ரெண்டு படம் போதும் ஹாலிவுட் பிச்ச வாங்க...,

>> Wednesday, December 30, 2009


     
  நேற்று தான் ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் பார்த்தேன்.நிச்சயமாய் ஒரு பிரமாண்டமான படம் தான்.ஆனால் தமிழ் படமா என்பது தான் கொஞ்சம் சந்தேகமாக உள்ளது.படம் ஆரம்பிக்கும் போது ரீமா சென்னும் ஒரு பெண்ணும்  ஆங்கிலத்தில் எதோ கெட்ட வார்த்தைகளாக பேசுகிறார்கள்.அப்புறம் தான் தமிழ் சினிமா காணாத பிரமாண்டங்கள் எல்லாம் வரிசையாக வருகின்றன கார்த்தி,ரீமா,ஆண்ட்ரியா என மூன்று பேரும் பாலைவனத்தில் நடந்து போகிறார்கள் , இரண்டு படைகள் மோதி கொள்கின்றன .., என்ன  இதெல்லாம் மம்மி படத்துல பாத்தது போலவே இருக்கா   வாய்ல அடி.., வாய்ல அடி..,வாய்ல அடி.., அவனவன் ஹாலிவுட்-ல ஆயிரம் கோடில எடுக்குறத  எல்லாம் நம்ம ஆளுங்க முப்பது கோடில எடுக்குறாங்க. இப்படி மட்டும் நாலு படம் வந்துச்சுன்னு வைச்சுக்க ஹாலிவுட் என்ன ஹாலிவுட் ஜாலிவுட்யே நம்ம கிட்ட பிச்ச தான் வாங்கணும்.., இப்ப போய் மம்மில  பாத்தேன் தாடில பாத்தேன்னு சொல்லிக்கிட்டு ..,


        அப்புறம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதல் முறையா இன்னொன்னும் நடக்க போகுது என்னான்னு நீங்க கி-போர்ட ப்ராண்டுறது  நல்லா தெரியுது..,நம்ம வருங்கால முதல்வர் சரத் குமார் ஜக்குபாய் படத்துல ஸ்ரேயாவுக்கு அப்பாவ நடிச்சிருக்காராம் இப்போ சொல்லுங்க .., ஹாலிவுட்,ஜாலிவுட்,பாலிவுட்,காலிவுட் இப்டி எத்தன வுட் இருக்கு எதுலயாவது இப்டி ஒரு படம் வந்துருக்கா ..,என்னது  இது எதோ டேக்கன் அப்படிங்குற இங்கிலீஷ் படத்துலேந்து சுட்டதா .., மறுபடியும் வாய்ல அடி.., வாய்ல அடி.., இது நாளா தான் தமிழ் நாடு உருப்படமாட்டேன்குது .., நா சொல்றத மட்டும் எழுதி வைச்சுக்கோ ..,இது மாதிரி படம் நாலு வேண்டாம் ரெண்டு படம் போதும் ஹாலிவுட் என்ன ஹாலிவுட் ஜாலிவுட்யே நம்ம கிட்ட பிச்ச தான் வாங்கணும்..,

டிஸ்கி:- ஆமா .., இந்த ஜாலிவுட் எங்க இருக்குனு தெரியுமா???????
.
.

13 comments:

Sivaji Sankar December 30, 2009 5:36 PM  

//இப்படி மட்டும் நாலு படம் வந்துச்சுன்னு வைச்சுக்க ஹாலிவுட் என்ன ஹாலிவுட் ஜாலிவுட்யே நம்ம கிட்ட பிச்ச தான் வாங்கணும்..//ஹ ஹ ஹ ஹா..

//நம்ம வருங்கால முதல்வர் சரத் குமார் ஜக்குபாய்//
உங்களுக்கு எல்லாமே காமெடி தான்.... அவ்வ்வ்வவ்.....

அறிவு GV December 30, 2009 5:49 PM  

'ஆ.ஒ' ட்ரைலர் பாத்துட்டு அசந்துட்டேன் நானும். மேக்கிங்கும் அப்டியே இருந்தா நல்லா தான் இருக்கும். அவனவன் தமிழ் படத்தையே காப்பி அடிக்கும்போது, இது கண்டிப்பா ஒரு வித்தியாசமான முயற்சி தான். பாராட்டலாம்.
'Taken' தான் ஜக்குபாய் ஆ..? அது நல்லா படமாச்சே, தமிழ்ல எப்டி இருக்க போவுதோ..?

தர்ஷன் December 30, 2009 6:10 PM  

காட்சியமைப்புகள் மம்மியை ஞாபகப்படுத்துவது உண்மை இருந்தாலும் கதையில் ஏதும் மாற்றங்கள் இருக்கலாம் அல்லவா
செல்வாவில் நம்பிக்கை வைத்துப் பார்ப்போமே

க.பாலாசி December 30, 2009 7:01 PM  

//ஹாலிவுட் ஜாலிவுட்யே நம்ம கிட்ட பிச்ச தான் வாங்கணும்..,//

அதுதான் உண்மை...

பின்னோக்கி December 30, 2009 10:22 PM  

ஆயிரத்தில் ஒருவன் டிரெயிலர் பயங்கரமா இருக்கு.

ஜக்குபாய் படத்த எல்லாம் பாலோ பண்ணிக்கிட்டு, என்ன ஆச்சு உங்களுக்கு

எப்பூடி ... December 30, 2009 11:04 PM  

எனக்கு ஆயிரத்தில் ஒருவனை விட பையாவிலேயே அதிக நம்பிக்கை.

வானம்பாடிகள் December 31, 2009 2:50 AM  

ரொம்ப அலப்பறை அதிகமாயிண்டே போறது:))

புலவன் புலிகேசி December 31, 2009 5:03 AM  

இதுதான் வஞ்ச புகழ்ச்சி அணி ன்னு சொல்லுவோம் தமிழ்ல

அன்புடன் மலிக்கா December 31, 2009 4:39 PM  

வாழ்க வளர்க பல்லாண்டு

புத்தாண்டு வாழ்த்துக்கள்

Sangkavi December 31, 2009 5:31 PM  

//நம்ம வருங்கால முதல்வர் சரத்குமார்//

)))))?

புத்தாண்டு வாழ்த்துக்கள்....

பேநா மூடி December 31, 2009 6:28 PM  

@Sivaji Sankar
அப்படியே பழகிட்டேன் நண்பா...

@அன்பு
வருகைக்கு நன்றி...

@அறிவு GV
நீங்க எப்புடி நினைக்குறேன்களோ அப்புடி தான் இருக்கும்...

@தர்ஷன்
எனக்கும் செல்வா மீது நம்பிக்கை உள்ளது .., ஆனால் இது வைரமுத்து பேசியதற்கு எதிர் வினை...

@க.பாலாசி
ஐயையோ எப்போ இருந்து இப்புடி ...,

@பின்னோக்கி
மொக்க படங்கள் தான் எப்பவும் என்னோட favourite ..,

@எப்பூடி ...
பார்ப்போம் இன்னும் ரெண்டு மாசத்துல தெரிஞ்சுடும்...

@வானம்பாடிகள்
ஹா ஹா.. எப்பூடி..

@புலவன் புலிகேசி
அப்போ நானும் இலக்கியவாதி தான்...

@அன்புடன் மலிக்கா
நன்றி.., புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...,

@சங்கவி
நன்றி .. புத்தாண்டு வாழ்த்துக்கள்...

Dinesh January 28, 2010 8:01 AM  

பார்க்க பிரெஞ்சு படம் "வசாபி "
ஆதாரம் :- http://cablesankar.blogspot.com/2010/01/wasabi-2002.html

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP