என் கதையும் எதிர் வினையும்...,
>> Thursday, December 31, 2009
நான் இந்த கதையை எழுதி என்னுடைய வலைப்பூவில் வெளியிட்ட பிறகு என்னுடைய சாட் லிஸ்டில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் என்னுடைய கதையை படித்து விட்டு கருத்து சொல்லுமாறு அழைப்பு விடுத்தேன் முதல் எழுத்து எழுதிய குழந்தை அனைவருக்கும் எழுதிக்காட்டுவது போல .., கிட்டத்தட்ட அனைவரும் படித்து விட்டு கருத்து சொன்னார்கள்.., கிட்ட தட்ட அனைவரும் அதில் இருந்த குறைகளை சுட்டி காட்டினார்கள் ..,The Identity போன்ற படங்களை பார்த்து விட்டு விளக்கமாக விமர்சனம் போடும் ஹாலிவுட் பாலா,எல்லா படங்களையும் பார்த்து விட்டு விமர்சிக்கும் ஜெட்லி உட்பட பலரும் சொன்னது புரியவில்லை.எனக்கு தெரிந்து நா சொல்ல வந்ததை முழுமையாக புரிந்து கொண்டது நான் மட்டுமே..,
அப்புறம் இது நான் லினியர் கதை அப்படின்னு நெனச்சேன் அதும் இல்லையாம் கேபிள் அண்ணன் சொன்னார். நிகழ்வு கதைகளை எழுதி பழகுமாறு போஸ்டன் ஸ்ரீராம் சொன்னார்.இந்த கருத்துக்கள் என்னை கண்டிப்பாய் ஊக்க படுத்தும் மற்றும் இந்த கருத்துக்களால் எனக்கு பெரிதாய் ஒன்றும் வருத்தம் இல்லை முதல் அடி எடுத்து வைக்கும் குழந்தையும் முதல் முறை மிதிவண்டி ஏறும் சிறுவனும் முதல் முறை காதலிக்கும் விடலையும் தவறி விழுவதில் அதிர்ச்சி அடைய வேண்டியதில்லை விழாமல் இருந்தால் வேண்டுமானால் ஆச்சர்யப்படலாம்.எனக்கு ஊக்கம் கொடுத்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதோடு என்னுடைய அடுத்த கதை குறைந்தது உங்களுக்கு புரியும் படி இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்...
போன வரியுடன் முடித்து விடலாம் என்று தான் நினைத்தேன். ஆனால் இத்தனை ஆக்கப்பூர்வமான கருத்துக்களோடு இன்னொன்றும் வந்தது.., ஆணை திறந்ததும் ஆற்றில் மிதக்கும் மலத்தை போல "என்ன ம******************************
கோவி கண்ணனை பார்த்து கத்துக்கோடா,சுமஜ்லாவை பார்த்து கத்துக்கோடா,சந்தனமுல்லையை பார்த்து கத்துகோடா, விதூஷைப்பார்த்து கத்துக்க்கோடா,அதிஷாவைபார்த்து கத்துக்கோடா, நர்சிம்மை பார்த்து கத்துக்கோடா,டோமர்,
கதை எலுதுறானாம் வெள்று,முதல்ல படி,அப்புறம் எலுது,எல்லாம் எடுத்தவுடனே இப்புடி *************************************** ???" . * போட பட்ட பகுதிகளை பிரசுகரிக்க விரும்ப வில்லை. எனக்கே தெரியும் மேல்குறிப்பிட்ட எவர் போலவும் இப்பொழுது என்னால் எழுத முடியாது அதை பண்பான வார்த்தைகளால் சொல்லி இருக்கலாம் .ஆகவே இந்த பதிவையும் படிக்குமாறு அனைவருக்கும் சுட்டியை அனுப்ப போகிறேன்.., நீங்களே சொல்லுங்கள்..,இப்பொழுது எனக்கு எழுத தகுதி இல்லை என்றால் சொல்லுங்கள் அந்த தகுதி வரும் போது எழுதி கொள்கிறேன் இப்போது பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொள்கிறேன்...
.
.

18 comments:
நீங்க ஏன் மத்தவங்கள பத்தி கவலை படுறேங்க.. எல்லா நிலையிலும் பயணிப்பது படைப்பாளியின் கடமை.. உங்கள் பயணம் தொடர்க.. வருமாண்டு வெற்றி தேடிவர இல்லாத கடவுளை வேண்டுகிறேன் ~நட்புடன்~
ஆனந்த் உன் எழுத்து உனக்கு உறுத்தாமல் இருக்குமேயானால், நீ சொல்ல வந்ததை சொன்ன நிறைவு இருக்குமேயானால் தட்ஸ் இட். இதனால் எல்லாம் தொய்ந்து போய்விட வேண்டாம். ஜஸ்ட் கோ அஹெட் மேன். நீ தான் படைப்பாளி, நீ தான் முதல் வாசகன். முதல் வாசகன் சரி இல்லை எனில் அப்போது யோசிக்கலாம். பாஸிடிவ்வாக. புத்தாண்டு வாழ்த்துகள்.
கதை நல்லா தான் இருக்கு ! டோண்டு ஒர்ரி பீ ஹாப்பி ! நெறைய டிரை பண்ணுங்க ...க்காலி எங்க போயிடப் போகுது கதை ! ஒருநாள் புடிச்சிடலாம் !வாழ்த்துகள்
அட விடுங்க சார். சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களா நாம ?. எதோ நம்ம திருப்திக்கு எழுதுறோம். அவ்வளவே. நமக்கு தெரிஞ்ச 4 நண்பர்கள், உறவினர்கள் படிக்கத்தான் ப்ளாக் என எண்ணுங்கள். டென்ஷன் வராது.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
//இப்பொழுது எனக்கு எழுத தகுதி இல்லை என்றால் சொல்லுங்கள் அந்த தகுதி வரும் போது எழுதி கொள்கிறேன் இப்போது பதிவுகளை படிப்பதோடு நிறுத்தி கொள்கிறேன்...//
இது ரஜினி சொன்ன ஒரு குட்டிக்கதை,
நான்கு தவளைகள் ஒரு மலையின் மீது ஏறுவதற்கு தயாராகின, சுற்றிலும் பலபேர் இருந்தார்கள். தவளைகள் மலை ஏறத்தொடங்கியதும் சிலர் கூறினார்கள் "இதுகளுக்கு அழிவு மலையிலே தான்" என்று, உடனே பயத்திலே ஒரு தவளை இறங்கிவிட்டது. சிறிது தூரம் சென்றபின் இன்னொருவர் "போகும் வழியில் இவற்றினது கதை முடியப்போகிறது" என்று கூறினார், உடனே இன்னொரு தவளையும் கீழிறங்கியது. அதேபோல வேறொருவரின் கருத்தை கேட்டு மூன்றாவது தவளையும் கீழிறங்கியது. ஆனால் யார் என்ன சொன்னாலும் கேட்காமல் நான்காவது தவளை மாத்திரம் மலை உச்சியை சென்றடைந்தது. பின்னர் கேலேவந்த தவளையிடம் "இவளவுபேர் எதிர்மறையாக கூறியும் எப்படி துணிந்து மேலே சென்றாய்?" என்று கேட்டதற்கு அந்த தவளை கூறிய பதில் "எனக்கு காது கேட்காது" என்பதுதான்.
புரிந்திருக்குமென்று நினைக்கிறேன்.....
அந்த மாதிரி பின்னூட்டம் போட்டவர்களுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்!, அந்த அனானி(யா)!? குறிப்பிட்ட பதிவர்களில் ஓரிருவர் தவிர மற்றவர்கள் நம்மை போல் மொக்கை சாமிகள் தான்! எவனோ பொழுது போகாத பொறம்போக்கு அப்படி பின்னூட்டம் போட்ருக்குன்னு நினைச்சிகிட்டு வழக்கம் போல நீங்க எழுதுங்க தலைவா!
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
அது நிச்சயம் நான் -லீனியர் கிடையாதுங்க. பேரலல் ஃப்ளாஷ்பேக் -ன்னு சொல்லலாம்-னு நினைக்கிறேன்.
ஆனா.. அதிலும்.. ரெண்டு மழை நாளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு சொல்லிட்டீங்க.
கதை எங்களுக்கு புரியாதததைப் பத்தியெல்லாம் கவலைப் படாதீங்க. வீராச்சாமி மாதிரி காம்ப்ளிகேட்டட் கதையையே... தாறுமாறா எக்ஸ்ப்ளெய்ன் பண்ணிட்டீங்க. இதெல்லாம் ஒரு மேட்டரா. ஐடெண்டிடி எல்லாம் பிச்சை வாங்கனும். :) :)
அட என்னங்க நீங்க, தக்காளி எடுத்து அடிச்சா போடா உன்***க்காளின்னு போயிட்டே இருக்கணும்...
நம்ம தலைவர் விவேக் சொன்னது...
நீங்க எழுதுங்க, நான் படிக்கறேன்....
உங்கள மாதிரி ஆளுங்கள பாத்துதான் நானெல்லாம் எழுதறேன்....
kavalappadaadheenga...
Happy New year 2010 my Friend . . . .
I'm new to the blogging world.DO see it and comment.
And if you want to vote,go to tamilish.com
http://illuminati8.blogspot.com/
அன்பின் ஆனந்த்
கவலை வேண்டாம் - தூற்றுவார் தூற்றலும் போற்றுவார் போற்றலும் போகட்டும் அவனுக்கே என பலனை எதிர் பாராமல் கடமையைச் செய்க
கதை படித்து க்அருத்து கூறுகிறேன்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்
அருமை நண்பா,
அந்த முதுகெலும்பில்லாத பெயரில்லா அனானிக்கு போய் நீங்கள் இப்படி வருத்தம் கொள்ளவேண்டாம்,
அனானி கமெண்ட் போட விடாதீர்கள்.
எழுதுதும் படிப்பதும் அவரவர் விருப்பம்.
எனக்கு தோணும் போது படிப்பேன்,அல்லது பின்னூட்டுவேன், அப்படி இருங்கள்,தொடர்ந்து கற்பனை வளம் சுரக்கையில் எழுதுங்கள்.
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புத்தாண்டு வாழ்த்துக்கள்
the first step faliure is the key stone to sucess..its in every moment...
but the the bloggers world the passion leads to sucess with caring & comments.
@Sivaji Sankar
நன்றி நண்பா,..
@வானம்பாடிகள்
தங்கள் அறிவுரைக்கு நன்றி ஐயா...,
@rajan ரதமநலன்
நன்றி.., நண்பரே..,
@பின்னோக்கி
நன்றி.. நன்றி..,
@எப்பூடி ...
புரிகிறது நண்பா..., நன்றி..,
@வால்பையன்
நன்றி தல.., கண்டனத்துக்கும் வாழ்த்துக்கும்...
@ஹாலிவுட் பாலா
ஹம்ம்.. நானும் நெனச்சேன் பேரலல் ஸ்டோரின்னு .., சரி விடுங்க பாத்துக்கலாம்...
@Karthik விஸ்வநாதன்
சரி தல.., ஆதரவிற்கு நன்றி..
@அநோன்ய்மௌஸ்
நன்றி.. நண்பா..
@இல்லுமினடி
நன்றி.. நண்பரே..,
@cheena (சீனா)
நன்றி தலைவா..,
@கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்
நன்றி.. நண்பரே..,
@புலவன் புலிகேசி
நன்றி வாழ்த்துக்களுடன்...
@அஷ்வின் நாரயனசாமி
நன்றி . நன்றி..,
தேவையில்லாத சந்தேகம்...
எல்லரையும் எப்பவும் திருப்தி படுத்த முடியாது...
ரஜினியோட குட்டிக் கதை பின்னூட்டம் உங்களுக்கு எல்லாத்தையும் புரிய வெச்சிருக்கும் என்று நினைக்கிறேன் நண்பா..
சேர்ந்து உயர்வோம் 2010ல் :-)
இதுவும் கடந்து போகும்...
Post a Comment