்கா போல் பறந்து போய் விடும் அந்த  அளவிற்கு நகைச்சுவையில் கலக்கி உள்ளாராம் நம்முடைய புரட்சி தளபதி.இதம் மூலம் அவருக்குள் இருந்த கவுண்டமணியை கண்டு பிடித்தவரும் அவர் தானே .
  சிந்தித்து பார் நோபல்  கமிட்டியே !..சிந்தித்து பார்..! இப்படி ஒரே ஆண்டில் ஏகப்பட்ட விஷயங்களை வளைச்சு வளைச்சு கண்டு பிடித்த இவரை தவிர வேறு யார் இந்த உலகத்தில் நோபல் பரிசு பெற தகுதியானவர்.., சிந்தித்து பார்...!

டிஸ்கி:- இத்தனை தகுதிகள் இருந்தும் இவர் தமிழன் என்ற காரணத்தினால் மட்டுமே இவருக்கு விருது மறுக்கப்படுமானால் நாளை மாலை 6 மணி முதல் 7 மணி வரை மீனம்பாக்கத்தில் இருந்து செல்லும் அத்தனை விமானங்களுக்கும் கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடக்கும் என்ற எச்சரிக்கை விடுகிறோம்..,
.
.

Read more...

கடவுள் தோன்றினால் ...,

>> Wednesday, December 16, 2009



இன்பம் துறந்து
காமம் துறந்து
இல்லறம் துறந்து
இன்னும் என்னவெல்லாம்
உண்டோ அத்தனையும் துறந்து
தவம் செய்ய போகிறேன்...,
கடவுள் தோன்றினால்
நீ இருக்கிறாயா என்று கேட்க...,
.
.

Read more...

வாழிய பல்லாண்டு...,

>> Saturday, December 12, 2009




நீ...,
யாரையும் ஏமாற்றியதில்லை...,
டிக்கெட் வாங்கியவரனாலும்
கால்ஷீட்  வாங்கியவரனாலும்
உன்னை நம்பி தோற்றதில்லை..,

இந்த பெயர் போதும் உனக்கு...,
ஆட்சியும்  அரசியலும்
வேண்டாம் உனக்கு..,
அதனால் உன் பெருமைக்கு 
வரும் இழுக்கு..,

உன் விசில் சத்தத்தில்
நகர்ந்தது ஓர் சிறு  கூட்டம்
அது ஓர் காலம் ...,
உனக்காய் விசில் அடிக்க
இன்றோர் பெருங்கூட்டம்
இது உன் காலம்...,
 திரை உலகின்
முடிசூடா மன்னனே
நீ
வாழிய பல்லாண்டு...,
 .
.

Read more...

என்னடா நடக்குது இங்க..,

>> Friday, December 11, 2009



     பொதுவா விஜய்யை  ஓட்டி எஸ்.எம்.எஸ் வரும் இல்லன மெயில் வரும். இன்னிக்கு எனக்கொரு மெயில் வந்துச்சு அதும் விஜயா ஓட்டி தான்.., ஆன அந்த மெயில்-ஐ உருவாக்க ரொம்ப யோசிச்சு இருப்பாங்க போல.., வேற ஒன்னும் இல்ல ஒரே ஒரு போட்டோ தான்.., பாருங்க நீங்களே அத..,




Read more...

முதலமைச்சருக்கே எதிர் கவித...,

>> Thursday, December 10, 2009



நீ..
நான்..,
நிலவு..,
கடற்க்கரை..,
காதல்..,
கடத்தல் ..,
கல்யாணம்..,
குழந்தை..,

என்றெல்லாம் சொன்னால் உதடுகள் ஒட்டுவதில்லை

இன்பம் ..,
முத்தம்...,
காமம்..,
என்ற சொன்னாள் தான் உதடுகள் கூட ஓட்டுகின்றனவே...

டிஸ்கி:- முதலமைச்சருக்கே எதிர் கவித போடுவோம்ல.., நாங்கெல்லாம் யாரு.., சும்மா derror -ல..,
.
.

Read more...

அநாதை குழந்தை



அது ஊர்வலம் அல்ல...,
ஆனால் அதை ஒத்த ஓர் கூட்டம்..,
அதில் எங்கோ ஓர் மூலையில்
தன்னந்தனியனாய் நான்...,
என்னை இடிக்காமல்
ஒதுங்கி செல்லும் சிலர்..,
காற்றை போல்
உரசி  செல்லும்  சிலர்..,
வன்மையாய் இடித்து விட்டும்
மென்மையாய் இடித்து விட்டும்
வழி கொடுக்கும் சிலர்..,
ஒரு மன்னிப்போ
ஒரு மன்னிப்பின் எதிர்பார்ப்போ
ஒரு அலட்சியமோ
இடித்தலின் குழந்தையாய்  வந்து விழுகிறது..,
தூக்கி  கொஞ்ச ஆளில்லாத குழந்தையாய்
என்னை ஏறிட்டு பார்க்கிறது
பார்வைக்கு பதிலாய்
நானும் ஓர் குழந்தையை பிரசவிக்கிறேன்...,

டிஸ்கி:- புரியாத மாதிரி எழுதினால்  தான் நல்ல எழுத்தாளராம்  புரிஞ்சாலும்  புரியலன்னு பின்னோட்டம் போட்ருங்க.. ஹி.. ஹீ ...
.
.

Read more...

இது என்ன...????

>> Tuesday, December 08, 2009

உனக்கு தெரிந்தவராய்
இருக்கும் என்ற எண்ணத்தில்  எதிரில்
வருவோருக்கெல்லாம் ஒரு இளிப்பை கொடுக்கின்றேன்..,

நீ எப்போதோ
படித்திருப்பாய் என்றே பழைய
புத்தகங்களை எல்லாம் படித்தே கிழிக்கிறேன்..,

நீ தூக்கி
எறிந்த மலராய் இருக்குமோ என
சருகுகளை   எல்லாம் வீட்டுக்கு  வர வைக்கின்றேன்.., 



இது
காதலா...
காமமா ...
பருவ மாற்றமா...
இல்லை..........?????

டிஸ்கி:- கேபிள் அண்ணனின் இந்த கவிதையை படித்த போது தோன்றியதை தட்டி மறுபடி enter தட்டி உள்ளேன் ... அவர் தப்பா எடுத்துக்க மாட்டார் என்ற நம்பிக்கையில்...,
.
.

Read more...

நானும் மொக்கைப்படங்களும் ....

        எப்போது திரை அரங்கத்தை விட்டு வந்தாலும் ஒரு விதமான சந்தோஷம் மனதில் இருக்கும் இந்த படத்தையும் பார்த்து விட்டோமே என்ற ஆச்சர்யமாகவும் இருக்கலாம் இப்படியும் படம் எடுக்கிறார்களே என்ற அதிர்ச்சியாகவும் இருக்கலாம்.நான் திரை அரங்கில் இருந்து அதிகபடியான மகிழ்ச்சியில் வந்த எல்லா படங்களும் மொக்கை படங்களாகவே இருக்கின்றன என்ன செய்ய... அவற்றுள் சிறந்த  5 படங்களை பட்டியல் இட்டுள்ளேன் ... அவை உங்க பார்வைக்கு..,
[ இது என்னுடைய அனுபவத்தின் பகிர்வு மட்டுமே யாரையும் தாக்கும் எண்ணமோ யார் மனதையும் புண்படுத்தும் எண்ணமோ கொண்டு எழுத பட்டது அல்ல ]

5
அ..ஆ...இ..ஈ...

               இந்த ஆண்டின் தொடக்கத்தில் final year ப்ரோஜெச்டிர்க்காக சென்னை வந்திருந்த போது  கையில் காசு குறைந்து விட்டதால் குறைந்த பட்ஜெட்டில் நிறைவான மகிழ்ச்சியை தேடிய போது அதை  கொடுத்த படம்.பார்த்த இடம் தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டர் 15  ருபாய் தான் டிக்கெட்.


அப்படி என்ன நடந்துச்சுனா... எங்க பக்கத்துல ஒருத்தர் உக்காந்து பேசினார் அவரிடம் .
"இந்த படத்திற்கு இசை ஏ.ஆர்.ரகுமான் " , " சரண்யா மோகன் ரஜினியின் மகள் , அரவிந்த் கமலின் மகன்", "பத்து வருடங்களுக்கு பிறகு பிரபு நடிக்கும் படம்" என்று ஏகத்துக்கு அள்ளிவிட அவர் அதை பொய் என்று நிரூபிக்க முயற்சி செய்து தோற்று போனதையும் இப்போது நினைத்தாலும் சிரித்து விடுவேன்.படத்தை பார்க்கவே இல்லை ...

4
 காளை / குருவி :-

காளை...
நண்பர்களுடன் சென்று கமெண்ட் அடித்து கொண்டே பார்த்த போது இன்னொறு செட்டும் எங்களுடன் சேர்ந்து கமெண்ட் குடுக்க செம என்ஜாய்மென்ட் தான் அன்னிக்கு... இடம் தஞ்சை விஜயா தியேட்டர்


படத்தின் தீம்  சாங்கும் எங்கள் எதிர் சாங்கும்..
"வந்துட்டாண்டா வந்துட்டாண்டா காள" - அய்  எருமைமாடு
"உனக்கென்ன இனிமேல வேல" - ஓகே கிளம்புறோம்
படத்தில் இரண்டம் பாகம்  முழுக்க அவ்வளவு சிரிப்பு ... குறிப்பா அந்த பாட்டி தாங்க முடிலடா சாமி..

குருவி:-
ஆறாவது செமஸ்டர் லீவில் தஞ்சாவூர் B.S.N.L-க்கு IPT பொய் கொண்டிருந்தோம் அது முடிந்த அன்று இந்தியானா  ஜோன்ஸ் படத்துக்கு போலாம் என்று கிளம்பினோம் தஞ்சை விஜயா தியேட்டர் -க்கு ஆனால் படத்தை தூக்கி விட்டார்கள்.மணி வேறு இரண்டரை ஆகிவிட்டது எனவே எதாவது படத்துக்கு போகணும்ன்னு முடிவு பண்ணிடதால ஜுபிட்டர் தியேட்டர்-க்கு (விஜயாக்கும்  ஜுபிடர்க்கும் இரண்டு நிமிட நடை பயணம் தான்)   போனோம் குருவிக்கு  தாங்க...


போவதற்குள் படம் போட்டு விட்டார்கள் .உள்ளே நுழைத்த போது டண்டான டர்ணா என ஆடி கொண்டிருந்தார்.காலியாய் இருந்தாய் வரிசைக்குள் நுழைந்த என்னுடைய நண்பன்  அப்படியே நின்று விட்டான்.என்னடான்னு கேட்டா..."மச்சான் எவனோ படத்த பாத்து வாந்தி எடுத்ருக்காண்டா  " இப்படி தான் அன்னிக்கு ஆரம்பித்தோம் அதன் பிறகு நிறைய கமெண்ட்ஸ். எனினும் திரிஷா வரும் காட்சியில் எல்லாம் செம கிளாப்ஸ் .. ஹி.. ஹி..
3

நினைத்தாலே இனிக்கும்:-
கல்லூரி வாழ்கை முடிந்து 3 மாதங்களுக்கு பிறகு அறைத்தோழனின் அக்கா திருமணத்தின் போது 14  நண்பர்கள் சேர்ந்து பார்த்தோம்.இடம் ஈரோட்டில் தேவி அபிராமி  தியேட்டர்.


ஒரே அறையில் இருந்த 8 பேர் கல்லூரி முடிந்து 3 மாதங்களுக்கு பிறகு சந்தித்த போது  சேர்ந்து பாக்கிறோம் அதும் கல்லூரி சம்பந்தப்பட்ட  படத்தை மறக்க முடியாத உணர்வை குடுத்திருக்க வேண்டிய படம். இதும் மறக்க முடியாத படம் தான் ஆனால் ஏற்படுத்திய உணர்வு தான் செம நகைச்சுவை..,பிரியா மணியின் அறிமுக காட்சியில் கொடுக்க தொடங்கிய கமெண்ட்ஸ் ("மச்சான் இவ மூஞ்ச பாத்ததுல எனக்கு டிபன் சாபுட்ற மூடே போயடுசுடா") கடைசி வரை நிக்கவே இல்ல.செம என்ஜாய்மென்ட்  அன்னிக்கும்.
2
சிலம்பாட்டம்...
சென்ற வருடம் நிஷா புயலால் ஒரு  எக்ஸாம் மட்டும் 25  நாள்கள் தள்ளி வைக்க பட அந்த எக்சாமை முடித்து விட்டு நாங்க 7 பேர் படத்துக்கு கிளம்பினோம். தியேட்டர் வாசலில் எங்கள் கல்லூரி மாணவர்கள் நிறைய பேர் இருக்க 32 டிக்கெட்டுக்கள் (எல்லாம் யுவன் செய்த வினை) ஒன்றாக எடுத்து தஞ்சை அருள் தியேட்டர் உள்ளே நுழைந்தோம்.


   படம் பத்தாவது நிமிடமே போர் அடிக்க தொடங்கிவிட கன்னத்தில் கை வைத்த படி உட்கார்ந்து கொண்டே படத்துக்கு கூட்டி வந்தவனை திட்டி கொண்டே இருந்தோம்.அப்போது தான் வந்தது நலம்தானா பாடல் அதில் ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ஸ்டேப் போட்டு இருப்பார் சிம்பு அதற்கு தான் முதல் கமெண்ட் "ஆட்ரா  ராம  ஆடற ராமா ".அங்கே தான் தொடங்கியது. நிறைய பேர் இருந்ததாலோ எக்சாம் முடிந்த சந்தோசமோ தெரிய வில்லை பசங்க பிரிச்சு மேஞ்சுட்டாங்க.கடுப்பாகி போன 7 பேர் கொண்ட சிம்பு ரசிகர்கள் எங்களை திட்டி சவுண்ட் விட நாங்க 32 பேரும் எழுந்த நிக்க அவர்கள் அடங்கி போனார்கள்.படம் முடிந்து வெளியில் வந்த போதும் எங்கள் கல்லூரி மாணவர்கள் நிற்க அவர்களிடம் படத்தின் அருமை பெருமைகளை எடுத்து  சொல்லி அனைவரையும் காப்பற்றினோம்.
1
வீராசாமி...
     நான் எத்தனையோ படங்களுக்கு எதிர்பார்போடு சென்று இருக்கிறேன் ஆனால் எந்த படமும் நான் எதிர் பார்த்ததை ஈடு செய்வது இல்லை. ஆனால் நான் என்ன எதிர் பார்போடு சென்றேனோ அதை முழுதாக ஈடுசெய்த ஒரே படம் இது தான். இடம் தஞ்சை ராஜராஜன் தியேட்டர்.



   நிச்சயமாய் தியேட்டரில் நான் அதிகம் சிரித்தது இந்த படத்துக்கு தான்.படத்தின் விமர்சனத்தை நான் ஏற்கனவே இரண்டு பதிவாக போட்டு விட்டேன்.அவற்றை படிக்க இங்கே சுட்டவும் [முதல் பதிவு  ,  இரண்டாம் பதிவு ].படம் பார்த்த போது கத்தியதால் இரண்டு நாட்களுக்கு சரியாக பேச முடியவில்லை தொண்டை  வலி. அதற்க்கு முன்பு  பேசியதால்  மட்டுமே தொண்டை வலி என்பது கல்லூரி சுற்றுலாவின் போது தான் வந்தது. நாங்கள் அடித்த கமெண்டை பார்த்து முறைத்து கொண்டே இருந்தவர் கடைசி காட்சியில் நாங்கள்  வைத்த ஒப்பாரியை பார்த்து சிரித்து விட்டார்.கடைசியில் நமக்கு தான் வெற்றி...

கொஞ்சம் பெரிய டிஸ்கி:- எல்லாரும் தொடர் பதிவு எழுதுகிறார்கள் நம்மை யாரும் கூப்பிடவில்லையே சரி நாமே ஒரு தொடர் பதிவை ஆரம்பிக்கலாம் என்று நினைத்தேன். வலை பூ தொடங்கி 5 வாரமே ஆன நான் கூப்பிட்டு யார் எழுத போகிறார்கள் என்று யாரையும் கூப்பிட வில்லை.ஆதலால் இத படிப்பவர்கள் அனைவரையுமே நான் அழைக்கிறேன். இதே போல் தங்களின் தியேட்டர் அனுபவத்தையும் பட்டியல் இடுங்கள்(எழுதறதுக்கு முன்னால ஒரு information குடுத்ருங்க ஒரு கணக்கு வைச்சுக்க தான் ...பாக்கலாம் எத்தன பேர் நம்மள மதிக்குராங்கன்னு...)

Read more...

டாக்டர் பட்டம் வாங்க சில வழிகள்

>> Saturday, December 05, 2009

            இப்போ என்னடானா ஆளாளுக்கு டாக்டர் பட்டம் வாங்குறாங்க. பத்தாம்  வகுப்போட படிப்ப விட்டவங்க கூட ஒண்ணாப்பு படிக்கும் போது டாக்டராகி ஊசி போடுவேன் அப்டின்னு தான்  சொல்லி இருப்பீங்க. உங்கள் மனகவலைகளை நீக்கும் பொருட்டு என்னுடைய மூளையை வராட் வராட் என பிராண்டி சில ஐடியா மழைகளை அள்ளி தெளிக்கிறேன்  மிஸ்ஸாகாம கேட்ச் பிடிங்க பாக்கலாம்..,



டாக்டர் பட்டம் வாங்க சில  வழிகள்:-
  •  ஊருக்குள் யாருக்காவது ஜுரம் வந்தால் action 500 சாப்பிடுங்க அப்டின்னு சொல்லணும் வாந்தி எடுத்தார்கள் என்றால் அதை கண்ணை மூடி கொண்டு கையால் பிடித்து விடுங்கள் பொழுது விடிரதுக்குள்ள டாக்டர் ஆகிபுடலாம்.
  • குளிக்கும் போது பாடும் பழக்கம் இருந்தால் இன்னும் வசதி தான்.எப்போதும் "டாக்டர் வாழ்க " என்ற இரண்டு வரிகளை மட்டும் திருப்பி திருப்பி பாடினால் டாக்டராக  அதிக வாய்ப்பு உள்ளதாக சித்தர் சிவராஜ் கூறி உள்ளார்.
  •  டாக்டர் மளிகை கடை,டாக்டர் டீ ஸ்டால் இப்படி எதாவது தொடங்கலாம்..,
  • யாரவது டாக்டரை கரெக்ட் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம் ... உங்க பேருக்கு முன்னால  டாக்டர் வந்துடும்ல 
  • உங்கள் வீடு வாசலில் கேக்கறான் மேக்ரான் university அப்டின்னு போர்டு போட்டு தொடக்க  விழாவுல உங்களுக்கு டாக்டர் பட்டம் குடுக்கலாம்.தலைமை தாங்க உங்க அப்பாவையோ சித்தப்பாவையோ கூப்டுக்கலம்.
  • டாக்டர் விஜய் ரசிகர்மன்றத்தில் சேரலாம். உங்கள் பெயர் ரமேஷ் என்று இருந்தால் டாக்டர் விஜய் ரமேஷ் அப்டின்னு மாத்திக்கலாம் .
  • நீங்க எனக்கு டாக்டர் பட்டம் குடுங்க நா உங்களுக்கு டாக்டர் பட்டம் குடுக்குறேன் .ரெண்டு பேருமே டாக்டர் ஆகிடலாம்.
  • இது எதுமே முடியலனா டாக்டர் பட்டத்துக்கு மார்க்கெட் ரேட் எவ்வளவோ அதை கொடுத்து வாங்கி கொள்ளவும்.
டிஸ்கி:-  இந்த ஐடியாவை பின்பற்றி டாக்டர் ஆவோர்களுக்கு கம்பெனி குறைந்த வாடகையில் மலர் மாலையை மாணிக்க மலையாய் கொடுக்கும்   என்பதை  பெருமிதத்துடன் தெரிவித்து கொள்கிறோம்..
.
.

Read more...

இப்படி கூட ப்ளாக் இருக்கு...

           நேற்றோடு முடிந்தது ஒரு காவியம் .. இதற்கு வழியனுப்பு விழாவோ.. பிரியா விடையோ கொடுக்க கூட முடியாத கல்நெஞ்சக்கரர்கள் நாம் வலை பதிவாளர்கள் .. ஆம் .., ஒரு பதிவாவது போட்டார்களா .., நேற்றும் இல்லை இன்றும் இல்லை.., நான் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்த பயணம் நான் இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்று வளாக தேர்வில் தேர்வாகி பின் பொருளாதார நெருக்கடியால் காத்திருக்க சொல்லி இப்போது கிடைத்த வேளையில் ஒட்டி கொண்டு காலத்தை ஓட்டி கொண்டிருக்கும் இந்த பயணத்தின் நீளத்திற்கு இணையான நீளமும் சோகமும் கொண்ட கொண்ட காவியம் நேற்றோடு  முடிந்து விட்டது.ஆம் கோலங்கள் நேற்றோடு முடிந்து விட்டது ..,



       மணமான புது பெண்ணாக இந்த காவியத்தில் வாழ தொடங்கிய தேவயாணி இரண்டு பெண்களுக்கு தாயாக  இப்போது இருக்கிறார்.கிடைத்த சொந்தங்கள் அது மட்டும் தானா எத்தனையோ பேருக்கு மகளாகவும் ,அக்காவாகவும்,தங்கையாகவும் தினமும் அவர்கள் வீட்டுக்கே சென்றார்கள்.., எப்படி வீட்டிற்கு  சொந்தங்கள் வந்தால் சாப்பிட பொறுமை காப்பர்களோ அந்த பொறுமையை தினம் காட்டினார்கள் நாம் குடும்ப தலைவர்கள் அவ்வளவு  பாசம் தேவயாணி மீது..,

      என்னை மிகவும் பாதித்தவர் தொல்ஸ் மன்னிக்..க்கவும் திருசெல்வம்., என்ன ஒரு பாத்திர படைப்பு புத்தரும் காந்தியும் மறுபடி பிறந்து வந்துவிட்டதாகவே நாம் தாய்குலங்கள் நம்ப தொடங்கினார்களே ..,அதன் திரைக்கதை அமைப்பு என்னை அசரவைத்தது 2 வாரம் கழித்து பார்த்தாலும் 2 மாதம் கழித்து பார்த்தாலும் ஏன் 2 வருடங்களே கழித்து பார்த்தாலும் எந்த குழப்பமும் இல்லாமல் கதையை(?) ரசிக்க முடியும்..,என்னால் கடந்த மூன்று  வருடங்கள் பார்க்க முடியவில்லையே என்று நான் உள்ளுக்குள் அழுவதும் அதனால் ஏற்படும் மௌன வலியும் யாருக்கு புரிய போகிறது..,

      இன்று காலை அலுவலம் வந்ததும் கோலங்கள் என்று தட்டச்சு செய்து கூகிள்-ல் தேடினேன் பிரியா விடையும் வழியனுப்பும் கொடுத்து பதிவுகள் இருக்கும் என்ற நம்பிக்கையில் ஆனால்...(முதல் இரண்டு வரிகளின் கோபத்திற்கு இதுவே காரணம் ). ஆனாலும் அப்போது ஒரு அதிசிய ப்ளாக்கை  கண்டேன் .. கோலங்கள் கடைசி ஒரு வருட பகுதிகள் அனைத்தும் வீடியோ பதிவாக .. அதை பார்க்க இங்கே கிளிக்கவும் ...

டிஸ்கி:- திருச்செல்வம் படம் எடுக்க போறாராம் உன்னை போல் ஒருவனை விட சின்ன படங்கள் (நீளத்தில்) வெளிவருமோ..,
.
.

Read more...

வாழ்க்கை பயணங்கள்

>> Friday, December 04, 2009



தரையில் கை வைத்து
தவழ்ந்துக்கொண்டிருந்த போது
சீருடை அணிந்து
சிங்காரமாய் செல்ல ஆசை வந்தது..,

ஆரவாரமின்றி அமைதியாய்
பள்ளி சென்ற நாட்களில்
பேருந்து படிக்கட்டில்
சில்லிடும் காற்றின் மீது ஆசை வந்தது...,

ஒற்றைக்காலோ ஒற்றைவிரலோ
பிடிமானமாய் கொண்ட பயணங்களில்
நமக்கவே மட்டுமே சுற்றும்
இருசக்கரங்களின் மீது ஆசை வந்தது...,

மழையில் நனையும் போதும்
வெயிலில் காயும் போதும்
ஓசோனில் ஓட்டை போட்டாவது
நம்மை குளிரூட்டும்
பயணங்கள் மீது ஆசை வந்தது...,

தரையெல்லாம் அலுத்துப்போய்
பறக்க ஆசை இருந்தாலும்
தவழவும் சீருடை அணியவும்
படிக்கட்டில் தொங்கவும்
ஆசை வந்து கொண்டு தான் இருக்கிறது..,
எவ்வளவு ஆழத்திற்கு
அழுத்தினாலும் அடுத்த நொடியே
தலை நீட்டும் தக்கை போல..,

டிஸ்கி :- இதுனால தான் வாழ்கை  ஒரு வட்டம் அப்டின்னு இளைய தளபதி டாக்டர் விஜய் சொல்லி இருப்பாரோ....
.
.

Read more...

இன்று உலகமயமாக்கலின் கருப்பு தினம்...

>> Thursday, December 03, 2009

சரியாக 25  ஆண்டுகளுக்கு முன்பு...,
மத்திய பிரதேசத்தின் தலைநகரம் போபாலில் ஏன்? எதற்கு? என்ற எந்த கேள்வியும் இல்லாமல் தூக்கத்திலேயே தொலைந்தன பல உயிர்கள் ...ஆம் அது தான்  உலகின் மிக பெரிய தொழிற்சாலை விபத்து(?)...
      முதலில் 2259  இறந்ததாக அறிவிக்க பட்டது..,பிறகு 3787 என மாநில அரசு அறிவித்தது..,ஆனால் அரசு சாரா இயக்கங்கள் 8000  முதல் 10000 பேர் வரை விபத்து நடந்த 72 மணிநேரங்களுக்குள் இறந்ததாக அறிவித்தனர்..,ஆனால் விபத்து நடந்த நாள் முதல் அதன் பாதிப்புகளால் இறந்தவர்கள் எண்ணிக்கை 25000 -ஐ தாண்டும் என்றும் கண்ணிழந்தவர், மற்றும் நோயுற்றவர், காயமடைந்தவர் இன்றுவரை 400,000 பேர் என்றும்  ஓர்  அறிக்கையில் காணப் படுகிறது!


      இவை மட்டுமா எத்தனையோ ஆடு மாடுகள் , கால்நடைகள்,பறவைகள் என எத்தனை உயிர்கள்.தண்ணீரும் கண்ணீரும் விஷமாகி போனதே ...உலகின் உண்மையான அமுதமான தாய்பாலில் கூட விஷம் கலந்து போனது..,குழந்தைகள் இறந்தே பிறந்தன.., பிறந்த குழந்தைகள் இறந்து போயின..,


      குற்றவாளியாய்   அறிவிக்க பட்ட வாரன் அண்டர்சன்   எங்கு இருக்கிறான் என்று 25 ஆண்டுகளை தேடி வருகிறது சி.பி.ஐ (தூ..).பலமுறை பிடி வாரன்ட் கொடுபதோடு திருப்தி பட்டுகொண்டன இந்திய நீதிமன்றங்கள்.அவன் நியூ யோர்க்கில் உள்ள Hamptons என்ற பகுதில் இருப்பதாக தொலை காட்சியில் காட்டிய போதும் அவன் இருக்கும் இடத்தை விரைவில் கண்டு பிடித்து வருவதாக இரண்டு அரசாங்கங்களும் அறிவித்தனர்  வெட்கம் கெட்டவர்கள். 
        பியர்ல் ஹார்பரில் ஆயிரகனக்கனோர் இறந்தபோது ஜப்பானில் அணுகுண்டு வீசி தான் வெறியை தீர்ந்து கொண்டது அமெரிக்கா. பின்னாளில் வர்த்தக மையம் தகர்க்க பட்ட போதும் ஆப்கானிஸ்தானை குண்டுகளால் சல்லடை ஆக்கி சந்தோசப்பட்டது..,ஆனால் இந்தியாவோ அமெரிக்காவிடம் 3.3 பில்லியன் டாலர் கேட்டது பேரம் பேச அழைத்த அமெரிக்காவிடம் பேரம் பேசி 470 மில்லியன் டாலர் வாங்கியதுடன் கோபத்தை தீர்த்து கொண்டது. அவர்களிடம் கண்டிப்பை  காட்டினால் பின்னாளில் மற்ற வெளிநாட்டு கம்பெனிகள் வர தயங்குமே என்ற தொலைநோக்கு பார்வை தான் வேறு ஏதும் அல்ல...,


       வாங்கிய பணத்தை உரியவர்களிடம் கொண்டு சேர்க்கும் பழக்கம் தான் நாம் அரசியல்வாதிகளுக்கு எப்போதுமே இருந்தது இல்லையே. நிறைய பேருக்கு நிவாரணம் வழங்க வில்லை  அப்படியே வழங்க பட்டாலும் ஒரு உயிர்க்கு 25000 -க்கு மேல் வழங்கவில்லையாம்.ஒரு இந்திய உயிரின் மதிப்பு அவ்வளவு தானா.., அப்படி மாண்டு போனவர்கள் செய்த தவறு தான் என்ன இந்தியனாய் பிறந்தது தானோ...
.
.

Read more...

படித்தபோது நம்ப வில்லை ஆனால்???

>> Wednesday, December 02, 2009

               நேற்று எனக்கொரு ஈமெயில் வந்தது அதை முடிந்த அளவு தமிழ் படுத்தி உள்ளேன்.இதை படிக்கும் போது என்னை போலவே நம்பிக்கை இல்லாமல் தான் நீங்களும்  இருப்பீர்கள் ஆனால் முற்சி செய்து பாருங்கள்...



          இது கடவுள் நம்பிக்கை பற்றிய பதிவு அல்ல.. கம்ப்யூட்டர் சம்பந்தபட்டது..., விண்டோஸ் பயன்படுத்துபவர்கள் மட்டும்...
சோதனை ஒன்று:-
     உங்கள்  கணிணியில் எத்தனையோ folder உருவாக்கியும் அளித்தும் இருப்பீர்கள் ஆனால் CON என்ற பெயரில் ஒரு folder  உருவாக்கி பாருங்கள் முடிந்தால். கண்டிப்பாக உருவாக்க முடியாது. இதற்கான காரணத்தை யாராலும் விளக்க முடியவில்லை...
என்ன உருவாக்க முடிந்ததா...

சோதனை இரண்டு :-
            முதலில் ஒரு  empty notepad file ஓபன் பண்ணி கொள்ளவும். அதில் Bush hid the facts என்ற வாசகத்தை டைப் பண்ணவும் .அதான் பிறகு நீங்கள் விரும்பும் பெயரில் save பண்ணவும் . மீண்டும் அந்த பைலை ஓபன் பண்ணுங்கள் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்...

சோதனை மூன்று  :-
இது தான் ஹை லைட்...
ஒரு MS - WORD  டாகுமென்ட் ஓபன் பண்ணி கொள்ளுங்கள்..
=rand (200, 99)  இதை டைப் பண்ணவும்..,
பிறகு enter தட்டவும் பிறகு நடப்பதை நீங்களே பாருங்கள்..


உங்கள் கருத்தகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்....
.
.

 





      

Read more...

ஜெயமோகனை ரசிப்பவர்கள் மட்டும் பேரறிவு கொண்டவர்களா???

>> Tuesday, December 01, 2009



        சில வருடங்களுக்கு முன்னால் ஜெயமோகன் அவர்கள் தனது ப்ளாகில் "தொப்பி" மற்றும் "திலகம்" என்ற தலைப்புகளில் எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி ஆகியவர்களை பற்றி எழுதி இருந்தது அனைவரும் அறிந்ததே ..அது வெளிவந்த காலத்தில் வலைப்பூக்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்ற போதும் ஆனந்த விகடனில் அவை வந்ததால் அதை படித்து சிரித்து இருக்கிறேன்.தற்போது வலைபூக்களுக்கு அறிமுகமான பின்பு கணினி மற்றும் செல்லில் browse பண்ணும் போது எதாவது வலைபூவிற்கு சென்றால் அதில் உள்ள எல்லா பதிவுகளையும் படிப்பது வழக்கமாகி விட்டது.அப்படி படித்து கொண்டிருத்த போது ஒரு வலைப்பூவில் ஜெயமோகனின் இந்த கட்டுரைகளுக்கு பாராட்டும் ஆனந்த விகடனுக்கு கண்டனுமும் தெரிவிக்க பட்டிருந்தது.இந்த மேட்டரில்  எந்த பிரச்சனையும் இல்லை ஆனா அதில் சொல்லப்பட்ட  சில கருத்துகளில் தான் எனக்கு சில குழப்பங்கள் .
அந்த பதிவில் தெரிவிக்க  பட்ட  வார்த்தைகள் மாறி இருக்கலாம் ஆனால் கருத்து அதே...
" ஜெயமோகனின் இந்த கட்டுரைகள் அந்தனம் என்ற இலக்கிய வகையை சேர்ந்தது , அந்தனம் என்பது நக்கல் தொனியை ஒத்த புத்திசாலித்தனமான நகைச்சுவை ஆகும்.., இந்த வகையில் தமிழில் இலக்கியங்கள் மிகவும் குறைவு. ''போட நாயே" வகையான கவுண்டமணி காமடியை ரசிப்பவர்களால்  இதை ரசிக்க முடியாது.இலக்கிய சிற்றறிவு கொண்ட பாலசுப்ரமணியம்  போன்றவர்களால் இதை ரசிக்க முடியாமல் போனதில் எந்த ஆச்சர்யமும் இல்லை"
           இந்த கருத்தில் தான் எனக்கு குழப்பங்கள் கவுண்டமணியை ரசிப்பவர்கள் சிற்றறிவு கொண்டவர்கள் என்று எந்த அளவீடில் சொல்லுகிறார். அப்படியானால் அவரை ரசித்த என்னை போன்று தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலனவர்கள் சிற்றறிவு கொண்டவர்களா???ஜெயமோகனை ரசிப்பவர்கள் மட்டும் பேரறிவு கொண்டவர்களா??? . சரி அப்படியே இருந்து விட்டு போகட்டும் நான் சிற்றறிவு கொண்டவன் தான் ஒத்துகொள்கிறேன்.என்னை போன்றவர்களை சிற்றறிவு கொண்டவர்கள் என்று சொல்வதற்கு காரணம் அந்த நகைச்சுவை காட்சிகளில் ஒருவரின் உடல் அமைப்பையோ , நிறத்தையோ, அல்லது அறிவையோ கிண்டல் செய்து இருப்பார். அதாவது யாருடைய மனதாவது புண்படுத்த பட்டிருக்கும்.அங்கு மட்டும் என்ன வாழ்கிறது  மேற்கூறிய இரண்டு பதிவிலும் ஒன்றில் எம்.ஜி.ஆரின் குரல் அல்லது உச்சரிப்பு கிண்டல் செய்ய பட்டுள்ளது மற்றொன்றில் சிவாஜியின் மிகையான நடிப்பு கிண்டல் செய்ய பட்டுள்ளது . இது மட்டும் எப்படி புத்திசாலித்தனமான நகைச்சுவை ஆகும்.


என்னை பொறுத்த வரையில் நகைச்சுவையில் புத்திசாலித்தனமான என்ற ஒன்றே கிடையாது. எல்லா விஷயங்களிலும் புத்தியை பயன்படுத்தினால்  யாராலும் சிரிக்கவே முடியாது..நான் சிறு வயதில் இருந்து சிரித்த அனைத்து நிகழ்வையும் நினைத்து பார்கையில் அவை எல்லாமே எதாவது ஒரு வகையில் யாருடைய மனதையாவது புண்படுத்தி  உள்ளது. யார் மனதையும் புண் படுத்த நகைச்சுவை என்று ஒன்று கிடையாது என்பதே என்னுடைய கருத்தாகும்.அப்படி இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்...
   இதில் பதிவு செய்யப்பட்டவை எல்லாம் என்னுடைய சொந்த கருத்துகளே .. உங்கள் கருத்தையும் பதிவு செய்யவும். அப்புறம்..., இலக்கிய பேரறிவு கொண்ட யாரவது இதை படிக்க நேர்ந்தால் ஒரு பெரிய பின்னூட்டமோ அல்லது எதிர்  பதிவோ போடுமாறு கேட்டு கொள்கிறேன்.அப்படி செய்வதன் மூலம் இலக்கிய அறிவு சிறிது கூட இல்லாத என்னை போன்ற சிற்றறிவு கொண்ட பாமரர்கள் இலக்கியத்திற்கு பேரறிவு கொண்டவர்களால் தரப்படும்  முன்னுரையின் முதல் எழுத்தையாவது பார்க்கும் பாக்கியம் பெறுவார்கள்....
.
.

Read more...
Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP