இன்று நவம்பர் 7 2009....... 55 வருடங்களுக்கு முன்னால் பரமகுடியில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது ... அந்த குழந்தையின் பெற்றோர்கள் அதற்கு கமல் ஹாசன் என்று பெயரிட்டனர்...
5 வருடங்களுக்கு பின் ....
களத்தூர் கண்ணம்மா என்று ஒரு படம் ..அதில் 5 வயது சிறுவனாக அறிமுகம்..
இந்தியாவிலேயே ஏன் உலக சினிமா வரலாற்றிலேயே சினிமா சார்பில்லாத 5 வயது சிறுவன் அறிமுகமான போது இன்னார் நடிக்கும் படம் என்று படத்தின் பெயர் போடும் முன்பு போட்டிருக்க மாட்டார்கள். அப்படி போட்ட ஒரே படம் களத்தூர் கண்ணம்மா.. போட பட்ட ஒரே நடிகர் நமது உலக நாயகன் கமல் ஹாசன்..
அன்று தொடங்கிய கலைபயணம் இன்று வரை நல்ல படங்களைத் தர வேண்டும், உலகத் தரம் உள்ளூர் சினிமாவிலும் வியாபிக்க வேண்டும், நவீனத் தொழிட்நுட்பங்களை ஆரத் தழுவிக் கொள்ள வேண்டும், உருப்படியான சினிமாவுக்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்று தீவிரமாக பாடுபடும் மிக மிக அரிதான தமிழ் சினிமாக்காரர் கமல் ஹாசன் .
இது கமல்ஹாசனின் திரையுலக பொன்விழா. வயதிலோ 55, செயலிலோ 25 அளவில் அசுர வேகத்தில் இருக்கும் கமல்ஹாசன், சினிமாவை மட்டுமே நேசிப்பவர், சுவாசிப்பவர்.தனது பிறந்த நாளை பெரிய ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல்,
ரசிகர்கள் செய்யும் சில நற்பணிகளுடன் கொண்டாடுவது கமல்ஹாஸன் வழக்கம். ரத்ததானம், ஊனமுற்றோருக்கு உபகரணங்கள், மாணவர்களுக்கு
கல்வி உதவிகள் இப்படித்தான் பெரும்பாலும் அவரது உதவிகள் அமையும். இந்த ஆண்டும் அப்படியே.
இந்தப் பொன் விழா பிறந்த நாளில் அவருக்கு மகிழ்ச்சி அளிக்கும் விஷயம், அவரது உன்னைப்போல் ஒருவன் படத்தின்
வெற்றி . இந்தியிலிருந்து ரீமேக் செய்யப்பட்ட, படம்தான் என்றாலும், இந்த ஒன்றரை மணிநேர படத்தை
மக்கள் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக் கொண்டது, மேலும் சில புதிய முயற்சிகளில் கமல் உற்சாகமாக ஈடுபட உதவியிருக்கிறது. இதுவரை சாதித்தவை ஒன்றுமே இல்லை என்றும், இனி சாதிக்கப் போகிறவைதான் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அடக்கமாக கூறி அடுத்தடுத்து சாதனைகளுக்கு தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும் இந்த உதாரணக் கலைஞனை வாழ்த்துவோம்.
இன்று உலக நாயகனுக்கு மட்டும் அல்ல மற்ற திரை நட்சத்திரங்களுக்கும் பிறந்த நாள் அவர்களையும் வாழ்த்துவோம்...
வெங்கட் பிரபு..டாப் 10 இயக்குனர்களுள் ஒருவர். இரண்டே படங்கள் தான் இயக்கி இருந்தாலும் அவைகளின் வெற்றி இவரை ஒரு யூத் இகானகவே மாற்றி இருக்கிறது.. எனக்கு இவரிடம் பிடித்த விஷயம் காப்பி அடித்தாலும் அதை மேடையிலையே ஒத்து கொள்ளும் தைரியம்(நிறைய பேரிடம் காண முடியாதது). இவர் பல்லாண்டு வாழ்ந்து நெறைய வித்யாசமான படங்கள் தர வேண்டும் என்று வாழ்த்துவோம்..
நந்திதா தாஸ் ... அழகி , கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் மேம்பட்ட நடிப்பை வெளி படுத்தி இருந்தாலும் த்ரிஷா,நமீதா,ஸ்ரேயா போன்றவர்களின் திறமைக்கு ஈடுகொடுக்க முடியாததால் தமிழ் சினிமாவை விட்டு காணமல் போனவர்.. இவரும் நடிப்புலகில் பல சாதனை புரிய வாழ்த்துவோம்..
அனுஷ்கா.. இவரை ரெண்டு படத்தில் பார்த்து இருந்தாலும் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான அருந்ததி மூலம் தான் அனைவர்க்கும் தெரியும் .. இப்பொது வேட்டைக்காரன் , சிங்கம் போன்ற கலை படங்களில் தன்னுடைய திறமை காட்டி தமன்னா , நயந்தாரா போன்றவர்களுடன் மல்லு கட்ட இருக்கிறார்..இவரும் சிறப்பான ஆண்டு அமைய வாழ்த்துவோம்...
Read more...