நீ... நல்லவனா கெட்டவனா...

>> Thursday, November 26, 2009





நீ...
நல்லவனா கெட்டவனா...
எமக்கு தெரியாது...

நீ...
தமிழின தலைவனா...
இல்லை தான் குடும்பமே
தமிழினம் என்போரா...
எமக்கு தெரியாது...

நீ..
கொள்கைக்காக செய்தாயா..
இல்லை கொலை
வெறிபிடித்து செய்தாயா...
எமக்கு தெரியாது...

நீ...
மண்மீது இருக்கிறாயோ...
இல்லை விண்ணோடு சென்றாயோ...
எமக்கு தெரியாது...


ஆனால்...
ஓர் கோடை காலத்தின் மாலை நேரம் ..
நீண்ட நேரமாய் பேருந்து வராததால்
காத்திருந்த கூட்டத்தை நோக்கி ஓர் குரல்
"பிரபாகரன கொன்னுடாங்க பஸ்லாம் வராது " என்று...
கருதருத்த களைப்போடு காத்திருத்த கிழவி ஒருத்தி
சட்டென்று சொன்னாள்
"என்ன ராசா சொல்லுற அவனெல்லாம்
அம்புட்டு சாமநியத்துல கொன்னுட முடியுமா
அப்டி பண்ணி புட்டா ஊரே கொந்தளிச்சிடாது "
மேற்கூறிய கேள்விகளுக்கான பதில்
எமக்கு தெரிய தொடங்கியது...

6 comments:

வானம்பாடிகள் November 26, 2009 1:47 PM  

ஹா. அசத்திட்டாய்யா கிழவி. நீங்களும்தான்.

Anonymous,  November 26, 2009 7:56 PM  

pullarikka vachchiddeenga....anthakkilaviya solla sollunga oru vaazhththu.athu pothum antha manithanukku.!!!raavan rajhkumar-jaffna

tamiluthayam November 26, 2009 9:55 PM  

பாட்டிக்கு தெரிந்தது, பெரியவருக்கு தெரியவில்லையே.

பேநா மூடி November 27, 2009 12:14 PM  

@வானம்பாடிகள்
நன்றி அய்யா...

@raavan rajhkumar-jaffna
சொல்கிறேன் நண்பா...

@ tamiluthayam

பணமும் பதவியும் கண்ணை மறைக்கிறதே...

பிரியமுடன்...வசந்த் November 27, 2009 5:36 PM  

கிழவியின் வார்த்தைகள் உள் மன வெளிப்பாடு

அருமைப்பா...

LOSHAN November 27, 2009 5:58 PM  

எல்லா தலைவர்களும் இந்த இரு கேள்விகளாலும் பரிசீலிக்கப் பட்டவர்களே..

ஆனால் கிழவி சொன்ன வார்த்தைகள் ஆழமானவை..

Post a Comment

திட்ட கூடாது.... அழுதுடுவேன்... I am பாவம் ..

Related Posts with Thumbnails
Your Ad Here

  © Blogger template Webnolia by Ourblogtemplates.com 2009

Back to TOP