செம்மொழி மாநாட்டுல கவித போட்டி வைக்குராங்கலாம் நமக்கு தான் கவித எழுத வராதே சரி அதனால உங்களுக்கு கவிதை எழுதுவது எப்படி என்ற பாடத்தை மட்டும் எடுக்க திட்டமிட்டு உள்ளேன்...,
•முதலில் எதாவது உண்மையான கவிஞரின் கவிதையை ஒரு மணி நேரம் படிக்கவும்.
•கொஞ்சம் நேரம் படுத்து தூங்கவும் .
•எழுந்த பிறகு எந்த கவிதையெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ அதெற்கெல்லாம் பத்தாவது பிள்ளை போல் விளக்கம் எழுதவும்.
•பிறகு கண்ணை மூடி கொள்ளவும் .
•இது தான் முக்கியமான கட்டம் மூடிய கண்ணை திறக்காமல் அந்த விளக்க கட்டுரையில் மௌஸில் ஒரு கிளிக் அப்புறம் என்ட்டர் பட்டனை ஒரு கிளிக்.இதை 15 நிமிடத்திற்கு செய்யவும்.
•கண்ணை திறந்து பார்க்கவும் எந்த வரியிலாவது நாலு வார்த்தைக்கு மேல் இருந்தால் அதை இரண்டு அல்லது மூன்று பாகங்களாக உடைக்கவும்.
•ஒரு முறை படித்து பார்க்கவும் எந்த வார்த்தையாவது புரிந்தால் அந்த வார்த்தைகளை உடனடியாய் யோசனை இன்றி அழிக்கவும்.
•இதோ ஒரு சூடான கவிதை ரெடி..,
டிஸ்கி 1 .௦0 :- ௧விதையில் பின் நவீனத்துவம் தான் இப்ப பேமஸ் ஆகவே உங்கள் விதையில் பின் நவீனத்துவத்தை புகுத்தவும். அது என்ன என்று தெரியாதவர்கள் தெரிந்த கெட்ட வார்த்தைகளை சேர்த்துக்கொள்ளவும் ..,பின் நவீனத்துவத்தில் முதல் கட்டுடைத்தல் இது தான் கவிதை எழுத பேனாவோ பேப்பரோ எடுக்க கூடாது.., கணினி மட்டுமே பயன் படுத்தவும்.
டிஸ்கி 1 .1 :- இது ஒரு மீள் பதிவு சில மாற்றங்களுடன் ..., அட்ஜஸ்ட் பண்ணிக்கொள்ளவும்...,
பின் குறிப்பு:- கணிணியில் என்ட்டர் பட்டன் சரியாய் வேலை செய்கிறதா என்பதை இரண்டு முறை சரி பார்க்கவும்..,
.
.
Read more...